3BHK திரை விமர்சனம் சுருக்கம்
கதை:
சென்னையில் வாசுதேவன் (சரத்குமார்) மற்றும் அவரது குடும்பம் சொந்த வீடு வாங்கும் கனவுடன் வாடகை வீட்டில் வாழ்கிறது. நடுத்தர வர்க்கத்தின் பொருளாதாரப் போராட்டங்கள், தியாகங்கள், உணர்வுகளை மையமாகக் கொண்டு, இவர்களின் கனவு நிறைவேறியதா என்பதை உணர்ச்சிகரமாகச் சொல்லும் படம்.
நடிப்பு:
மதிப்பீடு: 3.5/5 (நடிப்பு மற்றும் உணர்வுக்கு)
சென்னையில் வாசுதேவன் (சரத்குமார்) மற்றும் அவரது குடும்பம் சொந்த வீடு வாங்கும் கனவுடன் வாடகை வீட்டில் வாழ்கிறது. நடுத்தர வர்க்கத்தின் பொருளாதாரப் போராட்டங்கள், தியாகங்கள், உணர்வுகளை மையமாகக் கொண்டு, இவர்களின் கனவு நிறைவேறியதா என்பதை உணர்ச்சிகரமாகச் சொல்லும் படம்.
நடிப்பு:
- சரத்குமார்: தந்தையின் பொறுப்புணர்வு, உணர்ச்சிகளை உடல் மொழியால் வெளிப்படுத்தி அசத்தல். ‘என்னை மாதிரி ஆயிராதப்பா’ காட்சியில் கண்கலங்க வைக்கிறார்.
- சித்தார்த்: மகனாக, இளைஞனின் வலியை நேர்த்தியாக வெளிப்படுத்துகிறார். புன்னகையுடன் அழும் காட்சிகள் அபாரம்.
- மீதா ரகுநாத்: ஆர்த்தியாக, துன்பங்களை சிரிப்புடன் தாங்கும் பாத்திரத்தில் சதம் அடிக்கிறார்.
- சைத்ரா ஜே. ஆச்சார்: காதல் கெமிஸ்ட்ரியில் மனதை உருக்குகிறார்.
- தேவயானி & யோகிபாபு: பங்களிப்பு சிறப்பு.
- ஒளிப்பதிவு (தினேஷ் கிருஷ்ணன் - ஜித்தின் ஸ்டானிஸ்லாஸ்): வாடகை வீட்டின் குறுகிய சுவர்கள் முதல் கனவு வீட்டின் விசாலம் வரை அழகாகப் பதிவு.
- படத்தொகுப்பு (கணேஷ் சிவா): 20 ஆண்டு பயணத்தை சிதறாமல் சிறப்பாக இணைத்திருக்கிறார்.
- இசை (அம்ரித் ராம்நாத்): உணர்வுகளை உயர்த்தும் பின்னணி இசை, பாடல்கள் தொந்தரவு இல்லை.
- கலை இயக்கம் (வினோத் ராஜ்குமார்): யதார்த்தமான விவரங்கள் கவனிக்க வைக்கின்றன.
- உணர்ச்சிகரமான திரைக்கதை, நடுத்தர வர்க்கத்தின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கிறது.
- ‘டிராவிட்-தோனி’ வசனங்கள், குடும்ப வன்முறை குறித்த சாடல் ஆகியவை ஆழமான அர்த்தம் தருகின்றன.
- தேர்ந்த நடிப்பு, தொழில்நுட்ப சிறப்பு.
- இறுதிக்காட்சி வரை இந்த குடும்பம் ஒரு சிறிய அளவு சந்தோசத்தை கூட பெறாமல் இருப்பது மனதிற்குள் ஒரு சொல்ல முடியாத கஷ்டத்தை தருகிறது
- உதாரணம் அவர்களை ஒரு திரைப்படத்திற்கு கூட போக விடாமல் அந்த நொடியும் இந்த இடத்தை பாத்துட்டு போகலாம் ஒரு பாத்து நிமிஷம் என்றும் , ஆனால் திரைப்படம் பார்த்து இந்த குடும்பம் சந்தோசபடும் காட்சியை காண்பிக்கவில்லை என்பது தான் வருத்தம்
- இறுதியில் ‘மெக்கானிக்கல் இன்ஜினியர்’ காட்சி லாஜிக் மீறல்.
- சொந்த வீடு மரியாதை என்பது போன்ற கருத்து தவிர்க்கப்படலாம்.
மதிப்பீடு: 3.5/5 (நடிப்பு மற்றும் உணர்வுக்கு)
Comments
Post a Comment