லீடர் - திரைவிமர்சனம்


லீடர் லெஜண்ட் நடித்த விஜய் படம்” எனச்சொல்லும் படி ஒரு தெறி சம்பவத்தை செய்துள்ளனர் இயக்குநர் துரை செந்தில்குமாரும், லெஜண்ட் சரவணனும்

தூத்துக்குடி ஹார்பரிலிருந்து சர்வீஸுக்காக வரும் கார்களை ரிப்பேர் செய்து கொடுக்கும் வேலை செய்கிறார் ஹீரோ சரவணன். அவருக்கு செவித்திறன் குறைபாடுள்ள ஒரு மகள். மகள் என்றால் அவருக்கு உயிர். ஒருபுறம் தூத்துக்குடி ஹார்பரில் கண்டெய்னர் மூலம் நாட்டிற்கு அச்சுறுத்தலான ஒரு பொருளை கடத்த திட்டுமிட்டுள்ளது வில்லன் சந்தோஷ்பிரதாப் டீம்! சாதா மெக்கானிக், எப்படி இம்மாம் பெரிய ட்ராபுக்குள் செல்கிறார் என்பதும், அப்படிச் சென்றபின் அவர் யாராக இருக்கிறார் என்பதும் தான் லீடரின் மீதி திரைக்கதை

கதாநாயகனாக லெஜண்ட் படத்தில் அறிமுகமான சரவணன், இந்தப்படத்தில் கதையின் நாயகனாக வந்துள்ளார். சிற்சில எமோஷ்னல் காட்சிகளில் கூட குறை தெரியாதபடி நடித்துள்ளார். ஆக்சன் காட்சிகளில் நிஜமாகவே அதகளம் செய்துள்ளார். ஆண்ட்ரியா கேரக்டர் வலுவாக எழுதப்பட்டுள்ளது. அவரும் சிறப்பாக நடித்துள்ளார். ஷாம் நல்ல ரோலில் பரிணமித்துள்ளார். சந்தோஷ் பிரதாப் பெரிய கேரக்டரைச் சரியாகச்செய்து ஸ்கோர் வாங்கியுள்ளார். கதாநாயகி பாயல் ராஜ்புட் பெயர் சொல்லும்படி அசத்தியுள்ளார். விடிவி கணேஷ், பாகுபலி பிரபாகர், லால் உள்பட இன்னும் பல கேரக்டர்கள் சிறப்பாக நடித்துள்ளனர்

வெங்கடேஷின் கேமரா வொர்க் அட்டகாசமாக வொர்க் ஆகியுள்ளது. குறிப்பாக ஆக்சன் காட்சிகளில் மனிதர் பின்னியெடுத்துள்ளார். ஜிப்ரான் இசையில் பாடல்கள் தரமாக வந்துள்ளது. பேக்ரவுண்ட் மிசியூக்கில் அவர் எப்போதுமே மன்னன் தானே! சண்டைப்பயிற்சி மகேஷ் மாத்தீவ். நிறைய ரிஸ்க்கான காட்சிகளை அண்ணாச்சியை வைத்து அழகாக கேண்டில் செய்துள்ளார். க்ளைமாக்ஸ் ரெயில் பைட் மாஸ்டர் பீஸ்!

துரை செந்தில்குமார் தனது எல்லாப்படங்களிலும் கமர்சியல் மீட்டருக்கான ரைட்டிங்-ஐ தவறாமல் மேற்கொள்வார். இப்படத்திலும் அது அழகாக தொடர்ந்துள்ளது. மேலும் இப்படத்தில் திரைக்கதையில் அதீத மெனக்கெட்லைப் போட்டுள்ளார். அதற்கான ரிசல்ட் ஒவ்வொரு ட்விஸ்ட் ஓப்பன் ஆகும் போதும் தியேட்டரில் பறக்கும் கைத்தட்டல் மூலமாக தெரிகிறது. குட்டி குட்டி சர்ப்ரைஸ்கள் படத்தின் ஆகப்பெரும் பில்லர்கள். இந்த வாரத்தை நீங்கள் தாராளமாக லீடரோடு கொண்டாடலாம்

Comments

Thandora Talkies

கானா உலகநாதன் முக்கிய வேடத்தில் — “ஐயம்” திரைப்படம்!

ராட்ட - சினிமா விமர்சனம்

படைத்தலைவன் திரைவிமர்சனம் - ஒரு பார்வை

சப்தம்’ படப்பிடிப்பில் அமானுஷ்ய விஷயங்களை உணர்ந்தேன்” ; நடிகர் ஆதியின் அதிர்ச்சி அனுபவம்