Posts

Showing posts from August, 2026

சிக்மா போட்டோ இந்தியா – பி.பி. போட்டோகிராபி இணைந்து உலக புகைப்பட தினக் கொண்டாட்டம்

Image
“Frames of Belonging: Photography, Community & Connection” என்ற தலைப்பில், சிக்மா போட்டோ இந்தியா மற்றும் பி.பி. போட்டோகிராபி இணைந்து உலக புகைப்பட தினத்தை சிறப்பாகக் கொண்டாடின. புகைப்படக் கலை தொடர்பான அர்த்தமுள்ள அனுபவங்கள், கலந்துரையாடல்கள் மற்றும் சமூக அடிப்படையிலான நிகழ்ச்சிகளை ஆண்டு முழுவதும் நடத்தும் புதிய கூட்டாண்மையின் முதல் நிகழ்ச்சியாக இந்தக் கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் புகைப்படக் கலைஞர்கள், கலைஞர்கள், புகைப்படத் துறை கல்வியாளர்கள் மற்றும் புகைப்பட ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். புகைப்படத்தின் வளர்ந்து வரும் பங்கு மற்றும் வலுவான படைப்பாற்றல் சமூகங்களை உருவாக்குவதன் அவசியம் குறித்து நிகழ்வில் விரிவாகப் பேசப்பட்டது. கலைஞர் கலந்துரையாடல் நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக ஹரிஹரன் கோபால் தலைமையில் கலைஞர் கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் அவர் தனது புகைப்படக் கலைப் பயணம் மற்றும் படைப்புமுறை குறித்து பகிர்ந்து கொண்டார். மேலும், நிகழ்வில் கலந்து கொள்ள முடியாத புகைப்படக் கலைஞர் ரம்யா ஸ்ரீராம் அவர்களின் புகைப்படப் பணிகள் குறித்தும் அவர் தனது கருத...

ஒன் மேன் - திரைவிமர்சனம்

Image
என்ன மாதிரி வேலைபாடு 👏 எது செய்தாலும் அதில் தனித்துவம் இருக்கணும்’ என நினைக்கும் படைப்பாளி சங்ககிரி ராஜ்குமார். அவரது மிகப்பெரிய முயற்சி. இந்த ஒன் படம். படத்தில் கேமராவிற்கு முன்வரும் ஆட்கள் எல்லோரும் அவர் ஒருவரே.. படத்தில் கேமராவிற்கு பின்னால் இருக்கும் அனைத்து டெக்னிஷியன்ஸும் அவர் ஒருவரே! இப்படியான அட்டகாசமான முயற்சிக்காகவே முதலில் வாழ்த்துகள் கதை? மல்டி டேலண்ட் உள்ள நான்கு இளைஞர்கள் தங்களுக்கு வழங்கவுள்ள விருதுகளை வாங்கச்செல்கிறார்கள். அது லாக்டவுன் அறிவிக்கவுள்ள நேரம். அவர்கள் செல்லும் பாதையில் சில பல தடைகள் ஏற்பட்டு ஒரு முக்கியமான லேபிற்கு சென்று விடுகிறார்கள். அங்கு அவர்கள் செய்யும் ஒரு காரியத்தால், உலகில் அனைவரும் மறைந்து விடுகிறார்கள். இதன் தீர்வு என்ன? என்பதே படத்தின் கதை! (ஆக்‌ஷுவலா இது ஹாலிவுட்ல வேறலெவல்ல வொர்க் ஆகிற கன்டென்ட்) நடிகராக எல்லாக் கேரக்டராகவும் வரும் சங்கரகிரி ராஜ்குமார் சிறப்பான நடிப்பைக் கொடுத்துள்ளார். ஒவ்வொரு கேரக்டருக்குமான வித்தியாசத்தை கெட்டப்பில் மட்டுமில்லாது பாடிலாங்வேஜுலும் காட்டியது சூப்பர். படத்திற்கு தேவையான கேமரா சவுண்ட் எபெக்ட், உள்ள...

