‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தின் பிரம்மாண்ட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா
‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. ஜேஷன் ஸ்டுடியோஸ், ஸ்ரீதயாகாரன் சினி புரொடக்ஷன் மற்றும் MIY ஸ்டுடியோஸ் தயாரிப்பில், பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படத்தில் உதயா, அஜ்மல், யோகி பாபு முதன்முறையாக இணைந்து நடித்துள்ளனர். கன்னட இயக்குநர் பிரபு ஶ்ரீநிவாஸ் இயக்கிய இப்படத்தில் ஜான்விகா நாயகியாக அறிமுகமாகிறார். நரேன் பாலகுமார் இசையமைப்பில், மருதநாயகம் ஒளிப்பதிவு, கே.எல்.பிரவீன் படத்தொகுப்பு, ஆனந்த் மணி கலை இயக்கம், ஸ்டண்ட் சில்வா சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளனர்.
விழாவில் தயாரிப்பாளர் தயா என். பன்னீர்செல்வம், உதயாவின் பங்களிப்பை பாராட்ட, இயக்குநர் கேயார், உதயாவின் திறமையையும் படத்தின் தரத்தையும் புகழ்ந்தார். இயக்குநர் பிரபு, உதயாவின் ஒத்துழைப்பையும், பஸ் சண்டைக்காட்சியின் தனித்தன்மையையும் எடுத்துரைத்தார். இசையமைப்பாளர் நரேன் பாலகுமார், பாடல்களின் வரவேற்புக்கு நன்றி கூறினார்.
நடிகர் உதயா பேசுகையில், "எனது தாயார் கடவுளாக இருந்து என்னை வழிநடத்துகிறார். என்னை அவர் எங்கிருந்தோ பார்த்துக் கொண்டே தான் இருக்கிறார், ஆசீர்வதித்துக் கொண்டே தான் இருக்கிறார். திரையுலகத்தை விட்டே போய் விடலாம் என்று கூட யோசித்திருக்கிறேன், ஆனால் எனது தன்னம்பிக்கை காரணமாக இன்று உங்கள் முன்னால் நிற்கிறேன். எனவே அனைவரும் நம்பிக்கையுடன் உழைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
யோகி பாபு, வீடியோ அழைப்பில் படப்பிடிப்பு அனுபவத்தை பகிர்ந்தார். நடிகை ஜான்விகா, தமிழ் ரசிகர்களின் ஆதரவை எதிர்பார்ப்பதாகவும், தமிழ் கற்று வருவதாகவும் கூறினார். அஜ்மல், உதயாவுடனான கெமிஸ்ட்ரியையும், படத்தின் உள்ளடக்கத்தையும் பாராட்டினார்.
தயாரிப்பாளர் சங்கத் தலைவர் முரளி ராமசாமி, பெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி, நடிகர் ஆனந்த்பாபு, இயக்குநர் பாண்டியராஜன் உள்ளிட்டோர் படத்தின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
உதயா, தனது 25-வது ஆண்டில் இப்படம் கிடைத்ததை பாக்கியமாகவும், தனது தாயாரின் ஆசீர்வாதத்துடன் இந்தப் பயணத்தை தொடர்வதாகவும் உணர்ச்சிப்பூர்வமாக பேசினார். ‘அக்யூஸ்ட்’ படம், உதயாவின் திரையுலக பயணத்தில் முக்கிய திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
.jpeg)
Comments
Post a Comment