Posts

Showing posts from September, 2026

ஃபஹத் பாசிலின் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ அக்டோபர் 2ல் ரிலீஸ்

Image
எஸ்.எஸ். ராஜமௌலி வழங்கும், ஃபஹத் பாசில் நடிப்பில் உருவாகியுள்ள ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ திரைப்படம் அக்டோபர் 2ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. அர்கா மீடியா ஒர்க்ஸ் மற்றும் ஷோயிங் பிசினஸ் நிறுவனங்கள் சார்பில் ஷோபு யெர்லகடா, எஸ்.எஸ். கார்த்திகேயா தயாரிப்பில், ஷஷாங்க் யெலெட்டி இயக்கியுள்ள இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை சக்தி பிலிம் பேக்டரி சார்பில் சக்திவேலன் பெற்றுள்ளார். படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் எஸ்.எஸ். ராஜமௌலி, ஃபஹத் பாசில், எஸ்.எஸ். கார்த்திகேயா, குழந்தை நட்சத்திரம் சாரா சச்தேவ், படத்தொகுப்பாளர் பிரவீண் ஆண்டனி உள்ளிட்ட படக்குழுவினரும், நடிகர் சூர்யா மற்றும் தயாரிப்பாளர் ஐசரி கே. கணேஷ் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்களும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய எஸ்.எஸ். ராஜமௌலி, படத்தின் கதையை ஒரே வரியில் இயக்குநர் ஷஷாங்க் யெலெட்டி கூறிய விதம் தன்னை மிகவும் கவர்ந்ததாக தெரிவித்தார். “ஒரு பேயை கடத்திய மனிதனின் கதை” என்ற அந்த ஒற்றை வரியே இப்படத்தை உருவாக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியதாக ...

சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘SK27’ – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Image
தமிழ் திரையுலகில் பல தசாப்தங்களாக வித்தியாசமான கதைக்களங்களையும், தரமான படைப்புகளையும் வழங்கி வரும் சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் அடுத்த பிரம்மாண்ட தயாரிப்பாக, சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய திரைப்படம் உருவாகிறது. தற்காலிகமாக ‘SK27’ என அழைக்கப்படும் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. டி.ஜி. தியாகராஜன் வழங்கும் இப்படத்தை செந்தில் தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன் மற்றும் சாய் சித்தார்த் ஆகியோர் தயாரிக்கின்றனர். இப்படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக கயாது லோகர் நடிக்கிறார். சிவகார்த்திகேயன் – கயாது லோகர் இணையும் முதல் திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. ‘பரிதாபங்கள்’ புகழ் சுதாகர் மற்றும் ஜார்ஜ் மரியான் ஆகியோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். முன்னணி நடிகராக பல்வேறு வெற்றிப் படங்களை வழங்கி வரும் சிவகார்த்திகேயனின் அடுத்த படைப்பாக உருவாகும் ‘SK27’, அவரது திரைப்பயணத்தில் மற்றுமொரு புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளது. இந்தப் படத்தின் மூலம் சிவகார்த்திகேயன், இயக்குநர் ராம...

தனுஷ் – தமிழரசன் பச்சமுத்து கூட்டணியில் அதிகாரப்பூர்வமாக தொடங்கியது D56!

Image
தமிழின் முன்னணி நடிகர் தனுஷின் 56வது திரைப்படமான D56 படத்தின் பணிகள் இன்று பூஜையுடன் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளன. லப்பர் பந்து படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இப்படத்தை இயக்குகிறார். தனுஷ் – தமிழரசன் பச்சமுத்து கூட்டணி முதன்முறையாக இணையும் படம் என்பதால், D56 திரைப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் ஆரம்பத்திலேயே எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. Sithara Entertainments நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் நாக வம்சி, Primark Productions நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஹரிதா லிங்கசாமி மற்றும் Srikara Studios நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சாய் சௌஜன்யா ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். மதுரை அருகில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கருப்பணசாமி கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையுடன் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கியுள்ளன. பூஜை நிகழ்வில் படக்குழுவினர் மற்றும் முக்கிய நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர். மக்களுக்கு கிடா விருந்தளித்து, பெரும் கோலாகலமாக படப்பிடிப்பு பணிகளை துவக்கியுள்ளது  படக்குழு.  இந்நிகழ்வினில்...

