ஆகக்கடவன – திரை விமர்சனம்
ஆகக்கடவன இயக்குனர் தர்மா இயக்கிய குற்றவியல் நாடக திரைப்படம். இதில் பெண் கதாநாயகி மற்றும் பாடல்கள் இல்லாததால் இது சாதாரண திரைப்படங்களில் இருந்து விலகி வித்தியாசமாக இருக்கிறது.
கதை:
கதாநாயகன் மற்றும் அவரது நண்பர்கள் ஒரு மருந்தகத்தை வாங்க முயற்சிக்கும் கதையைச் சுற்றிப் போகிறது. அந்த மருந்தகத்தின் உரிமையாளர் தனது மகளுக்கான திருமண செலவுகளுக்காக அதை விற்க விரும்புகிறார். இந்த நிலையில் பணம் திருடு போய் விடுகிறது, பணம் கிடைக்காததால், கதாநாயகனின் தந்தை தனது சொத்தை விற்று உதவுகிறார். அதற்குப் பிறகு பல திருப்பங்கள் நடக்கின்றன, அது கதையை வித்தியாசமான பாதையில் கொண்டு செல்கிறது.
நடிப்பு:
நடிகர்கள் பலர் புதியவர்களாகத் தெரிகிறார்கள். அவர்கள் ஆர்வமாக நடித்தாலும், சில நேரங்களில் நடிப்பு இயலாமையாக, இயற்கைத் தன்மை குறைவாக இருக்கிறது. வில்லனாக நடித்தவர் சிறப்பாக நடித்துள்ளார்.
கதைக்களம் மற்றும் இயக்கம்:
படத்தின் தொடக்கம் மெதுவாக இருக்கிறது. முதல் 20 நிமிடங்கள் சற்று சோர்வு உணர்வை தருகிறது. சில காட்சிகள் தேவையில்லாமல் இருக்கின்றன. ஆனால் "கதையின் முடிவு மிகவும் சுவாரஸ்யமான திருப்பத்துடன் வருகிறது".
தொழில்நுட்பம்:
ஒளிப்பதிவு சராசரியாக இருக்கிறது. படத்தில் பாடல்கள் இல்லாதது ஒரு நல்ல முயற்சி. இது கதையின் ஓட்டத்தை நன்றாக வைத்திருக்கிறது. படம் 109 நிமிடங்கள் தான்; அதிகமாக நீளமில்லை சிறப்பான செயல்
முடிவுரை:
நாம் பேசும் வார்த்தைகளுக்கு அவ்வளவு சக்தி இருக்கிறது ஒருவரின் வாழ்க்கையே மாற்றி விடும் ஆகக்கடவன வித்தியாசமான கதை. சில குறைகள் இருந்தாலும், சுவாரஸ்யமான முடிவும், புதிய பார்வையும் இதை ஒருமுறை பார்க்கலாம் என்ற எண்ணம் தருகிறது.
மதிப்பீடு:
5 இல் 2.75 – நல்ல முயற்சி, ஆனால் இன்னும் சிறப்பாக செய்யலாம்.
Comments
Post a Comment