Dark Heaven - விமர்சனம்
5 தொடர் கொலைகளும்... திகில் விசாரணையும்! தொடர்கொலைகளும், அதைத் தொடர்ந்து நடைபெறும் பரபரப்பான விசாரணையும்தான் இந்தத் திரில்லர் படத்தின் மையக்கரு. இன்றைய தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள மேக்கரைதான் கதையின் களம். பெரும்பாலான கதை 2007-ஆம் ஆண்டில் நடைபெறுகிறது. அப்போது மேக்கரை திருநெல்வேலி மாவட்டத்தின் கீழ் இருந்தது. மேக்கரையில் ஒவ்வொரு ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆண்கள் மட்டும் மர்மமான முறையில் கொல்லப்படுகிறார்கள். அப்படியொரு ஏழாண்டு கொலை சீசனில், ஹீரோ தனது மனைவி மற்றும் குழந்தையுடன் அந்த ஊருக்கு இன்ஸ்பெக்டராக வருகிறார். அவர் வந்த பிறகும் தொடர் கொலைகள் தொடர்கின்றன. இந்தக் கொலைகளுக்குப் பின்னால் இருப்பது யார்? அதன் பின்னணி என்ன? ஹீரோ அதை எப்படிக் கண்டுபிடிக்கிறார்? என்பதுதான் படத்தின் மீதிக்கதை. நடிப்பில் இன்னும் கவனம் தேவை நாயகன் சித்து இன்னும் நடிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பல காட்சிகளில் விரைப்பாக நிற்பதையே நடிப்பு என நினைத்துவிட்டாரோ என்ற எண்ணம் வருகிறது. குறிப்பாக எமோஷனல் காட்சிகளில் இன்னும் இயல்பான நடிப்பை வழங்கியிருக்கலாம். தர்ஷிகா அழகாக இருப்பதுடன், தனக்குக் கிட...