மொத ராத்திரி - திரைப்பட விமர்சனம்

Image
 திரைக்கதை மன்னன் பாக்கியராஜ் ஸ்டைலில் ஒரு படம். ஹீரோ ரிஷிகாந்த் துபாயிலிருந்து வருகிறார். வந்தவரிடம் ஒரு பெண்ணைக்காட்டி கல்யாணம் பண்ணச் சொல்கிறது குடும்பம். அவருக்கு கல்யாணத்தில் இஷ்டமில்லை. அதேபோல் மணப்பெண்ணான அனிஷ்மா அனில்குமாருக்கும் கல்யாணத்தில் இஷ்டமில்லை. மேலும் மொத ராத்திரிக்கு முன்பாக தன் காதலனோடு ஓடிப்போகவும் திட்டம் போடுகிறார். அனிஷ்மாவின் காதலன் ஒரு மங்குனி இளைஞனாக இருக்கிறார் என்பது வேறலெவல் ட்விஸ்ட்! இந்தக் களேபரத்தில் மொத ராத்திரி என்னானது? என்பதே படத்தின் கதை ரிஷிகாந்த் கதைக்குள் தன்னை முழுமையாக பொருத்திக்கொண்டு சிறப்பாக நடித்துள்ளார். ஒன் வுமன் ஆர்மியாக படத்தில் மாஸ் காட்டியுள்ளார் நாயகி அனிஷ்மா! ஒவ்வொரு சீனிலும் அவரது பெர்பாமன்ஸ் பெரும் பிளஸ். அப்துல் லீ, வெங்கடேஷ், பக்ஸ், சேத்தன் உள்ளிட்ட எல்லாக் கேரக்டர்களும் தரமாக நடித்துள்ளனர். படத்தின் இயக்குநர் ராஜா கருப்பசாமியின் கேரக்டரும் நடிப்பும் செம்ம! படத்தின் இசையமைப்பாளர் பரத் சங்கர் கதையின் போக்கை உணர்ந்து இசைத்துள்ளார். பாடல்களும் ஒகே ரகம். ஒளிப்பதிவாளர் சுரேந்திரன் பரஞ்ஜோதி நேர்த்தியான ப்ரேமிங்-ஐ வைத்...

பூந்தமல்லியில் ஜஸ்’ ஆன்கோவின் (Jus’ Onco) 4-வது புற்றுநோய் சிகிச்சை மையம் திறப்பு தரமான புற்றுநோய் சிகிச்சையை குறைந்த செலவில் மக்களுக்கு அருகில் கொண்டு சேர்க்கும் புதிய முயற்சி

Image
தரமான புற்றுநோய் சிகிச்சையை அனைவருக்கும் எளிதாகவும், குறைந்த செலவிலும் வழங்குவதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டுவரும் ஜஸ்’ ஆன்கோ (Jus’ Onco), தனது நான்காவது புற்றுநோய் சிகிச்சை மையத்தை இன்று சென்னையின் பூந்தமல்லியில் திறந்து வைத்துள்ளது. இதன் மூலம் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு நிபுணத்துவமான புற்றுநோய் சிகிச்சையை இன்னும் அருகில் கொண்டு சேர்க்கும் தனது முயற்சியை ஜஸ்’ ஆன்கோ மேலும் வலுப்படுத்தியுள்ளது. பூந்தமல்லி நெடுஞ்சாலை, லக்ஷ்மணஞ்சாவடி, JKJ Towers-ல் அமைந்துள்ள இந்த புதிய மையத்தின் திறப்பு விழா, KM Health Care Hospitals நிறுவனத்தின் நிறுவனர் டாக்டர் கே. பாலசுப்ரமணியன், நடிகரும் இயக்குநருமான திரு. சந்திரா லட்சுமணன், மற்றும் Sun News சிறப்பு செய்தியாளர் திரு. ராஜா திருவேங்கடம் ஆகியோரின் முன்னிலையில் நடைபெற்றது. விழாவின் ஒரு பகுதியாக புற்றுநோயை வென்று மீண்டவர்களுக்கு பாராட்டு வழங்கப்பட்டது. புற்றுநோயை எதிர்கொண்டு வெற்றி பெற்ற அவர்களின் தைரியம், மன உறுதி மற்றும் நம்பிக்கையைப் போற்றும் வகையி...