காதல், சிக்கல்கள் மற்றும் அதற்கு இடையில் இருக்கும் அனைத்தும்: இதோ உங்கள் நயன்தாரா மற்றும் கவின் நடிப்பில் Hi எந்த ott தளத்தில் தெரியுமா!

Image
இந்தியாவின் முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள மிகவும் பாராட்டப்பட்ட வெற்றித் திரைப்படங்களைத் தொடர்ந்து ரசிகர்களிடம் கொண்டு வரும் தமிழ் ZEE5, தனது வெற்றிப் பயணத்தைத் தொடர்ந்து வருகிறது. ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து, தற்போது நயன்தாரா மற்றும் கவின் நடிப்பில் உருவாகியுள்ள Hi திரைப்படத்தைத் திரையிடத் தயாராகியுள்ளது. வழக்கமான காதல் கதைகளிலிருந்து மாறுபட்ட வகையில், நவீன உறவுகள் குறித்த புதிய பார்வையை வழங்கும் அதே நேரத்தில், இதமான உணர்வுகளைத் தரும் காதல் கதையாக இப்படம் உருவாகியுள்ளது. நயன்தாரா மற்றும் கவின் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள Hi, நவீன கால உறவுகளை இதமான மற்றும் உணர்வுப்பூர்வமான கோணத்தில் அணுகுகிறது. எதிர்பாராத வகையில் இணையும் இந்த இரு திறமையான நடிகர்களின் திரை இணைவு, கதைக்கு தனித்துவமான ஈர்ப்பைச் சேர்க்கிறது. நயன்தாரா, வலிமையான, சுயாதீனமான பெண்ணாகவும், தனது கொள்கைகளில் உறுதியுடன் இருப்பவராகவும், அதே நேரத்தில் நிதானத்துடனும் நேர்த்தியுடனும் தனது கதாபாத்திரத்தை வெளிப்படுத்துகிறார். கவின், உண்மையான மற்றும் அன்புக்குரிய இளைஞராக, தனது உண...

ஒரே கதை. காதலைப் பற்றிய பல பார்வைகள். எளிதில் புரிந்துகொள்ள முடியாத ஒரு உண்மை

Image
 ‘Pooja Meri Jaan’ திரைப்படம் அக்டோபர் 2 முதல் Hindi Zee 5-ல் வெளியாகிறது National, செப்டம்பர் 24, 2026: ஒவ்வொரு கதையும் எளிதான பதில்களை வழங்குவதற்காக உருவாக்கப்படுவதில்லை. சில கதைகள் நம்மை அசௌகரியத்திற்கு உள்ளாக்கி, நாம் ஏற்றுக்கொள்வதை கேள்விக்குள்ளாக்கி, நாம் பார்க்காமல் தவிர்க்க விரும்பும் உண்மைகளை எதிர்கொள்ள வைக்கின்றன. Navjot Gulati இயக்கத்தில், Dinesh Vijan மற்றும் Amar Kaushik தயாரிப்பில், Maddock Films நிறுவனத்தின் தயாரிப்பாக உருவாகியுள்ள ‘Pooja Meri Jaan’ திரைப்படம் 2026 அக்டோபர் 2-ம் தேதி Hindi Zee 5-ல் வெளியாகிறது. இந்த தீவிரமான டிராமா திரைப்படம் Pooja-வை மையமாகக் கொண்டு நகர்கிறது. தொடர் அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள், நிராகரிப்பு, வெறித்தனமான காதல், சம்மதம் மற்றும் உண்மையில் என்ன நடந்தது என்பதன் பின்னணியில் எழும் கேள்விகளை எதிர்கொள்ள வைக்கின்றன. முக்கிய விவரங்கள்: தலைப்பு: Pooja Meri Jaan தளம்: Hindi Zee 5 மொழி: இந்தி வகை: டிராமா வெளியீடு: 2 அக்டோபர் 2026 இயக்கம்: Navjot Gulati தயாரிப்பு: Maddock Films நடிகர்கள்: Mrunal Thakur, Huma Qureshi, Vikram Singh Chauh...

