சரண்டர் திரைப்படத்தின் திரைவிமர்சனம்
தேர்தல் பணம் மாறுவதும், காவல் நிலையத்தில் மன்சூர் அலிகானின் துப்பாக்கி மிஸ்ஸாவதும் ஒரே நேரத்தில் நடக்கிறது. இவற்றின் பின்னணியை ட்ரைனிங் எஸ்.ஐ தர்ஷன் வெளிப்படுத்துவதே "சரண்டர்" படத்தின் கதை. அரசியல், ரவுடிகள், தேர்தல் என இணைந்து நடக்கும் சம்பவங்களின் மர்மத்தை அவிழ்க்கிறது.
நடிப்பு: தர்ஷன் முதிர்ச்சியான நடிப்பை வழங்கியுள்ளார். லால் நேர்மையான ஏட்டைய்யாவாக அசத்தி, சாதாரண காட்சிகளையும் உயர்த்துகிறார். மன்சூர் அலிகான் உள்ளிட்ட அனைவரும் பொருத்தமான நடிப்பு.
தொழில்நுட்பம்: இசை தேவைக்கு மேல் இல்லாமல் ஆறுதல் தருகிறது. ஒளிப்பதிவு ஓரளவு நல்ல விஷுவல் அனுபவம். போஸ்ட் புரொடக்ஷனில் இன்னும் கவனம் தேவை.
பலம்: 45 நிமிடங்களுக்குப் பின் பரபரப்பாக மாறும் திரைக்கதை, நடிகர்களின் தேர்வு, தொய்வில்லாத கதைப்பயணம், இரு சம்பவங்களின் இணைப்பு.
பலவீனம்: பின்பாதியில் முனிஷ்காந்த் பகுதி சற்று நீளம். போஸ்ட் புரொடக்ஷன் மேம்படுத்தப்பட வேண்டும்.
மொத்தத்தில்: மிதமாகத் தொடங்கி பரபரப்பாக மாறும் இந்த திரைப்படம், நேர்த்தியான திரைக்கதையும் நடிப்பும் கொண்டு ரசிகர்களை ஈர்க்கிறது. மதிப்பீடு: 3.25/5
Comments
Post a Comment