Posts

Showing posts with the label Saarukesi

சாருகேசி திரைவிமர்சனம்

Image
ஒரு இசை பாடகரின் வாழ்க்கைப் பதிவு இந்த சாருகேசி கதையின் நாயகனான ஓய் ஜி மகேந்திரா ஒரு பெரும் இசைப்பாடகர். அவருக்கு திடீரென அல்சைமர் எனும் மறதிநோய் ஏற்படுகிறது. அவரது மகனுக்கு ஓய் ஜி மகேந்திரா மீது பெரிய மரியாதை ஏதுமில்லை. ரம்யா பாண்டியனை காதலிக்கும் அவருக்கு கதையில் ஒரு இருக்கிறது. மேலும் அவருக்கும் ஓய் ஜி மகேந்திராவிற்கும் உள்ள பந்தத்தில் ஒரு ட்விஸ்டும் உண்டு. இச்சூழலில் அல்சைமர் நோயிலிருக்கும் ஓய் ஜி மகேந்திரா வாழ்வை பிறர் வாயிலாக நாம் அறிய முடிகிறது. முடிவில் நோய்மையிலிருந்து ஓய் ஜி மகேந்திரா மீண்டாரா? என்பதாக கதை விரிகிறது ஓய் ஜி மகேந்திரா தனது தேர்ந்த அனுபவத்தை நடிப்பில் வார்த்துள்ளார். “வந்து போவதே நம் வேலை..வழி நடத்துவது அவன் லீலை” என்ற வரிகளை அவர் பாடுகையில் நமது ஜீவன் கொஞ்சூண்டு உருகிப்போய்விடுகிறது. சமுத்திரக்கனி, சத்யராஜ் இருவரும் கெஸ்ட் ரோலில் தங்களது பெஸ்டை கொடுத்துள்ளனர். சுஹாசினி தலைவாசல் விஜய் இருவரும் கொடுத்த வேலையைச் செய்துள்ளனர். ரம்யா பாண்டியன் நடிப்பும் ஒகே படத்தில் கர்நாடிக் இசை பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தேவா நிச்சயமாக இப்படத்தில் தேனிசையை தந்துள...