Posts

Showing posts with the label Roja

லெனின் பாண்டியன் - திரைப்பட விமர்சனம்

Image
அரசியல் செல்வாக்குள்ள வில்லன்களை, எளிய மனிதர்கள் எதிர்கொள்ளும் கதை. தர்ஷன் கணேசன் ஒரு கான்ஸ்டபிள். காவல் நிலையத்திலேயே பெரிய மரியாதை இல்லாமல் இருக்கும் அவர், சிவகங்கை மாவட்டத்தில் நடைபெறும் பெருமளவிலான மணற்கொள்ளையால் பாதிக்கப்படும் எளிய மனிதரான கங்கை அமரனுக்கு துணையாக நிற்கிறார். அந்தப் பிரச்சினையை கங்கை அமரன் நீதிமன்றம் வரை கொண்டு செல்ல, அவருடன் தர்ஷனும் கை கோர்க்கிறார். இறுதியில் ஜெயித்தது அரசியலா? அறமா? என்பதுதான் படத்தின் மையக்கரு. நடிகராக தர்ஷன் கணேசன் இன்னும் சிறப்பான பெர்பார்மன்ஸை கொடுத்திருக்கலாம். இருப்பினும் சில காட்சிகளில் தனது நடிப்பால் ஸ்கோர் செய்கிறார். ஸ்ரீரிட்டா ராவ் இயல்பான நடிப்பால் கவர்கிறார். கங்கை அமரன் சில இடங்களில் நேச்சுரலை தவறவிட்டாலும், பல காட்சிகளில் சிறப்பாக தேறுகிறார். ரோஜா தனக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை குறைவில்லாமல் செய்துள்ளார். சில காட்சிகளே வந்தாலும் ஜார்ஜ் மரியன் பின்னியெடுக்கிறார். ஆடுகளம் நரேன், யுகேந்திரன், போஸ் வெங்கட் உள்ளிட்டவர்களும் தங்களது பங்களிப்பை சிறப்பாகச் செய்துள்ளனர். இளையராஜாவின் இசை படத்திற்கு உயிரோட்டம் கொடுக்கிறது...