ஏஸ் - திரை விமர்சனம்
ஏஸ் படம் இயக்குநர் அருமுககுமார் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி மீண்டும் இணைந்திருக்கும் திரில்லர் படம். இது முழுக்க முழுக்க மலேசியாவில் படமாக்கப்பட்டுள்ளது. கதையின் ஆரம்பத்தில் விஜய் சேதுபதி மலேசியா வருவதுடன் மர்மம் உருவாகிறது. பின்னர் அவர் வங்கிக்கொள்ளைச் சம்பவத்தில் சிக்கி விடுகிறார். இதைத் தொடர்ந்து கும்பல்கள், போலீசார் மற்றும் திருப்பங்கள் நிறைந்த கதையாக படம் நகர்கிறது.
படத்தின் முதல் பாதி கதாப்பாத்திரங்களை அறிமுகப்படுத்தும் வேலைக்கு அதிக நேரம் எடுத்துக்கொள்கிறது. இதனால் சில நேரம் கதை மந்தமாகிறது. ஆனால் இடைவேளைக்குப் பிறகு படம் சுறுசுறுப்பாக காட்சிகள் மற்றும் திருப்பங்களுடன் நகர்கிறது. விஜய் சேதுபதியின் நடிப்பு இரண்டாம் பாதியில் சிறக்கிறது. யோகி பாபுவின் காமெடி சில இடங்களில் நன்றாக வேலை செய்கிறது. கதாநாயகி ருக்மிணி வசந்துக்கு பெரிய சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.
அழகி சிலை போல்!
பாடல்கள் நினைவில் நின்று மனதை உருகவைக்கிறது,பின்னணி இசை சில முக்கியமான காட்சிகளில் நல்லா இருக்கிறது. ஒளிப்பதிவும் சண்டைக் காட்சிகளும் சில இடங்களில் பாராட்டப்படத்தக்கவை.
முடிவில், படம் முழுக்க சுவாரசியமா இல்லாவிட்டாலும், இரண்டாம் பாதி நல்ல பொழுதுபோக்கை அளிக்கிறது. முதல் பாதி சற்றுக் குறைக்கப்பட்டிருந்தால், படம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம்.
Rating ⭐⭐⭐/5
Comments
Post a Comment