வரவேற்பைக் குவிக்கும் ‘தாய்நிலம்’ டிரெய்லர் – அக்டோபர் 9-ம் தேதி திரைக்கு வருகிறது!

Image
இலங்கை மக்களின் வலி, வாழ்வியல் மற்றும் தாய்நிலத்தின் மீதான பாசத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘தாய்நிலம்’ திரைப்படம் அக்டோபர் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. நெனி என்டர்டெயின்மென்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் அபிலாஷ் ஜி. தேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரெய்லர் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இலங்கையில் நடைபெற்ற போரின் பின்னணியில், 2016-ல் உறவுகளையும் சொந்த மண்ணையும் இழந்து, வேறு வழியின்றி தமிழ்நாட்டிற்கு வந்து சேரும் ஒரு தந்தையும் அவரது சிறுமகளும் எதிர்கொள்ளும் வாழ்க்கைப் போராட்டத்தை மையமாகக் கொண்டதாக ‘தாய்நிலம்’ உருவாகியுள்ளது. தாய்நிலத்தை விட்டு வெளியேறிய பிறகு புதிய இடத்தில் வாழ்க்கையை தொடங்க வேண்டிய சூழலில், அந்த தந்தையும் மகளும் சந்திக்கும் சவால்களையும், அவர்களைச் சுற்றியுள்ள மனிதர்களின் அன்பையும் திரைப்படம் பேசுகிறது. எல்லாவற்றையும் இழந்து தமிழ்நாட்டிற்கு வரும் அந்த தந்தையின் மிகப்பெரிய ஆசை, தனது மகளை நல்ல நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்பதுதான். அதற்காக அவர் எதிர்கொள்ளும் போர...

கெமிஸ்ட்ரியா… கம்ஃபோர்ட்டா? ‘#Love’ டிரெய்லர் வெளியீடு!

Image
சௌந்தர்யா ரஜினிகாந்த் ஷோ-ரன்னராகவும் தயாரிப்பாளராகவும் பணியாற்ற, பாலாஜி மோகன் இயக்கத்தில் நவீன காதல் மற்றும் உறவுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘#Love’ வெப் சீரிஸின் டிரெய்லர்  வெளியிடப்பட்டது. அர்ஜுன் தாஸ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தத் தொடர், இன்றைய டிஜிட்டல் உலகில் காதல், டேட்டிங், உறவுகள் மற்றும் உணர்வுகள் எப்படி மாறியிருக்கின்றன என்பதை நகைச்சுவையுடனும் உணர்வுப்பூர்வமாகவும் பேசுகிறது. சென்னையில் நடைபெற்ற ‘#Love’ தொடரின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் படக்குழுவினர் மற்றும் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் கலந்துகொண்டு தொடரைப் பற்றிய தங்களது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர். இந்நிகழ்வினில் *நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த மோனிகா ஸ்ரீவாஸ்தவ் பேசியதாவது.., “நெட்ஃப்ளிக்ஸின் முதல் தமிழ் காதல் டிராமா தொடராக ‘#Love’ உருவாகியுள்ளது. தென்னிந்தியக் கதைகளில் நெட்ஃப்ளிக்ஸ் தொடர்ந்து அதிக கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக தமிழ் படைப்புகளில் வித்தியாசமான கதைக்களங்கள், தனித்துவமான குரல்கள் மற்றும் புதிய அணுகுமுறைகளை வழங்க விரும்புக...

