Posts

Showing posts with the label Pethlaham Kudumba Unit

பெத்லகேம் குடும்ப யூனிட் - விமர்சனம்

Image
மமிதா பைஜு நினைவுகளை கொண்டாடும் கல்லூரி மாணவி. தன் நண்பிகளை பிரிந்து அவரது அப்பா அம்மா தம்பியோடு வேறோர் இடத்திற்கு குடிபெயர்கிறார் மமிதா. அங்கு பக்கத்து வீட்டு முதிர்க்கண்ணனாக ஹீரோ நிவின் பாலி. மமிதா பைஜுவை விட பதிமூன்று வயது அதிகமுள்ள நிவின்பாலிக்கும் மமிதாவிற்கு லவ் கனெக்டிங் உருவாகிறது. இது எப்படி சாத்தியமானது என்பதும், சாத்தியமான காதல் சாத்வீகமாக நிறைவேறியதா என்பது படத்தின் மீதிக்கதை கதையின் நாயகனாக மிக மிக இயல்பான நடிப்பை கொடுத்துள்ளார் நிவின்பாலி. மனிதர் கேமரா என்ற ஒன்று முன்னாடி இருப்பதை மறந்தேவிட்டார் போல. மமிதா பைஜுவின் நடிப்பையும் அழகையும் சொல்லித்தான் தெரிய வேண்டுமா? மனிதியின் ஒவ்வொரு ரியாக்சனும் அடிப்பொலி மோளே ரகம் தான். இவர்களின் வேறலெவல் காம்போவிற்கு இடையில் வரும் சங்கீத் பிரதாப், சுரேஷ் கிருஷ்ணா, வினய் பார்ட் உள்பட எல்லாக் கேரக்டர்களும் பக்கா பக்கா தான் மனதிற்கு இதமான இசையை வழங்கி நம் உணர்வுகளை காதலால் தட்டியெழுப்புகிறார் இசைஞர் விஷ்ணு விஜய். ஒளிப்பதிவாளர் அஜ்மல் சபு ஒரு பிரேம் கூட பிரேமம் குறைவின்றி வைக்கவில்லை போல. காட்சிகளை காதலித்து படமாக்கியுள்ளார் கிரிஷ...