விக்கல்ஸ் விக்ரம் மற்றும் ஆரத்தி கிருஷ்ணாவின் ‘லைட்வெயிட்,பேபி!’ படத்தின் கலகலப்பான ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

Image
விரைவில் வெளியாகவுள்ள தமிழ் காதல் பொழுதுபோக்கு திரைப்படமான *‘லைட்வெயிட், பேபி!’* படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை தயாரிப்பு நிறுவனம் ஹிதா ஸ்டூடியோஸ் வெளியிட்டுள்ளது. இதில் ஸ்டாண்ட்-அப் காமெடியன் விக்கல்ஸ் விக்ரம் மற்றும் ஃபிட்னஸ் பிரபலமான ஆரத்தி கிருஷ்ணா முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் ஃபர்ஸ்ட் லுக், காதல், நகைச்சுவை மற்றும் போட்டித்தன்மை கொண்ட ஃபிட்னஸ் உலகை வித்தியாசமான முறையில் இணைத்து, திரைப்படத்தின் தனித்துவமான உலகத்தை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது. வண்ணமயமான ஜிம் பின்னணியில் அமைந்துள்ள இந்த போஸ்டரில், விளையாட்டுத்தனமான சூழலில் விக்கல்ஸ் விக்ரமும், தனது ஃபிட்னஸ் உலகின் இயல்பான தோற்றத்தில் ஆரத்தி கிருஷ்ணாவும் இடம்பெற்றுள்ளனர். இருவரின் மாறுபட்ட குணாதிசயங்கள், படத்தில் ரசிகர்கள் எதிர்பார்க்கக்கூடிய நகைச்சுவை, காதல், ரசாயனம் மற்றும் குழப்பமான சம்பவங்களை சுட்டிக்காட்டுகின்றன. படத்தின் தலைப்பை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த போஸ்டர், கதையின் இலகுவான மற்றும் நவீனமான அணுகுமுறையையும் வெளிப்படுத்துகிறது. விக்கல்ஸ் விக்ரமுக்கு, *‘லைட்வெய...

துல்கர் சல்மானின் “ஐ ம் கேம்” ( I Am Game) செப்டம்பர் 3-ம் தேதி ரிலீஸ் ஆகிறது – பிரம்மாண்ட உலகளாவிய வெளியீட்டுக்கு திட்டம்!

Image
துல்கர் சல்மான் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள  “ஐ ம் கேம்”’ திரைப்படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் வரும் செப்டம்பர் 3, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. பிரம்மாண்டமான உலகளாவிய வெளியீடாக இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆகஸ்ட் 20 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்னும் அதிகமான திரையரங்குகள் மற்றும் சர்வதேச சந்தைகளில் படத்தை வெளியிடுவதற்காக, ரிலீஸ் தேதி இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. துல்கர் சல்மானின் Wayfarer Films நிறுவனம் தயாரித்துள்ள இந்த பிரம்மாண்ட ஃபேண்டஸி த்ரில்லர், அவரது திரைப்பயணத்தில் மிகப்பெரிய படங்களில் ஒன்றாக உருவாகியுள்ளது. இப்படத்தை நஹாஸ் ஹிதாயத் இயக்கியுள்ளார். துல்கர் சல்மான் மற்றும் ஜோம் வர்கீஸ் இணைந்து Wayfarer Films பேனரில் தயாரித்துள்ள இப்படத்தின் திரைக்கதையை சஜீர் பாபா, இஸ்மாயில் அபு பக்கர் மற்றும் பிலால் மொய்து ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். வசனங்களை சஜீர் பாபா, ஆதர்ஷ் சுகுமாரன் மற்றும் ஷபாஸ...

அசோக் செல்வன் நடிக்கும் 'அன்பில் அவன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர் வெளியீடு!

Image
அசோக் செல்வன் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்து வரும் புதிய திரைப்படத்திற்கு, 'அன்பில் அவன்' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகி வரும் 'அன்பில் அவன்' திரைப்படத்தில் அசோக் செல்வன், பிரீத்தி முகுந்தன், சபு மோன், அப்துல் சமத், கதிர் பாலு, மஹா டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இப்படத்தின் கதையை இயக்குநர் விக்னேஷ் ராஜா எழுத, கௌதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்ய, கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.‌ படத்தொகுப்பு பணிகளை ஆர்.கே செல்வா மேற்கொள்ள, மணிகண்டன் ஸ்ரீனிவாசன் கலை இயக்கத்தை கவனித்திருக்கிறார். பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய அழகான காதல் கதையாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஐங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனம் மற்றும் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் கே. கருணா மூர்த்தி- அசோக் செல்வன் - அபிநயா செல்வம்- ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இத்திரைப்படத்தை எதிர்வரும் செப்டம்பர் மாதம் வெளியிட திட்டமிடப்பட்டு வரும் தருணத்தில...

பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லரை வெளியிட்ட Netflix india

Image
மாப்பிள்ளை மணமகள் வீட்டுக்கு வருகிறார்… காத்திருக்கும் மிகப்பெரிய ட்விஸ்ட்! திருமணத்துக்குப் பிறகு மணமகள் புகுந்த வீட்டுக்குச் செல்வதுதான் வழக்கம். ஆனால், மணமகளுக்குப் பதிலாக மாப்பிள்ளை தனது பெட்டிகளை எடுத்துக்கொண்டு மணமகள் வீட்டுக்குச் சென்றால் என்ன ஆகும்? இந்த வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியுள்ள ‘பியார் பிரேமா கல்யாணம்’ திரைப்படத்தின் டிரெய்லரை Netflix இன்று வெளியிட்டுள்ளது. இயக்குநர் இளன் இயக்கி, முதன்முறையாக கதாநாயகனாகவும் அறிமுகமாகும் இப்படம், வரும் ஆகஸ்ட் 21-ம் தேதி Netflix-ல் வெளியாகிறது. டிரெய்லரில், பவி கதாபாத்திரத்தில் சான்வி மேக்னா  நடித்துள்ளார். தன்னம்பிக்கையும் தனித்துவமான சிந்தனையும் கொண்ட பவி, தான் வளர்ந்த வீட்டை விட்டு வெளியேற விரும்பாத ஒரு இன்ஃப்ளூயன்சர். இதனால், திருமணத்திற்குப் பிறகு அவரது கணவரான இளன், பவியின் வீட்டிற்கே குடியேறுகிறார். அங்கிருந்து தொடங்குகிறது ஒரு வித்தியாசமான குடும்ப வாழ்க்கை. புதிய வீட்டில் முதல் சந்திப்பு முதல், குடும்பத்தினருடனான உரசல்கள், எதிர்பாராத சம்பவங்கள், கலகலப்பான தருணங்கள் என ஒவ்வொரு நாளும் புதிய அனுபவமாக மாறு...

பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லர் வெளியீட்டு விழா!

Image
இயக்குநர் இளன் முதன்முறையாக கதாநாயகனாக அறிமுகமாகும் ‘பியார் பிரேமா கல்யாணம்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று படக்குழுவினர் முன்னிலையில் நடைபெற்றது. ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இப்படத்திற்கு  இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.  இன்று நடைபெற்ற டிரெய்லர் வெளியீட்டு நிகழ்வில் படக்குழுவினருடன், திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டு படக்குழுவை வாழ்த்தினர்.  இந்நிகழ்வினில்.., இயக்குநர் வெற்றிமாறன் பேசியதாவது,  ஒரு நடிகராக இருந்து இயக்குநராக மாறுவதற்கே நிறைய தைரியம் வேண்டும். அந்தத் தைரியம் இளனிடம் இருக்கிறது. அவருக்கும், அவருடைய ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். இப்படம் டிரெய்லர் நன்றாக இருக்கிறது.  இந்தப் படம் நிறைய ஃபன் ஆன விஷயங்களையும், சில நெருக்கமான தனிப்பட்ட விஷயங்களையும் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்க வைக்கிறது. இந்தப் படம் அனைவருக்கும் பிடித்து, நல்ல வெற்றியைப் பெற வேண்டும் என்று நம்புகிறேன். மீண்டும் படக்குழுவினருக்கும், Netflix-க்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். ட...

அட்லி வழங்கும், விஜய் சேதுபதி நடிக்கும் ‘பத்தா’ – அக்டோபர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியீடு!