பாரடைஸ் - திரை விமர்சனம்

Image
சினிமா பாரடைஸ்னு ஒரு உலக சினிமா உண்டு! எதுக்காகச் சொல்றேன்னா… சரி, இந்த பாரடைஸுக்கு வருவோம். இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்தாலும், ஆந்திராவில் குறிப்பிட்ட ஒரு இன மக்களுக்கு மட்டும் விடுதலை கிடைக்கவில்லை. ஒரு சமஸ்தானத்தின் கீழ் மக்கள் பெரும் கொடுமைகளை அனுபவிக்கிறார்கள். ஹீரோ நானியின் அம்மா, நானியை வயிற்றில் சுமந்தபடியே அந்த வல்லாதிக்கத்திற்கு எதிராகப் போராடுகிறார். ஆனால் கொடூர வில்லன் அவரை சிறுமைப்படுத்துகிறான். கடினமான சூழலில் தாயின் வயிற்றிலிருந்து பிறக்கும் நானி, வளர்ந்த பின் தாயின் சபதத்தை நிறைவேற்றினாரா? என்பதுதான் படத்தின் ஒரு முக்கியக் கதை. இதற்குள் இன்னும் பல கதைகளும் கிளைக்கின்றன. இந்தப் படத்திற்காக ஒரு பேயுழைப்பைப் போட்டிருக்கிறார் நானி. குறிப்பாக சண்டைக்காட்சிகளில் அவர் எடுத்திருக்கும் ரிஸ்க் அளப்பரியது. எமோஷனல் காட்சிகள் வலிமையாக இல்லாவிட்டாலும், அவரின் நடிப்பில் எந்தக் குறையும் இல்லை. அவரின் தாயார் கதாபாத்திரமும், அந்தக் கதாபாத்திரத்தில் நடித்தவரின் நடிப்பும் அல்டிமேட். கயாது லோஹர் நடிப்பைப் பற்றிச் சொல்லணுமா என்ன? அந்த அழகு தேவதை கணநேர ஷாட்களில் தரும் தரிசனம...

டோரோதி - திரை விமர்சனம்

Image
டோரதி: பிற்போக்கு மனிதர்களுக்கு முற்போக்கு உலகை கற்பிக்கும் அசாத்திய சினிமா மனித உறவுகள் அமைய மனது தீர்மானித்தால் போதும். பிறர் என்ன நினைப்பார்கள் என்பதைப் பற்றி யோசிக்கத் தேவையில்லை என்பதை அழுத்தமாகச் சொல்லும் படைப்பு டோரதி. சனந்த், ரிஷிகாந்த் இருவரும் சிறு வயது முதலே நண்பர்கள். “ஆண் என்றால் கெத்து” என்கிற எண்ணத்துடன் வளர்கிறார் சனந்த். அவரால் ஈர்க்கப்படும் சாந்தமான ரிஷிகாந்தும் காலப்போக்கில் வீரதீர ஆணாக மாறுகிறார். இவர்களது நட்புக்கு சாதி தடையாக இல்லாவிட்டாலும், சாதி வெறி கொண்ட சனந்தின் தந்தை முத்துக்குமாருக்கும் அவரது இரு அண்ணன்களுக்கும் ரிஷிகாந்த் மீது வெறுப்பு இருக்கிறது. சனந்தின் அண்ணன் செளந்தர்ராஜாவின் மனைவியாக கீர்த்தி சுரேஷ் வருகிறார். அதன் பின்னர் சனந்த், அவரிடம் அளவற்ற அன்பை வெளிப்படுத்துகிறார். அதன் பிறகு நிகழும் அதிர்ச்சிகளும், உறவுகளுக்குள் உருவாகும் முரண்பாடுகளும் கதையை வேறொரு தளத்திற்குக் கொண்டு செல்கின்றன. பாலின வேறுபாட்டைச் சுற்றிய வெறுப்புக்கும், மனிதர்களை மனிதர்களாகப் பார்க்கும் பேரன்புக்கும் இடையிலான போரில் யார் தோற்கிறார்கள்? என்பதே திரைக்க...

