சாருகேசி திரைவிமர்சனம்


ஒரு இசை பாடகரின் வாழ்க்கைப் பதிவு இந்த சாருகேசி

கதையின் நாயகனான ஓய் ஜி மகேந்திரா ஒரு பெரும் இசைப்பாடகர். அவருக்கு திடீரென அல்சைமர் எனும் மறதிநோய் ஏற்படுகிறது. அவரது மகனுக்கு ஓய் ஜி மகேந்திரா மீது பெரிய மரியாதை ஏதுமில்லை. ரம்யா பாண்டியனை காதலிக்கும் அவருக்கு கதையில் ஒரு இருக்கிறது. மேலும் அவருக்கும் ஓய் ஜி மகேந்திராவிற்கும் உள்ள பந்தத்தில் ஒரு ட்விஸ்டும் உண்டு. இச்சூழலில் அல்சைமர் நோயிலிருக்கும் ஓய் ஜி மகேந்திரா வாழ்வை பிறர் வாயிலாக நாம் அறிய முடிகிறது. முடிவில் நோய்மையிலிருந்து ஓய் ஜி மகேந்திரா மீண்டாரா? என்பதாக கதை விரிகிறது

ஓய் ஜி மகேந்திரா தனது தேர்ந்த அனுபவத்தை நடிப்பில் வார்த்துள்ளார். “வந்து போவதே நம் வேலை..வழி நடத்துவது அவன் லீலை” என்ற வரிகளை அவர் பாடுகையில் நமது ஜீவன் கொஞ்சூண்டு உருகிப்போய்விடுகிறது. சமுத்திரக்கனி, சத்யராஜ் இருவரும் கெஸ்ட் ரோலில் தங்களது பெஸ்டை கொடுத்துள்ளனர். சுஹாசினி தலைவாசல் விஜய் இருவரும் கொடுத்த வேலையைச் செய்துள்ளனர். ரம்யா பாண்டியன் நடிப்பும் ஒகே

படத்தில் கர்நாடிக் இசை பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தேவா நிச்சயமாக இப்படத்தில் தேனிசையை தந்துள்ளார் எனலாம் சஞ்சய் தனது ஒளிப்பதிவில் சிக்கனத்தை தந்துள்ளார். இருந்தாலும் பெரிய குறையில்லை

பா.விஜய் வசனங்களையும் பாடல்களையும் எழுதியுள்ளார். சுரேஷ் கிருஷ்ணா ஒரு மியூசிக்கல் ட்ராமாவை ஓரளவு இன்ட்ரஸ்டிங்காக எடுத்துள்ளார். இன்றைய தலைமுறைக்கு நம் தாய் தந்தையரின் வாழ்க்கையை கற்றுக்கொள்வதும் தெரிந்துகொள்வதும் எவ்வளவு முக்கியம் என்பதைச் சொல்லியுள்ளார். இன்னும் ஷார்ப்பாக படத்தை கொடுத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். இருப்பினும் இந்த சாருகேசியை ஒருமுறை பார்க்கலாம்

Comments

Thandora Talkies

கானா உலகநாதன் முக்கிய வேடத்தில் — “ஐயம்” திரைப்படம்!

ராட்ட - சினிமா விமர்சனம்

படைத்தலைவன் திரைவிமர்சனம் - ஒரு பார்வை

சப்தம்’ படப்பிடிப்பில் அமானுஷ்ய விஷயங்களை உணர்ந்தேன்” ; நடிகர் ஆதியின் அதிர்ச்சி அனுபவம்