மக்கள் தலைவா - விமர்சனம்


தமிழ்நாட்டில் பலரும் எதிர்பாராத ஆட்சியமைந்ததை போல இந்தப்படத்திலும் பல எதிர்பாராத சம்பவங்களை அடுக்கியுள்ளனர்

படத்தின் ஹீரோ ரவிமரியா அரசியலில் எதாவது சாதிக்க வேண்டும் என முயற்சிக்கிறார். அந்த முயற்சியின் விளைவால் மக்கள் மத்தியில் அவர் கவனம் பெறுகிறார். இதைக்கவனிக்கும் பெரும் பணக்காரரான ராதாரவி ரவிமரியாவோடு கை கோர்த்து ஆட்சியைப்பிடிக்கும் வேலையைச் செய்கிறார். தேர்தலில் ரவிமரியா கட்சி வென்று ஆட்சியைப் பிடித்ததா? என்பது படத்தின் மீதிக்கதை

தனது மீட்டருக்கு ஏற்ற கேரக்டர் என்பதால் ரவிமரியா கச்சிதமாக நடித்துள்ளார். என்னவொன்று அவருக்கு எழுதப்பட்ட வசனங்கள் எல்லாம் ரொம்ப வீக்காக இருக்கிறது. ராதரவி, பேரரசு, கஞ்சா கருப்பு என நிறைய நட்சத்திரங்கள் படத்திலிருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் கொடுத்த வேலையைச் சரியாகச் செய்துள்ளனர்

கார்த்திக் நாயர் இன்னும் நன்றாக விஷுவலை கொடுத்திருக்கலாம்..நிறைய ஷாட்ஸில் போகஸ் மிஸ்ஸாகியுள்ளது. பின்னணி இசையை பைஜு இசைத்துள்ளார். அவ்விசை எந்த உணர்வையும் நமக்குள் கடத்தவில்லை. பாடல்களுக்கு இசையமைத்த துளசிராமனும் பெரிதாக ஈர்க்கவில்லை

காமராஜரை தோற்கடித்த மக்கள் மீது கோபம் கொண்ட ஒரு சிறுவன் எடுக்கும் அரசியல் முடிவை வைத்து கதை துவங்குகிறது. இது இயக்குநர் ராம்தேவின் நல்ல ஐடியா. ஆனால் அதன்பிறகு திரைக்கதை எங்கெங்கோ தடம் மாறுகிறது. ரவிமரியா காதல் காட்சிகள் டூயட் எல்லாம் படத்திற்கு துளியும் உதவவில்லை. ஒன்லைனாக ஈர்த்த கதை திரைக்கதையாக ஈர்க்கவில்லை. ரொம்ப சுமாரான மேக்கிங்கும் நம்மை நிலைகுலையச் செய்துவிடுகிறது. இருப்பினும் பகுத்தறிவு கொண்ட தமிழ் மக்களின் சில மூடத்தனங்களை தோலுரிக்கும் விதமாக சில காட்சிகளை வைத்த இயக்குநரை பாராட்டலாம். மேலும் வெகுசில இன்ட்ரெஸ்டிங்கான காட்சிகளுக்காகவும் படத்தை ஒருமுறை பார்க்கலாம்

மக்கள் தலைவா- தியேட்டருக்கு வரும் மக்களைப் பற்றி இன்னும் கொஞ்சம் யோசித்திருக்கலாம்

Comments

Thandora Talkies

கானா உலகநாதன் முக்கிய வேடத்தில் — “ஐயம்” திரைப்படம்!

ராட்ட - சினிமா விமர்சனம்

படைத்தலைவன் திரைவிமர்சனம் - ஒரு பார்வை

சப்தம்’ படப்பிடிப்பில் அமானுஷ்ய விஷயங்களை உணர்ந்தேன்” ; நடிகர் ஆதியின் அதிர்ச்சி அனுபவம்