மீசையமுறுக்கு 2 - திரை விமர்சனம்

Image
மூன்று தலைமுறைகளின் இசைப் போராட்டம்... வென்றதா? முதல் பாகம் தொட்ட இடத்தை இந்தப் பாகமும் தொட முடியும் என்ற நம்பிக்கையுடன் களமிறங்கியுள்ளார் ஹிப்ஹாப் தமிழா. ஓப்பன் பண்ணா 1979! மயிலாப்பூர் வகையறாக்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் பாட்டு, இசை, கச்சேரி, சபா என்கிற இசையுலகிற்குள் நுழைய, ராயபுரம் வகையறாவைச் சேர்ந்த ஹிப்ஹாப் தமிழா முயற்சிக்கிறார். ஆனால், எளிய மனிதரான அவரை அந்த சிஸ்டம் அவ்வளவு எளிதாக அனுமதிக்கவில்லை. கட் செய்தால் 2026. இன்னொரு ஹிப்ஹாப் தமிழா இசைஞர், கவிஞர், பாடகர் என முப்பரிமாணங்களோடு சினிமாவுக்குள் முயற்சி செய்கிறார். இதற்கிடையில் 1990-களில் வரும் ஹிப்ஹாப் தமிழாவுக்கும் தனக்கென ஒரு கதை இருக்கிறது. 1979-ல் வரும் ஹிப்ஹாப் தமிழா வயதானவராக கருணாஸ் நடிக்கிறார். 90-களில் வரும் ஹிப்ஹாப் தமிழா கதாபாத்திரத்தை மிடில் ஏஜ் தோற்றத்தில் பாபா பாஸ்கர் ஏற்றுள்ளார். இப்படி மூன்று காலகட்டங்களில், மூன்று தலைமுறைகளின் முயற்சியும் போராட்டமும் இறுதியில் வென்றதா என்பதே படத்தின் கதை. ஹீரோ மெட்டீரியலாக ஹிப்ஹாப் தமிழா! கதையின் நாயகன் அந்தஸ்தைவிட கதாநாயகன் அந்தஸ்துதான் பெரிது என மாஸ் காட்டியுள...

லெனின் பாண்டியன் - திரைப்பட விமர்சனம்

Image
அரசியல் செல்வாக்குள்ள வில்லன்களை, எளிய மனிதர்கள் எதிர்கொள்ளும் கதை. தர்ஷன் கணேசன் ஒரு கான்ஸ்டபிள். காவல் நிலையத்திலேயே பெரிய மரியாதை இல்லாமல் இருக்கும் அவர், சிவகங்கை மாவட்டத்தில் நடைபெறும் பெருமளவிலான மணற்கொள்ளையால் பாதிக்கப்படும் எளிய மனிதரான கங்கை அமரனுக்கு துணையாக நிற்கிறார். அந்தப் பிரச்சினையை கங்கை அமரன் நீதிமன்றம் வரை கொண்டு செல்ல, அவருடன் தர்ஷனும் கை கோர்க்கிறார். இறுதியில் ஜெயித்தது அரசியலா? அறமா? என்பதுதான் படத்தின் மையக்கரு. நடிகராக தர்ஷன் கணேசன் இன்னும் சிறப்பான பெர்பார்மன்ஸை கொடுத்திருக்கலாம். இருப்பினும் சில காட்சிகளில் தனது நடிப்பால் ஸ்கோர் செய்கிறார். ஸ்ரீரிட்டா ராவ் இயல்பான நடிப்பால் கவர்கிறார். கங்கை அமரன் சில இடங்களில் நேச்சுரலை தவறவிட்டாலும், பல காட்சிகளில் சிறப்பாக தேறுகிறார். ரோஜா தனக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை குறைவில்லாமல் செய்துள்ளார். சில காட்சிகளே வந்தாலும் ஜார்ஜ் மரியன் பின்னியெடுக்கிறார். ஆடுகளம் நரேன், யுகேந்திரன், போஸ் வெங்கட் உள்ளிட்டவர்களும் தங்களது பங்களிப்பை சிறப்பாகச் செய்துள்ளனர். இளையராஜாவின் இசை படத்திற்கு உயிரோட்டம் கொடுக்கிறது...

