Posts

Showing posts with the label Dulquar Salman

துல்கர் சல்மானின் “ஐ ம் கேம்” ( I Am Game) செப்டம்பர் 3-ம் தேதி ரிலீஸ் ஆகிறது – பிரம்மாண்ட உலகளாவிய வெளியீட்டுக்கு திட்டம்!

Image
துல்கர் சல்மான் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள  “ஐ ம் கேம்”’ திரைப்படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் வரும் செப்டம்பர் 3, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. பிரம்மாண்டமான உலகளாவிய வெளியீடாக இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆகஸ்ட் 20 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்னும் அதிகமான திரையரங்குகள் மற்றும் சர்வதேச சந்தைகளில் படத்தை வெளியிடுவதற்காக, ரிலீஸ் தேதி இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. துல்கர் சல்மானின் Wayfarer Films நிறுவனம் தயாரித்துள்ள இந்த பிரம்மாண்ட ஃபேண்டஸி த்ரில்லர், அவரது திரைப்பயணத்தில் மிகப்பெரிய படங்களில் ஒன்றாக உருவாகியுள்ளது. இப்படத்தை நஹாஸ் ஹிதாயத் இயக்கியுள்ளார். துல்கர் சல்மான் மற்றும் ஜோம் வர்கீஸ் இணைந்து Wayfarer Films பேனரில் தயாரித்துள்ள இப்படத்தின் திரைக்கதையை சஜீர் பாபா, இஸ்மாயில் அபு பக்கர் மற்றும் பிலால் மொய்து ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். வசனங்களை சஜீர் பாபா, ஆதர்ஷ் சுகுமாரன் மற்றும் ஷபாஸ...

துல்கர் சல்மானின் 'ஐ ம் கேம்- I Am Game' திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு ஆகஸ்ட் 20ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில்!

Image
துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் ' ஐ ம் கேம்' திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகி உள்ளது. 'அருகே அருகே' ( Arugey Arugey..) என பெயரிடப்பட்டுள்ள இப்பாடலுக்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். பாடலை பாடலாசிரியர் விக்னேஷ் ராமகிருஷ்ணா எழுத, பின்னணி பாடகர் அர்மான் மாலிக் பாடியுள்ளார். இந்தப் பாடல் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ளது. மலையாள பதிப்பிற்கு பாடலாசிரியர் ஷார்பு எழுத, பின்னணி பாடகர் அர்மான் மாலிக் பாடியிருக்கிறார். தெலுங்கு பதிப்பின் பாடலை சனாரே எழுத, அர்மான் மாலிக் பாடியுள்ளார். இந்தி பதிப்பின் பாடலை நுமன் கோகர் எழுத, அர்மான் மாலிக் பாடியுள்ளார். கன்னட பதிப்பின் பாடலை ஹிருதயா சிவா எழுத, பாடகர் அனிருத் சுஸ்வரம் பாடியுள்ளார்.  ரசிகர்கள் மற்றும் திரைப்பட ஆர்வலர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள :ஐ அம் கேம்' திரைப்படம் - ஆகஸ்ட் 20ஆம் தேதி ஓணம் பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. துல்கர் சல்மானின் வேஃபரர் ஃபிலிம்ஸ் - Wayfarer Films தயாரிப்பில் உருவாக...