ஏன் என்னை ஏதோ செய்தாய் - திரை விமர்சனம்
கதைச்சுருக்கம் : கொண்டதே கோலம் கண்டதே காமம் என வாழ்ந்து வரும் ஹீரோ ஆண்டனி! அவர் பாலியல் தொழில் செய்யும் பெண் ஒருவரை வீட்டிற்கு அழைக்கிறார்! இருவருக்கும் ஒரு இரவு கழிகிறது! அத்தோடு இந்த உறவு முடியவில்லை. உடலின்பத்தைத் தாண்டி அந்தப் பெண்ணிடம் வேறொன்று இருப்பதாக ஹீரோ ஆண்டனி நம்புகிறார். அதனால் அந்தப்பெண்ணை காதலிக்கிறார். அந்தப் பெண்ணும் ஒரு கட்டத்தில் காதலில் விழ, இந்தக் காதல் கடைசிவரை விழாமல் பயணித்ததா? என்பதே படத்தின் கதை ஹீரோ ஆண்டனி அச்சு அசலாக கெளதம் மேனென் பட ஹீரோ போலவே பேசுகிறார், நடக்கிறார், சிரிக்கிறார் நடிக்கிறார். அவரின் நேச்சரே அப்படித்தான் என்பதால் போகப்போக நமக்கு செட்டாகிவிடுகிறது. நாயகி மதுமிதா தாஸ் தூள் கிளப்பியிருக்கிறார். எமோஷ்னல் காட்சிகளில் அவர் காட்டியிருக்கும் பெர்பாமன்ஸ் சூப்பர். வெல்கம் டூ தமிழ்சினிமா! ஜீவாரவி, ரெஜின் ரோஸ், நவ்யா சுஜி உள்ளிட்ட பிற கேரக்டர்கள் எல்லோரும் ஒகே ரகம் பைட்ரோவில்லணி தனது ஒளிப்பதிவு பணியை திறம்படச் செய்துள்ளார். குறைந்தபட்ச கேரக்டர்கள் தான் திரையில் இருக்கிறார்கள். ஆனால் ஷாட் கம்போசிங்கில் அந்தக் குறையைத் தெரியாமல் சமாளித்து...