Posts

Showing posts with the label Piyar prema kalyanam

பியார் பிரேமா கல்யாணம்’ படத்தின் ‘அட் ராசிட்டி’ யான ஃபர்ஸ்ட் சிங்கிள் !

Image
இயக்குநர் இளன் இயக்கி, முதன்முறையாக கதாநாயகனாகவும் அறிமுகமாகும் ‘பியார் பிரேமா கல்யாணம்’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘அட்ராசிட்டி’ (Atrocity) வெளியாகியுள்ளது. சமீபத்தில் வெளியான புரோமோ ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது வெளியாகியுள்ள இந்த முழுப் பாடலும் சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்து வருகிறது. இப்படம் நெட்ஃப்ளிக்ஸில் ஆகஸ்ட் 21 முதல் ஸ்ட்ரீமாகவுள்ளது யுவன் சங்கர் ராஜா இசையில் இளன் வெங்கயோ வரிகளில், மதிச்சியம் பாலா, சிந்தூரி விஷால், வெங்கயோ குரல்களில் உருவாகியுள்ள இந்த பாடல், இளமையும் உற்சாகமும் கலந்த காதல் பாடலாக அமைந்துள்ளது. துள்ளலான இசை, கவர்ச்சிகரமான காட்சியமைப்பு மற்றும் நாயகன்-நாயகியின் இயல்பான கெமிஸ்ட்ரி ஆகியவை பாடலின் முக்கிய அம்சங்களாக அமைந்துள்ளன. மாடர்ன் கல்யாணத்தின் அனைத்து ‘அட்ராசிட்டி’ (Atrocity) விசயங்களையும் நகைச்சுவை ததும்ப காட்சிப்படுத்தியிருக்கும் இப்பாடல் சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இயக்குநர் இளன், இந்தப் படத்தின் மூலம் முதன்முறையாக கதாநாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக சான்வீ மேக்னா நடித்துள்ளார்...