நல்ல படம் - திரைவிமர்சனம்
நல்ல படம், டைட்டில் போலவே இருக்கிறதா? குடியே மதி என சாய்ந்து கிடக்கும் ஹீரோ. அவரை காதலிக்கும் ஹீரோயின். ஹீரோவைச் சுற்றியிருப்பவர்கள் அனைவரும், “திருந்து, திருந்து” என அறிவுரை சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் ஹீரோவுக்கும் அவரது நண்பர்களுக்கும் மதுப்பழக்கத்தால் தொடர்ந்து பல்வேறு இன்னல்கள் வந்தாலும், இந்த மதுபிரியர் மறுமலர்ச்சி கழகத்தினர் சரக்கை விடுவதாக இல்லை! ஒரு கட்டத்தில் இந்தியா முழுவதும் மதுவிலக்கு அமல்படுத்தப்படுகிறது. அதன்பிறகு இந்தக் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் என்ன ஆனார்கள்? இறுதியில் படம் சொல்ல வரும் மெசேஜ் என்ன? என்பதுதான் படத்தின் கதையாகப் பயணிக்கிறது. இயல்பான நடிப்பு ஹீரோ ஹரிஷ் அழகுபாண்டியன் பார்க்க நமது பக்கத்து வீட்டுப் பையன் போலவே இருக்கிறார். அவரது நடிப்பும் இயல்பாக அமைந்துள்ளது. ஹீரோயின் தனலெட்சுமி பார்ப்பதற்கு அழகாக இருக்கிறார். சில காட்சிகளில் தனது இருப்பை அழுத்தமாகப் பதிவு செய்கிறார். கல்கி ராஜா, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களும் ஓரளவு கவனம் ஈர்க்கின்றன. தொழில்நுட்ப அம்சங்கள் இனியன் ஜே. ஹாரிஸ் தனது ஒளிப்பதிவை இன்னும் செம்ம...