Image
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘பத்தா’.Star Studio18 மற்றும் பிரபல இயக்குநர் அட்லி வழங்கும் இப்படத்தை, A for Apple Studios மற்றும் Cine 1 Studios Production இணைந்து தயாரிக்கிறது இப்படம் வரும் அக்டோபர் 1ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. மூன்றாவது முறையாக இணையும் விஜய் சேதுபதி – பாலாஜி தரணிதரன் கூட்டணி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘பத்தா’ திரைப்படத்தின் மூலம் இயக்குநர் பாலாஜி தரணிதரன் மற்றும் விஜய் சேதுபதி மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். ஏற்கனவே இருவரது கூட்டணியில் வெளியான “நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்” மற்றும் “சீதக்காதி” திரைப்படங்கள் ரசிகர்களிடம் தனித்துவமான வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. விஜய் சேதுபதியின் இயல்பான நடிப்புத் திறனையும், தனித்துவமான கதை சொல்லல் பாணியையும் கொண்ட பாலாஜி தரணிதரனின் இயக்கமும் இணைவதால், ‘பத்தா’ வித்தியாசமான திரைப்பட அனு...

ஊடகங்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்த தி ஒன் சூர்யாவின் 'விஸ்வநாத் & சன்ஸ்' படக்குழு !

Image
சிதாரா என்டர்டெயின்மென்ட் & ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தி ஒன் 'சூர்யா' நடிப்பில் தயாராகி ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியான விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் - பிரம்மாண்டமான வெற்றியை பெற்று ரசிகர்களின் பேராதரவுடன் வசூலில் சாதனை படைத்து வருகிறது. இதனால் மகிழ்ச்சியடைந்த படக்குழுவினர், படத்தை வெற்றி பெறச் செய்த ரசிகர்களுக்கும், ஊடகங்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.  இதனை முன்னிட்டு, சென்னையில் படக்குழுவினர் பங்கேற்ற பிரத்யேக நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விநியோகஸ்தர் ஹரிதா லிங்கசாமி, நடிகர் சுனில் ரெட்டி, பாடலாசிரியர் பாலாஜி வேணுகோபால், நடிகைகள் ராதிகா சரத்குமார், பவானி ஸ்ரீ, மமீதா பைஜூ, இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார், இயக்குநர் வெங்கி அட்லூரி ஆகியோர் கலந்து கொண்டனர்.  இந்நிகழ்வில் பாடலாசிரியர் பாலாஜி வேணுகோபால் பேசுகையில்,  '' கடந்த 23 வருடங்களாக பேச்சு தான் என் வாழ்க்கையாக இருந்திருக்கிறது. ஏனெனில் நான் ஒரு ஆர்ஜே (RJ). இதுவரை ஆயிரக்கணக்கான மேடை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளேன்.‌ திரைப்...

விஷ்வாநாதன் & சன்ஸ் - விமர்சனம்

Image
கதை சுருக்கம்  துப்பாக்கி சுடும் போட்டியில் பெரும் சாதனைகளை நிகழ்த்தும் 42 வயது பேச்சுலர் பிஸ்னெஸ்மேன் சூர்யா. அவருக்கு அம்மா ராதிகா என்றால் உயிர். ராதிகாவின் ஒரே ஆசை சூர்யாவிற்கு திருமணம் செய்து பார்க்க வேண்டும் என்பது. But சூர்யா திருமணம் வேண்டாம் என்ற முடிவில் தீர்மானமாக இருக்கிறார். அதற்கு ஒரு வேல்யூ ரீசனும் இருக்கிறது. அதனால் அம்மா ஆசைக்காக சூர்யா தனது உயிரணுவை வேறோர் பெண்ணின் கருமுட்டையில் வைத்து ஒரு மகனை தருவித்து தன் அம்மாவிற்கு தருகிறார். சூர்யாவின் மகனை வயிற்றில் சுமந்து பெற்ற பெண்… சாட்சாத் நம்ம மமிதா பைஜு தான். வாடகைத் தாய் ஒரிஜினல் தாய் ஆக நடக்கும் முயற்சியும் முடிவும் தான் படத்தின் மீதிக்கதை சூர்யா ஆகச்சிறப்பான நடிப்பால் நம் மனதில் நீக்கமற நிறைகிறார். ராதிகா சம்பந்தப்பட்ட ஒரு காட்சியில் சூர்யாவின் எமோஷ்னல் நடிப்பு நம் கண்களை குளமாக்குகிறது. மமிதா பைஜு படத்தை தன் துறுதுறு நடிப்பால் தூக்கிச் சுமக்கிறார். அவரின் க்யூட்னெஸ் தான் படத்தின் பெரு எனர்ஜி எனலாம். நம் தாய்கிழவி ராதிகா காட்டியிருக்கும் அனுபவ நடிப்பு படத்தின் உயிர்த்துடிப்பு. ரவிபாண்டன் உள்ளிட்ட பல கேர...

