Posts

Showing posts with the label Piyar Prema Kalyanam

பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லரை வெளியிட்ட Netflix india

Image
மாப்பிள்ளை மணமகள் வீட்டுக்கு வருகிறார்… காத்திருக்கும் மிகப்பெரிய ட்விஸ்ட்! திருமணத்துக்குப் பிறகு மணமகள் புகுந்த வீட்டுக்குச் செல்வதுதான் வழக்கம். ஆனால், மணமகளுக்குப் பதிலாக மாப்பிள்ளை தனது பெட்டிகளை எடுத்துக்கொண்டு மணமகள் வீட்டுக்குச் சென்றால் என்ன ஆகும்? இந்த வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியுள்ள ‘பியார் பிரேமா கல்யாணம்’ திரைப்படத்தின் டிரெய்லரை Netflix இன்று வெளியிட்டுள்ளது. இயக்குநர் இளன் இயக்கி, முதன்முறையாக கதாநாயகனாகவும் அறிமுகமாகும் இப்படம், வரும் ஆகஸ்ட் 21-ம் தேதி Netflix-ல் வெளியாகிறது. டிரெய்லரில், பவி கதாபாத்திரத்தில் சான்வி மேக்னா  நடித்துள்ளார். தன்னம்பிக்கையும் தனித்துவமான சிந்தனையும் கொண்ட பவி, தான் வளர்ந்த வீட்டை விட்டு வெளியேற விரும்பாத ஒரு இன்ஃப்ளூயன்சர். இதனால், திருமணத்திற்குப் பிறகு அவரது கணவரான இளன், பவியின் வீட்டிற்கே குடியேறுகிறார். அங்கிருந்து தொடங்குகிறது ஒரு வித்தியாசமான குடும்ப வாழ்க்கை. புதிய வீட்டில் முதல் சந்திப்பு முதல், குடும்பத்தினருடனான உரசல்கள், எதிர்பாராத சம்பவங்கள், கலகலப்பான தருணங்கள் என ஒவ்வொரு நாளும் புதிய அனுபவமாக மாறு...

பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லர் வெளியீட்டு விழா!

Image
இயக்குநர் இளன் முதன்முறையாக கதாநாயகனாக அறிமுகமாகும் ‘பியார் பிரேமா கல்யாணம்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று படக்குழுவினர் முன்னிலையில் நடைபெற்றது. ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இப்படத்திற்கு  இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.  இன்று நடைபெற்ற டிரெய்லர் வெளியீட்டு நிகழ்வில் படக்குழுவினருடன், திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டு படக்குழுவை வாழ்த்தினர்.  இந்நிகழ்வினில்.., இயக்குநர் வெற்றிமாறன் பேசியதாவது,  ஒரு நடிகராக இருந்து இயக்குநராக மாறுவதற்கே நிறைய தைரியம் வேண்டும். அந்தத் தைரியம் இளனிடம் இருக்கிறது. அவருக்கும், அவருடைய ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். இப்படம் டிரெய்லர் நன்றாக இருக்கிறது.  இந்தப் படம் நிறைய ஃபன் ஆன விஷயங்களையும், சில நெருக்கமான தனிப்பட்ட விஷயங்களையும் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்க வைக்கிறது. இந்தப் படம் அனைவருக்கும் பிடித்து, நல்ல வெற்றியைப் பெற வேண்டும் என்று நம்புகிறேன். மீண்டும் படக்குழுவினருக்கும், Netflix-க்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். ட...

“ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறதா? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறதா?” புதிய கோணத்தில் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட ‘பியார் பிரேமா கல்யாணம்’ புரமோ !

Image
“ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறது? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறது?” சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கான விதிகளை தலைகீழாக மாற்றும் இந்த ஜோடியை சந்திக்க தயாராகுங்கள்! காதல், திருமணம், அதற்குப் பிறகான வாழ்க்கை என அனைத்தையும் புதுக்கோணத்தில் சொல்ல வரும் “ பியார்  பிரேமா கல்யாணம்” ஒரு வித்தியாசமான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ளது. இயக்குநர் இளன், இந்தப் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அவரது இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த ரொமான்டிக் குடும்ப பொழுதுபோக்கு திரைப்படத்தில் சான்வீ மேக்னா கதாநாயகியாக நடிக்கிறார். சமூக வலைதளங்களில் பிரபலமான இன்ஃப்ளூயன்சர் பவி என்ற கதாபாத்திரத்தில் சான்வீ மேக்னா நடிக்கிறார். திருமணத்திற்குப் பிறகும் தனது பெற்றோர் வீட்டை விட்டுச் செல்ல மறுக்கிறார். அதனால், வழக்கத்திற்கு மாறாக அவரது கணவரான இளன், மனைவியின் வீட்டிற்கே குடி பெயர்கிறார். இதன் பின்னர் தொடங்கும் குடும்ப கலாட்டா, கலாச்சார மோதல்கள், உறவுகளின் சிக்கல்கள் மற்றும் உணர்வுபூர்வமான தருணங்கள் என சிரிப்பும், சிந்தனையும் கலந்த பயணமாக படம் நகர்கிறது. இறுதியில், “சந்தோ...