தி கிராண்ட் மாஸ்டர் விமர்சனம்

Image
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற சமூகநீதிக் கருத்தை செஸ் விளையாட்டின் பின்னணியில் பேசியிருக்கிறது தி கிராண்ட் மாஸ்டர். தூய்மைப் பணியாளரான அபர்ணதியின் மகன் அஸ்வினுக்கு செஸ் மீது ஆர்வம். ஆனால் சமூக ஏற்றத்தாழ்வுகள் அவனது திறமைக்குத் தடையாக நிற்கின்றன. செஸ் கற்றுக்கொடுக்க யாரும் இல்லாத நிலையில், தாயே அவனுக்கு பயிற்சி அளிக்கிறார். அபர்ணதிக்கு செஸ் எப்படி தெரியும், அவரது கடந்த காலம் என்ன, அஸ்வின் சாதிக்கிறானா என்பதே படத்தின் மையக்கதை. அபர்ணதி தனது கதாபாத்திரத்தின் வலியையும் போராட்டத்தையும் இயல்பாக வெளிப்படுத்தியுள்ளார். சிறுவன் அஸ்வினும் கவனம் ஈர்க்கிறார். குறிப்பாக காவல்நிலையத்தில் ஆசிரியரை வைத்து செஸ் விளையாட அழைக்கும் காட்சி குறிப்பிடத்தக்கது. லிங்கேஷ் உள்ளிட்ட மற்ற நடிகர்களும் தங்கள் கதாபாத்திரங்களை இயல்பாகக் கையாண்டுள்ளனர். தினேஷ் ஆண்டனியின் இசையும், அர்ஜுன் ரவியின் ஒளிப்பதிவும் படத்திற்கு துணை நிற்கின்றன. திறமை இருந்தாலும் அதை நிரூபிக்க வாய்ப்பு எல்லோருக்கும் கிடைப்பதில்லை என்ற கருத்தை கமர்சியல் அம்சங்களுடன் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் வெற்றிச்செழியன். கதையில் இ...

பீப் - விமர்சனம்

Image
ரொமாண்டிக் திரில்லராக வென்றதா? இயக்குநர் L. சண்முக சுந்தரின் முயற்சி ஒரு வித்தியாசமான ஒன்லைனை மையமாக வைத்து ரொமாண்டிக் திரில்லர் படத்தை கொடுக்க முயன்றிருக்கிறார் இயக்குநர் L. சண்முக சுந்தர். அவருடைய இந்த முயற்சி எந்த அளவுக்கு வெற்றி பெற்றிருக்கிறது? கல்லூரியில் படிக்கும் இளைஞர்களில் ஒருவருக்கு ஒரு விநோதமான சக்தி இருக்கிறது. அவர் யாரையாவது புகைப்படத்திலோ அல்லது வீடியோவிலோ பார்த்தால், அந்த நபரின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அப்படியே விஷுவலாக பார்க்க முடியும். அதில் பாசிட்டிவ், நெகட்டிவ் என இருவிதமான நிகழ்வுகளும் அவருக்குத் தெரிகின்றன. இந்நிலையில், அவரது தோழி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழக்கிறார். அந்த மரணத்திற்கான காரணம் என்ன? அதை இந்த இளைஞனின் விநோத சக்தியால் கண்டுபிடிக்க முடிந்ததா? என்பதுதான் படத்தின் பிரதான கதை. இதனுடன் சில கிளைக்கதைகளும் பயணிக்கின்றன. நடிப்பில் அசத்திய புதுமுகங்கள் படத்தில் நடித்துள்ள பெரும்பாலான நடிகர்கள் நமக்குப் பரிச்சயமில்லாத முகங்களாக இருந்தாலும், அவர்களின் நடிப்பு இயல்பாக அமைந்துள்ளது. யாமினி லக்‌ஷ்மணன், பிரேமா கன்னா, ஆச்சர்யா, அருண்மோகன், ஷ்ரவன்...

நல்ல படம் - திரைவிமர்சனம்

Image
நல்ல படம், டைட்டில் போலவே இருக்கிறதா?  குடியே மதி என சாய்ந்து கிடக்கும் ஹீரோ. அவரை காதலிக்கும் ஹீரோயின். ஹீரோவைச் சுற்றியிருப்பவர்கள் அனைவரும், “திருந்து, திருந்து” என அறிவுரை சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் ஹீரோவுக்கும் அவரது நண்பர்களுக்கும் மதுப்பழக்கத்தால் தொடர்ந்து பல்வேறு இன்னல்கள் வந்தாலும், இந்த மதுபிரியர் மறுமலர்ச்சி கழகத்தினர் சரக்கை விடுவதாக இல்லை! ஒரு கட்டத்தில் இந்தியா முழுவதும் மதுவிலக்கு அமல்படுத்தப்படுகிறது. அதன்பிறகு இந்தக் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் என்ன ஆனார்கள்? இறுதியில் படம் சொல்ல வரும் மெசேஜ் என்ன? என்பதுதான் படத்தின் கதையாகப் பயணிக்கிறது. இயல்பான நடிப்பு ஹீரோ ஹரிஷ் அழகுபாண்டியன் பார்க்க நமது பக்கத்து வீட்டுப் பையன் போலவே இருக்கிறார். அவரது நடிப்பும் இயல்பாக அமைந்துள்ளது. ஹீரோயின் தனலெட்சுமி பார்ப்பதற்கு அழகாக இருக்கிறார். சில காட்சிகளில் தனது இருப்பை அழுத்தமாகப் பதிவு செய்கிறார். கல்கி ராஜா, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களும் ஓரளவு கவனம் ஈர்க்கின்றன. தொழில்நுட்ப அம்சங்கள் இனியன் ஜே. ஹாரிஸ் தனது ஒளிப்பதிவை இன்னும் செம்ம...