சாந்தனு பாக்யராஜ் - சீமான் இணைந்து நடிக்கும் “ஒரு கைதியின் டைரி” பட மோஷன் போஸ்டரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டார்!

Image
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சுசீந்திரன் இயக்கத்தில் சாந்தனு பாக்யராஜ் நாயகனாக நடிக்கும் ‘ஒரு கைதியின் டைரி’ திரைப்படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு முன்னிலையில் வெளியிட்டார். இந்த நிகழ்வு படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. KRG Kannan Ravi Group சார்பில் கண்ணன் ரவி மற்றும் தீபக் ரவி இணைந்து தயாரிக்கும் இப்படத்தில், சாந்தனு பாக்யராஜ் நாயகனாகவும், சீமான் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். இப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைக்கிறார். மதுரையை பின்னணியாகக் கொண்டு உருவாகும் இப்படம், அப்பா – மகன் உறவை மையமாகக் கொண்ட கதையாக உருவாகிறது. குடும்ப உறவுகளின் உணர்வுகளுடன் ஆக்சன் மற்றும் விறுவிறுப்பான சம்பவங்களும் இணைந்த கதைக்களமாக இப்படம் அமையவுள்ளது. மதுரையின் வாழ்வியலும், அப்பா – மகன் உறவில் ஏற்படும் உணர்வுப்பூர்வமான மாற்றங்களும் கதையின் முக்கிய அம்சங்களாக இடம்பெறுகின்றன. வெளியாகியுள்ள மோஷன் போஸ்டரில் சீமான் மற்றும் சாந்தனுவின் தோற்றங்கள், பின்னணியில் இடம்பெற்றுள்ள மதுரை கோயில் கோபுரங்கள், கையெழுத்துப் பிரதியைப் போன்ற வடிவமைப்பு ஆகியவை படத்தின் கதைக்களம் ...

நூறு சாமி திரைப்படம் ZEE5-இல் 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்தது; ரசிகர்களின் இதயங்களை வென்றுள்ளது

Image
தேசியம், ஆகஸ்ட் , 2026: விஜய் ஆண்டனி நடித்துள்ள உணர்வுபூர்வமான குடும்பத் திரைப்படமான நூறு சாமி, ZEE5-இல் 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்துள்ளது. இது அதன் டிஜிட்டல் பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளது. 2026 ஆகஸ்ட் 7 அன்று தமிழ் ZEE5-இல் பிரீமியர் ஆன இந்த திரைப்படம், பார்வையாளர்களின் மனதில் ஆழமான உணர்வுப் பிணைப்பை உருவாக்கியுள்ளது. தாய்மை, துணைநிலை, குடும்பம் மற்றும் இரண்டாவது வாய்ப்புகளைப் பற்றிய மனிதநேயமிக்க கதையை பல மொழிகளில் உள்ள பார்வையாளர்களிடம் கொண்டு சென்றுள்ளது. உண்மை சம்பவங்களால் ஈர்க்கப்பட்டு, சசி எழுதி இயக்கியுள்ள நூறு சாமி, காதல் மற்றும் குடும்பத்தை மிகவும் தனிப்பட்ட கோணத்தில் அணுகும் மனதைத் தொடும் கதையாகும். தனது வாழ்க்கையின் பல ஆண்டுகளை குடும்பத்திற்காக அர்ப்பணித்த ஒரு தாயின் பயணமே இதன் மையக் கருத்தாகும். வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை தொடங்கி, ஒரு துணையைத் தேட விரும்பும் அவளது முடிவு, குடும்பம், சமூகத்தின் எதிர்பார்ப்புகள் மற்றும் தனக்கான மகிழ்ச்சியைத் தேர்ந்தெடுக்கத் தேவையான தைரியம் ஆகிய கேள்விகளை அவளுக்கு முன்வைக்கிறது. விஜய் ஆ...