Posts

Showing posts with the label Anbil Avan

அன்பில் அவன்’ வெற்றியைக் கொண்டாடிய படக்குழு.

Image
ஐங்கரன் இன்டர்நேஷனல் (Ayngaran International)  மற்றும் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் (Happy High Pictures ) நிறுவனங்கள் இணைந்து தயாரித்த, அசோக் செல்வன் – ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில், இயக்குநர் ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில் வெளியான ‘அன்பில் அவன்’ திரைப்படம் ரசிகர்களின் ஆதரவுடன் திரையரங்குகளில் வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் படக்குழுவினர் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியை நடத்தினர். இந்த நிகழ்வில் படக்குழுவினர் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களை நேரில் சந்தித்து, திரைப்படத்திற்கு ஆதரவளித்ததற்கும் ரசிகர்களிடம் படத்தைக் கொண்டு சேர்த்ததற்கும் நன்றி தெரிவித்தனர். நிகழ்ச்சியில் இயக்குநர் கார்த்திகேயன், நடிகர்கள் அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன், கதிர்பாலு,மஹா டெல்லி கணேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு படத்தின் உருவாக்க அனுபவங்களையும், ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பையும் பகிர்ந்துகொண்டனர். இந்நிகழ்வில், ஹேப்பி ஹை பிக்சர்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் அபிநயா செல்வம் பேசியதாவது: ‘அன்பில் அவன்’ படத்துக்கு இவ்வளவு பெரிய ஆதரவு கொடுத்த பத்திரிகையாளர்கள், ஊடக ...

அன்பில் அவன் - திரை விமர்சனம்

Image
​திரைக்கதை சுருக்கம்: ​நட்சத்திர ஹோட்டலில் வேலை செய்யும் தம்பதிகளான நாயகன் அசோக் செல்வனும், நாயகி ப்ரீத்தி முகுந்தனும் சந்திக்கும் இன்னல்களும் சவால்களுமே 'அன்பில் அவன்' படத்தின் மையக்கதை. ​காதலுக்குப் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிக்க, அதை மீறி திருமணம் செய்து வாழத் தொடங்குகிறார்கள். இருவருக்குமே வேலை பார்க்கும் நட்சத்திர ஹோட்டலில் பணிச்சுமையும் அதிகம், அவமானங்களால் நேரும் மனச்சுமையும் அதிகம். இதனால் கடனை வாங்கியாவது ஊட்டியில் சொந்தமாக ஒரு 'ஹோம்ஸ்டே' கட்ட வேண்டும் என முடிவெடுக்கிறார்கள். ஆனால், அங்கு ஹோட்டல் தொடங்கும் முன் அவர்களுக்குப் பல இன்னல்கள் நேர்கின்றன. அவற்றை இருவரும் எப்படிக் கடந்து மேலெழுகிறார்கள் என்பதே மீதிக்கதை. ​நடிப்பு மற்றும் கதாபாத்திரங்கள்: ​அசோக் செல்வன்: இவருக்கு இப்படம் ஒரு 'ஆக்ஷன் ஹீரோ' இமேஜைப் பெற்றுத் தரும். ஆக்ஷன் காட்சிகளில் அவ்வளவு நேர்த்தியாகப் பொருந்தியிருக்கிறார். ​ப்ரீத்தி முகுந்தன்: ஒரு தேர்ந்த நடிகை என்ற பெயரை இப்படம் இவருக்குப் பெற்றுத் தரும். இருப்பினும், பின்பாதியில் இவரை இன்னும் நன்றாகப் பயன்படுத்தியிருக்கலாம். ​மஹ...

அசோக் செல்வன் நடிக்கும் 'அன்பில் அவன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர் வெளியீடு!

Image
அசோக் செல்வன் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்து வரும் புதிய திரைப்படத்திற்கு, 'அன்பில் அவன்' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகி வரும் 'அன்பில் அவன்' திரைப்படத்தில் அசோக் செல்வன், பிரீத்தி முகுந்தன், சபு மோன், அப்துல் சமத், கதிர் பாலு, மஹா டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இப்படத்தின் கதையை இயக்குநர் விக்னேஷ் ராஜா எழுத, கௌதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்ய, கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.‌ படத்தொகுப்பு பணிகளை ஆர்.கே செல்வா மேற்கொள்ள, மணிகண்டன் ஸ்ரீனிவாசன் கலை இயக்கத்தை கவனித்திருக்கிறார். பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய அழகான காதல் கதையாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஐங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனம் மற்றும் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் கே. கருணா மூர்த்தி- அசோக் செல்வன் - அபிநயா செல்வம்- ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இத்திரைப்படத்தை எதிர்வரும் செப்டம்பர் மாதம் வெளியிட திட்டமிடப்பட்டு வரும் தருணத்தில...