Dark Heaven - விமர்சனம்

Image
5 தொடர் கொலைகளும்... திகில் விசாரணையும்! தொடர்கொலைகளும், அதைத் தொடர்ந்து நடைபெறும் பரபரப்பான விசாரணையும்தான் இந்தத் திரில்லர் படத்தின் மையக்கரு. இன்றைய தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள மேக்கரைதான் கதையின் களம். பெரும்பாலான கதை 2007-ஆம் ஆண்டில் நடைபெறுகிறது. அப்போது மேக்கரை திருநெல்வேலி மாவட்டத்தின் கீழ் இருந்தது. மேக்கரையில் ஒவ்வொரு ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆண்கள் மட்டும் மர்மமான முறையில் கொல்லப்படுகிறார்கள். அப்படியொரு ஏழாண்டு கொலை சீசனில், ஹீரோ தனது மனைவி மற்றும் குழந்தையுடன் அந்த ஊருக்கு இன்ஸ்பெக்டராக வருகிறார். அவர் வந்த பிறகும் தொடர் கொலைகள் தொடர்கின்றன. இந்தக் கொலைகளுக்குப் பின்னால் இருப்பது யார்? அதன் பின்னணி என்ன? ஹீரோ அதை எப்படிக் கண்டுபிடிக்கிறார்? என்பதுதான் படத்தின் மீதிக்கதை. நடிப்பில் இன்னும் கவனம் தேவை நாயகன் சித்து இன்னும் நடிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பல காட்சிகளில் விரைப்பாக நிற்பதையே நடிப்பு என நினைத்துவிட்டாரோ என்ற எண்ணம் வருகிறது. குறிப்பாக எமோஷனல் காட்சிகளில் இன்னும் இயல்பான நடிப்பை வழங்கியிருக்கலாம். தர்ஷிகா அழகாக இருப்பதுடன், தனக்குக் கிட...

இம்மோர்ட்டல் - திரைவிமர்சனம்

Image
1000 ஆண்டுகளுக்கு முன்பு ஆதிவாசி தம்பதியர்க்கு ஒரு குழந்தை பிறக்கிறது. அந்த குழந்தை மனிதப்பிறவியே இல்லை என்று தெரிந்த அந்த ஆதிவாசி தகப்பன் குழந்தையை வீசிவிடுகிறார். இப்போது கதை நிகழ்காலத்திற்கு வருகிறது. பிரிண்டிங் பிரஸில் வேலை செய்யும் ஜிவி பிரகாஷை பேரழகியான கயாடுலோஹர் ரூம் ஷேரிங் செய்ய அழைக்கிறார். அது ரூம் அல்ல. மாளிகை! அங்கு ஜிவி பிரகாஷுக்கு எல்லாமே கிடைக்கிறது. ஒரு கட்டத்தில் ஜிவி பிரகாஷ் கயாடு லோஹர் அமானுஷ்ய பெண் என்பதை அறிகிறார். அதன்பின் அவர் கயாடுலோஹரின் பிடியில் இருந்து தப்பினாரா…கயாடுலோஹர் யார்? என்பது தான் கதை ஜிவி பிரகாஷ் ஈசியாக ஸ்கோர் செய்யும் கேரக்டரில் நடித்துள்ளார். பேச்சுலர், நாச்சியார், சர்வம் தாளமயம் ஆகிய படங்களைப் போல நடிகராக தனித்து ஸ்கோர் செய்துள்ளார் ஜிவி! கயாடு லோஹரை இந்தப்படம் போல் வேறு எந்தப்படத்திலும் யாரும் இவ்வளவு அழகாக காட்டவில்லை. பேரழகை அள்ளி வந்திருக்கிறார் லோஹர். இப்படியொரு ராட்சசியிடம் மாட்டிக்கொண்டால் தான் என்ன? என்பது போன்ற அவரின் லுக் வேறலெவல். மாறன் ஆதித்யா கதிர் ஒகே மார்க் வாங்குகிறார்கள். கார்த்திக் சீனிவாசன் அட்டகாசமாக நடித்துள்ளார...

