ரெட்ரோ பட விமர்சனம் - ஒரு பார்வை


 கதை:


பூசாரி கொலையுடன் தொடங்கும் கதையில், ஸ்வாசிகா ஒரு சிறுவனை (சூர்யா) தன் மகனாக வளர்க்கிறார். ஆனால், அவரது கேங்ஸ்டர் கணவர் ஜோஜு ஜார்ஜுக்கு இது பிடிக்கவில்லை. ஸ்வாசிகா இறந்த பின், சூர்யா தன் தந்தையாக ஜோஜுவை ஏற்று, எதிரிகளை எதிர்க்கிறார். சிரிக்கத் தெரியாத சூர்யா, பூஜா ஹெக்டேவுடன் காதலில் விழுந்து அமைதி வாழ்க்கை தேடுகிறார். ஆனால், ஒரு தவறால் ஜோஜு பூஜாவை கொல்ல முயல, சூர்யா அவரை எதிர்க்கிறார். சிறையில் இருந்து விடுபட்டு, அந்தமானில் பூஜாவை தேடி செல்லும் சூர்யா, அங்கு நாசரின் கொடூர ஆட்சியில் சிக்கிய மக்களை காப்பாற்றுகிறாரா, ஜோஜுவின் பழிவாங்கலை எப்படி எதிர்கொள்கிறார் என்பது கதை.


படம் எப்படி இருக்கு? 

படத்தின் ஆரம்பம் கனிமா பாடல் மற்றும் சிங்கிள் ஷாட் சண்டைக் காட்சியுடன் அட்டகாசமாக தொடங்குகிறது. கார்த்திக் சுப்புராஜ் சூர்யாவுக்கு சூப்பரான படம் கொடுத்திருப்பதாக ரசிகர்கள் காதல் பகுதியில் பாராட்டினாலும், நகைச்சுவை பகுதி பலவீனமாக உள்ளது.  சில காட்சிகள் அருமையாக இருந்தாலும், இடைவேளைக்கு முன் சூர்யா சிரிக்க ஆரம்பிக்கும்போது படத்தின் ஈர்ப்பு குறைந்து, ரசிகர்களின் ஆர்வமும் அடங்கி விடுகிறது.




பிளஸ்:

சூர்யாவின் அட்டகாச நடிப்பு, ஜோஜு ஜார்ஜ் மற்றும் பூஜாவின் கதாபாத்திரங்கள், சந்தோஷ் நாராயணனின் இசை, அந்தமானின் அழகிய ஒளிப்பதிவு, ஆக்ஷன் மற்றும் எமோஷனல் காட்சிகளில் சூர்யாவின் ஆதிக்கம், வித்தியாசமான கிளைமாக்ஸ்

மைனஸ்:

நீளமான, குழப்பமான திரைக்கதை, பல கிளை கதைகள், சில சுமாரான பகுதிகள் (பிரகாஷ் ராஜ், ஸ்ரேயா பாடல்), வில்லன்களின் பலவீனமான முடிவு.





மொத்தத்தில்:

சூர்யாவின் நடிப்பு மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஹாலிவுட் ஸ்டைல் மேக்கிங்கிற்காக ஒருமுறை தியேட்டரில் பார்க்கலாம். ஆனால், பிளாக்பஸ்டர் ஆக வேண்டிய படத்தை திரைக்கதை குழப்பங்கள் கெடுத்துவிட்டன.

Comments

Thandora Talkies

கானா உலகநாதன் முக்கிய வேடத்தில் — “ஐயம்” திரைப்படம்!

ராட்ட - சினிமா விமர்சனம்

படைத்தலைவன் திரைவிமர்சனம் - ஒரு பார்வை

சப்தம்’ படப்பிடிப்பில் அமானுஷ்ய விஷயங்களை உணர்ந்தேன்” ; நடிகர் ஆதியின் அதிர்ச்சி அனுபவம்