மாமன் திரைப்பட விமர்சனம்

 

சூரி, ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில், இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கிய மாமன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இப்படம் எப்படி இருக்கிறது? வாங்க, பார்க்கலாம்!

கதை என்ன?

சூரியின் அக்கா ஸ்வாசிகாவுக்கு 10 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு முதல் முறையாக ஆண் குழந்தை பிறக்கிறது. இதனால் சந்தோஷமடையும் சூரி, தனது மருமகனை அளவுக்கு அதிகமாக பாசத்தோடு பார்த்துக்கொள்கிறார். காலையில் குளிப்பாட்டுவது முதல் இரவு தூங்க வைப்பது வரை, பெற்றோர்கள் செய்ய வேண்டிய எல்லாவற்றையும் சூரியே செய்கிறார். இதனால், அந்தக் குழந்தை மாமனை விட்டு ஒரு நிமிடம் கூட பிரிய மாட்டேன் என்று இருக்கிறது.

இந்த நிலையில், சூரிக்கு ஐஸ்வர்யா லட்சுமியுடன் திருமணம் நடக்கிறது. ஆனால், திருமணத்துக்குப் பிறகும் குழந்தை சூரியை விடாமல் ஒட்டிக்கொண்டிருக்கிறது. முதலில் இதை பெரிதாக எடுத்துக்கொள்ளாத ஐஸ்வர்யா, பின்னர் இதனால் வருத்தப்படத் தொடங்குகிறார். இதனால் சூரிக்கும் ஐஸ்வர்யாவுக்கும் பெரிய பிரச்சனை உருவாகி, குடும்பத்தில் விரிசல் ஏற்படுகிறது. இறுதியில் இந்த உறவுகள் மீண்டும் இணைந்தனவா? அதுதான் படத்தின் மீதிக்கதை.

படம் எப்படி இருக்கு?

சூரி: மாமனாகவும், கணவனாகவும், தம்பியாகவும் பாசத்தில் திணறும் ஒரு ஆணின் உணர்வுகளை அற்புதமாகக் காட்டியிருக்கிறார். அவரது நடிப்பு படத்தின் மிகப்பெரிய பலம்.


ஐஸ்வர்யா லட்சுமி & ஸ்வாசிகா: இருவரும் தங்களது கதாபாத்திரங்களில் அசத்தியிருக்கின்றனர். குறிப்பாக, உணர்ச்சிகரமான காட்சிகளில் கலக்கியிருக்கிறார்கள்.


மருமகன் கதாபாத்திரம்: சூரியின் மருமகனாக வரும் சிறுவனின் நடிப்பு மிகவும் இயல்பாகவும் அழகாகவும் இருக்கிறது.


மற்றவர்கள்: ராஜ்கிரண், விஜி சந்திரசேகர், பாபா பாஸ்கர் உள்ளிட்டோர் தங்கள் பங்கை நன்றாகச் செய்திருக்கிறார்கள்.


இயக்கம் & தொழில்நுட்பம்

இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ், உணர்ச்சிகரமான காட்சிகளை அழகாகப் படமாக்கியிருக்கிறார். கதாபாத்திரங்களை வடிவமைத்த விதமும் ரசிக்க வைக்கிறது. ஒளிப்பதிவு, பின்னணி இசை, பாடல்கள், எடிட்டிங் எல்லாமே படத்துக்கு பொருத்தமாக இருக்கிறது.

பலம்

💓 சூரி, ஐஸ்வர்யா, ஸ்வாசிகாவின் நடிப்பு.


💓 உணர்ச்சிகரமான காட்சிகள்.


💓 குடும்ப உறவுகளை அழகாகச் சொல்லும் கதைக்களம்.


பலவீனம்

❤படம் முழுக்க உணர்ச்சிகரமான காட்சிகள் மட்டுமே இருப்பதால், சில     இடங்களில் சற்று தொய்வு ஏற்படுகிறது.


❤இளைய தலைமுறை (2k கிட்ஸ்) பார்வையாளர்களுக்கு இந்தக் கதை எந்த அளவு பிடிக்கும் என்பது சந்தேகமே.


மொத்தத்தில்

"மாமன்" ஒரு எமோஷனல் ரைடு – குடும்பத்தை நேசிப்பவர்களுக்கு விருப்பமாக இருக்கலாம்

Comments

Thandora Talkies

கானா உலகநாதன் முக்கிய வேடத்தில் — “ஐயம்” திரைப்படம்!

ராட்ட - சினிமா விமர்சனம்

படைத்தலைவன் திரைவிமர்சனம் - ஒரு பார்வை

சப்தம்’ படப்பிடிப்பில் அமானுஷ்ய விஷயங்களை உணர்ந்தேன்” ; நடிகர் ஆதியின் அதிர்ச்சி அனுபவம்