Posts

Showing posts with the label Shiva Rajkumar

ஒரிஜினல் மான்ஸ்டர்: மும்பையில் நட்சத்திரங்கள் பங்கேற்ற பிரம்மாண்ட நிகழ்வில் தலைப்பு மற்றும் மோஷன் போஸ்டர் வெளியீடு

Image
மிகுந்த எதிர்பார்ப்பில் உருவாகி வரும் ஒரிஜினல் மான்ஸ்டர் திரைப்படத்தின் தலைப்பு மற்றும் மோஷன் போஸ்டர், ஆகஸ்ட் 28 அன்று மும்பையில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் வெளியிடப்பட்டது. இதன் மூலம், தனது தாய்த் திரையுலகைத் தாண்டி பார்வையாளர்களுக்கு இப்படம் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டதுடன், பான் இந்தியா பயணத்திற்கான எதிர்பார்ப்பும் தொடங்கியுள்ளது. இந்நிகழ்வில் படத்தின் முக்கிய உறுப்பினர்கள் மட்டுமின்றி, இந்திய திரையுலகின் மிகவும் மதிக்கப்படும் பல முன்னணி பிரபலங்களும் கலந்து கொண்டனர். இயக்குநர் ஆர். சந்துரு, புகழ்பெற்ற தயாரிப்பாளரும் வழங்குநருமான திரு. ஆனந்த் பண்டிட், பான் இந்தியா சூப்பர் ஸ்டார் டாக்டர். சிவராஜ்குமார், திருமதி. கீதா சிவராஜ்குமார், பிரபல நடிகர் சுனில், இசையமைப்பாளர் அஜனீஷ் லோக்நாத் மற்றும் ஒளிப்பதிவாளர் ஏ.ஜே. ஷெட்டி ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு, ஒரிஜினல் மான்ஸ்டர் படக்குழுவிற்கு இந்த மாலை நேரத்தை மறக்க முடியாததாக மாற்றினர். மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த மோஷன் போஸ்டர், டாக்டர். சிவராஜ்குமார், ஆர். சந்துரு, ஆனந்த் பண்டிட், கீதா சிவராஜ...