ஐ நோபடி - விமர்சனம்
மலையாளத்திலிருந்து மற்றொரு மணி ஹைஸ்ட் மாஸ்டர் பீஸ் படம் மனைவி பார்வதி, இரு மகள்கள் என அப்பர் மிடில் கிளாஸ் குடும்பத்தலைவனாக இருக்கிறார் பிரித்விராஜ் சுகுமாரன். படத்தின் ஆரம்பத்தில் பிரித்விராஜுக்கும் பார்வதிக்கும் சின்ன நெருடல் இருப்பதாக தெரியவருகிறது. அதன்பின் ஒரு கும்பல் ஒரு வங்கியை கொள்ளையடிக்கிறார்கள். அந்தக்கும்பலிடம் சிக்கி அதன்பின் அவர்களை கொன்றொழித்து மீள்கிறார் பிரித்விராஜ். அதன்பின் கொள்ளைக்கான காரணகர்த்தா அவர்தான் என்றும், கொள்ளையடித்த பணமெல்லாம் அவரிடம் தான் இருக்கிறது என்றும், காவல்துறையும் சமூகமும் சந்தேகிக்கிறது. அதனாலே அவருக்குப் பல இன்னல்கள் வருகின்றன. அவற்றையெல்லாம் ஹீரோ எப்படிச் சமாளித்தார் என்பதே படத்தின் கதை நாயகனாக பிரித்விராஜ் சுகுமாரன் இந்தப்படத்தில் அசுரப்பாய்ச்சலை நிகழ்த்தியுள்ளார். படத்தில் அவருக்கு எந்த மாஸ் மொமெண்ட்ஸும் கிடையாது. எளிமையான ஹீரோயிசத்தில் வலிமையான நடிப்பைக் கொடுத்துள்ளார். பார்வதி திருவோத்து நடிப்பால் படத்தை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்தியுள்ளார். இரு குட்டிப்பெண்களின் நடிப்பில் அவ்வளவு மெச்சூட். சூப்பர்! லாரி டிரைவராக வரும் அச...