"மதராஸி" படத்தின் முதல் சிங்கிள் “சலம்பல” பாடல் வெளியீடு!
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில், அனிருத் ரவிச்சந்தர் இசையமைப்பில் உருவாகியுள்ள “மதராஸி” படத்தின் முதல் பாடலான “சலம்பல” வெளியாகியுள்ளது. ஜங்லீ மியூசிக் மூலம் வெளியிடப்பட்ட இந்தப் பாடலை, இளம் திறமையாளர் சாய் அபயங்கர் தனது தனித்துவமான குரலில் பாடியுள்ளார்.
Watch it on YouTube: Salambala Song 👈👈
அனிருத்தின் துடிப்பான இசையில், பிரேக்அப் பாடலாக வழக்கமான பாணியிலிருந்து மாறுபட்டு, அதிரடி தாளத்துடன் மனதை கவரும் வகையில் இப்பாடல் அமைந்துள்ளது. சிவகார்த்திகேயன்-அனிருத் கூட்டணியின் 8வது படமான இது, ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.அனிருத் கூறியது:
“சலம்பல் ஒரு வித்தியாசமான, கணிக்க முடியாத பாடல். SK உடன் இணைவது எப்போதும் சிறப்பு. முருகதாஸின் தெளிவான பார்வையுடன், இந்தப் பாடல் அனைவரையும் கவரும்.”ஏ.ஆர்.முருகதாஸ் கூறியது:
“மதராஸி உணர்ச்சிகரமான கதையுடன், பரபர ஆக்சனை கொண்டது. சலம்பல் மனதை தாக்கும், வழக்கமான பிரேக்அப் பாடல் இல்லை. அனிருத் தீயை மூட்டினார், சிவகார்த்திகேயன் வலு சேர்த்தார்.”மந்தர் தாக்கூர் (ஜங்லீ மியூசிக் CEO):
“அனிருத்-சிவகார்த்திகேயன் கூட்டணி மிகப்பெரிய சக்தி. சலம்பல் முதல் நொடியிலேயே ஈர்க்கும். இந்தப் பாடலை அறிமுகப்படுத்துவதில் பெருமைப்படுகிறோம்.”ருக்மிணி வசந்த், வித்யுத் ஜம்வால் இணைந்து நடித்த இப்படம், செப்டம்பர் 5, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. “சலம்பல்” பாடல் இப்போது அனைத்து ஸ்ட்ரீமிங் தளங்களிலும் கிடைக்கிறது. முழு வீடியோவை YouTube-ல் காணலாம்!

Comments
Post a Comment