I'm Game - திரை விமர்சனம்

Image
 "ஐஎம் கேம் என்ற தலைப்புக்கு மாறாக இரும்பு கை மாயாவி என்ற தலைப்பே பொருத்தமாக இருக்கும்"  சூதாட்டம் என்பது பெரும் வரலாற்றைக் கொண்டது. மகாபாரதம் காலம் தொட்டு சூதாட்டம் நிகழ்த்திய சோகங்களும் துன்பங்களும் நிறைய! இன்றைய நவீனகாலத்திலும் சூதாட்டம் பெரும் இழப்புகளை கொண்டு வருகிறது. அதை அடிப்படையாக வைத்து இந்தக் கதையை அணுகியிருக்கிறார்கள் பெரும் சூதாட்ட வெறியரான துல்கர் சல்மான், நிறைய கடன் வாங்கி அந்தக் கடன்காரர்களிடமிருந்து தப்பிக்கும் போது ஒரு விபத்தில் தன் வலது கையை இழந்து விடுகிறார். ஆல்ட்டர்நேட்டாக இன்னொரு கை அவருக்குப் பொருத்தப்படுகிறது. பொருத்தப்பட்ட அந்தக் கை கிரிக்கெட் வீரரான ஆண்டனி வர்கீஸினுடையது. அந்தக் கையைப் பெற்ற துல்கர் சல்மானுக்கு பல அமானுஷ்யங்கள் நடக்கிறது. அதற்குப் பின்னால் பெரும் கதை இருக்கிறது. அந்தக் கதையில் ஒரு கேம்லிங் வெறியர் இருக்கிறார். அவரை கண்டடையும் துல்கர் அவரை எப்படி களையெடுத்தார் என்பது படத்தின் கதை நடிகராக காட்சிக்குக் காட்சி நம்மை வியக்க வைக்கிறார் துல்கர் சல்மான். அவரது பணக்கார மேனரிசம் ரசிக்க வைக்கிறது. ஆக்சனிலும் தூள் பரத்துகிறார். கயாட...

மொத ராத்திரி' திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழாவில் உருக்கமாக பேசிய ரிஷிகாந்த்

Image
ராஜா கருப்பசாமி இயக்கியுள்ள இப்படத்தில் ரிஷிகாந்த் மற்றும் அனிஷ்மா அனில்குமார் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் 'மொத ராத்திரி'. ஆகஸ்ட் 21 ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகி வெற்றி பெற்ற இந்த திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது.  தயாரிப்பாளர் நவீன் யெர்னேனி, "இந்த படத்தை தயாரித்ததில் மிகுந்த மகிழ்ச்சி. ரசிகர்களும் இந்த படத்தை கொண்டாடுகின்றனர். இயக்குநர் ராஜா, ஹீரோ ரிஷிகாந்த் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள். ராஜா கதை சொன்ன உடனே மிகவும் பிடித்து விட்டது. ஹவுஸ்ஃபுல்லாக எல்லா திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. மற்ற மொழிகளிலும் இந்த படத்தை எடுத்துச் செல்லும் எண்ணம் இருக்கிறது. 'குட் பேட் அக்லி', 'டியூட்' படங்களை தொடர்ந்து தமிழில் இது எங்களுக்கு மூன்றாவது வெற்றி படம். இதோடு 'இருமுடி கட்டு' படத்தையும் வெற்றி பெற வைத்த அனைவருக்கும் நன்றி" என்றார். ஒளிப்பதிவாளர் சுரேந்திரன் பரஞ்சோதி,"நல்ல படத்தில் வேலை செய்து இருக்கிறோம் என்று திருப்தி உள்ளது. வாய்ப்ப...