Posts

Showing posts with the label The Grand Master

தி கிராண்ட் மாஸ்டர் விமர்சனம்

Image
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற சமூகநீதிக் கருத்தை செஸ் விளையாட்டின் பின்னணியில் பேசியிருக்கிறது தி கிராண்ட் மாஸ்டர். தூய்மைப் பணியாளரான அபர்ணதியின் மகன் அஸ்வினுக்கு செஸ் மீது ஆர்வம். ஆனால் சமூக ஏற்றத்தாழ்வுகள் அவனது திறமைக்குத் தடையாக நிற்கின்றன. செஸ் கற்றுக்கொடுக்க யாரும் இல்லாத நிலையில், தாயே அவனுக்கு பயிற்சி அளிக்கிறார். அபர்ணதிக்கு செஸ் எப்படி தெரியும், அவரது கடந்த காலம் என்ன, அஸ்வின் சாதிக்கிறானா என்பதே படத்தின் மையக்கதை. அபர்ணதி தனது கதாபாத்திரத்தின் வலியையும் போராட்டத்தையும் இயல்பாக வெளிப்படுத்தியுள்ளார். சிறுவன் அஸ்வினும் கவனம் ஈர்க்கிறார். குறிப்பாக காவல்நிலையத்தில் ஆசிரியரை வைத்து செஸ் விளையாட அழைக்கும் காட்சி குறிப்பிடத்தக்கது. லிங்கேஷ் உள்ளிட்ட மற்ற நடிகர்களும் தங்கள் கதாபாத்திரங்களை இயல்பாகக் கையாண்டுள்ளனர். தினேஷ் ஆண்டனியின் இசையும், அர்ஜுன் ரவியின் ஒளிப்பதிவும் படத்திற்கு துணை நிற்கின்றன. திறமை இருந்தாலும் அதை நிரூபிக்க வாய்ப்பு எல்லோருக்கும் கிடைப்பதில்லை என்ற கருத்தை கமர்சியல் அம்சங்களுடன் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் வெற்றிச்செழியன். கதையில் இ...