Posts

Showing posts with the label K Rajan

துணிச்சலான குரலை இழந்துவிட்டோம்: கே.ராஜன் நினைவேந்தல் கூட்டத்தில் டாக்டர் ஐசரி கே.கணேஷ் புகழஞ்சலி!

Image
சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளரும், இயக்குநரும், சென்னை–செங்கல்பட்டு–காஞ்சிபுரம்–திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவருமான கே. ராஜன் (வயது 85) அவர்கள், 2026 மே 17 அன்று காலமானார். அவரது மறைவைத் தொடர்ந்து, சென்னை–செங்கல்பட்டு–காஞ்சிபுரம்–திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் சார்பில், சென்னையில் அவரது திருவுருவப் படத் திறப்பு மற்றும் அஞ்சலிக் கூட்டம் 06-06-2026 அன்று திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க வளாகத்தில் மிகுந்த உணர்வுபூர்வமாக நடைபெற்றது. இந்நிகழ்வில், வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தலைவரும் தயாரிப்பாளருமான டாக்டர் ஐசரி கே. கணேஷ் தலைமை தாங்கி, கோலிவுட்டின் மிகத் துணிச்சலான மற்றும் நேர்மையான குரலாக விளங்கிய கே. ராஜன் அவர்களின் திருவுருவப் படத்தைத் திறந்து வைத்து, மலர்தூவி மௌன அஞ்சலி செலுத்தினார். அவரைத் தொடர்ந்து தயாரிப்பாளர் ‘கலைப்புலி’ எஸ். தாணு, நடிகரும் தயாரிப்பாளருமான அருண் பாண்டியன், சங்கத்தின் நிர்வாகிகள் துணைத் தலைவர் பி. அந்தோணிதாஸ், இணைச் செயலாளர் எஸ். நந்தகோபால், பொருளாளர் யு. தருண்குமார், செயற்குழு உறுப்பினர்கள், அன்ன...