ஹிட் 3 (HIT: The Third Case) திரைப்பட விமர்சனம்
கதை:
விசாகப்பட்டினத்தில் எஸ்.பி. அர்ஜுன் சர்க்கார் (நானி) ஒரு கொலை வழக்கை விசாரிக்கிறார், ஆனால் அந்தக் கொலையை அவரே செய்திருக்கிறார். மற்றொரு கொலையின்போது பெண் போலீஸ் அவரைத் தடுக்க முயல, அவர் கொடூரமாகக் கொலை செய்கிறார். பிளாஷ்பேக்கில், ஜம்மு காஷ்மீரில் அவர் சீரியல் கில்லர்களை விசாரித்தது, CTK எனும் டார்க் வெப் கும்பல் மூலம் நடக்கும் கொலைகள் பற்றிய திடுக்கிடும் உண்மைகள் வெளியாகின்றன. இந்தக் கும்பலின் தலைவனைக் கண்டறிவதே கதை.
சண்டை காட்சி :
ஹிட் 3 படத்தின் சண்டைக் காட்சிகள் முந்தைய பாகங்களை விட தீவிரமானவை. நானியின் இறுக்கமான முகபாவனையுடன் கொலையாளிகளை விசாரிக்கும் காட்சிகள் பதற்றமூட்டுகின்றன. சில இடங்களில் அதிக வன்முறைக் காட்சிகள் அதிர்ச்சியளிக்கின்றன. கிளைமாக்ஸில் நானியின் வெறித்தனமான சண்டைகள் ருத்ர தாண்டவமாக அமைந்து, ரசிகர்களை பிரமிக்க வைக்கின்றன. ஒரு வார்த்தையில்: அபாரம்!
பின்னணி இசை & ஒளிப்பதிவு:
ஹிட் 3 படத்தில் மிக்கி ஜே. மேயரின் பின்னணி இசை மிகப்பெரிய பலம். க்ரைம் த்ரில்லர் பாணிக்கு ஏற்றவாறு இசை பதற்றத்தை உயர்த்துகிறது, குறிப்பாக கிளைமாக்ஸில் நானியின் ஹீரோயிசத்தை மிரட்டலாக உயர்த்துகிறது. சில இடங்களில் இசை சற்று அதிகமாகத் தோன்றினாலும், மொத்தத்தில் அருமை. ஒளிப்பதிவாளர் சானு ஜான் வர்கீஸ் ஜம்மு காஷ்மீர், அருணாச்சல பிரதேசம், பீகார் போன்ற இடங்களை அழகாகப் படம்பிடித்து படத்திற்கு கூடுதல் ஈர்ப்பு சேர்த்திருக்கிறார்.
பிளஸ்:
🩸 நானியின் தீவிரமான நடிப்பு, ஜம்மு காஷ்மீர், அருணாச்சல பிரதேசத்தின் அழகிய ஒளிப்பதிவு, மிக்கி ஜே. மேயரின் பின்னணி இசை, மிரட்டலான சண்டைக் காட்சிகள், அப்பா-மகன் உறவு, புதிய கோணத்தில் குற்றங்களை இணைத்த திரைக்கதை.
மைனஸ்:
🩸பலவீனமான வில்லன் (பிரதீக் பப்பர்), இரண்டாம் பாதியில் விறுவிறுப்பு குறைவு, அதிக வன்முறை, ஓவர் ஹீரோயிசம், ஹீரோயினுக்கு (ஸ்ரீநிதி ஷெட்டி) முக்கியத்துவம் இல்லை, தேவையற்ற சில ட்விஸ்ட்கள்.
மொத்தத்தில்:
நானியின் ஆக்ரோஷமான நடிப்பு, ஆக்ஷன் காட்சிகள், ஒளிப்பதிவு ஆகியவை படத்தை உயர்த்தினாலும், பலவீனமான வில்லன், அதிக வன்முறை, கதையின் நீளம் ஆகியவை ஏமாற்றம் தருகின்றன. ஆக்ஷன் த்ரில்லர் ரசிகர்களுக்கு ஒருமுறை பார்க்கலாம். கிளைமாக்ஸில் கார்த்தியின் கேமியோ, ஹிட் 4-ஐ எதிர்பார்க்க வைக்கிறது.



Comments
Post a Comment