சிங் கீதம் - விமர்சனம்


94 வயதுக்கு மேல் ஒரு படைப்பாளி வித்தியாசமான படம் ஒன்றைத் தந்திருக்கிறார். யெஸ் சங்கீதம் சீனிவாச ராவ் படைத்தருளியுள்ள படமிது. நம்மூர் கமல்ஹாசனை வைத்து அன்றைய காலத்தில் பேசும்படம், மைக்கேல் மதன காம ராசு எடுத்தவர், தற்போது இளம் நடிகர்களை வைத்து பாடும் ஒன்றை எடுத்துள்ளார்

கோல்ட் மைன்ஸ் எனும் ஒரு நிலத்தில் தங்கம் இருக்கிறது என தெரிய வந்ததால் அந்நிலத்தை 100 கோடி ரூபாய்க்கு விற்க முடிவெடுக்கிறார்கள் ஷாலினி கொண்டெபுடியும் அவரது அப்பாவும். நிலத்தை வாங்க வந்த வெளிநாட்டு வியாபாரி , தங்கத்தை தோண்டி எடுத்துக்காட்டச் சொல்கிறார். அச்சூழலில் அந்நிலத்தின் இன்னொரு உரிமையாளரான ஹீரோ அயான் கே அங்கு வருகிறார். அவர் நிலத்தில் ஷேர் கேட்கிறார். நிஜ உரிமையாளர் அவர் என்பதால் அவரை தட்டிக்கழிக்க முடியவில்லை.
அந்த நிலத்தில் ஒரேயொரு மரம் மட்டுமே இருக்கிறது. அந்த மரத்தி வெட்டிவிட்டு தோண்டினால் தங்கம் என முடிவெடுக்கிறார்கள். ஆனால் நாயகி
அஹில்யா பம்ரூவிற்கு அந்த ஒற்றை மரம் தாய்போல. அதனால் அவர் அதை வெட்ட தடை போடுகிறார். அவரின் தடையை மீறி மரம் வெட்டப்படுகிறது. அதன்பிறகு ஊரிலுள்ள அனைவரும் பேசுவதற்கு பதில் பாடுகிறார்கள். அவர்களால் பேசவே முடிவதில்லை. பேசுவதெல்லாமே பாட்டாகத் தான் இருக்கிறது. இதற்கான தீர்வை நோக்கிய பயணம் தான் படத்தின் மீதித்திரைக்கதை

நாயகன் அயான் கே ஜாலியான பையனாக என்ட்ரியாகி பின் எமோஷ்னல் ட்ராக்கில் அழகாக பயணிக்கிறார். நாயகி அஹில்யா பம்ரூ கேரக்டர் ஸ்ட்ராங்காக எழுதப்பட்டுள்ளது..அவரும் சிறப்பாக நடித்துள்ளார். ஷாலினி பொண்டெபுடி அசத்தியுள்ளார். சிறப்புத்தோற்றத்தில் வரும் விஜய் தேவரகொண்டா சிறப்பு செய்துள்ளார். நிவேதா பெத்துராஜ் உள்பட பல கேரக்டர்கள் மனதில் நிற்கின்றன

படத்தின் ஆன்மாவாக இருப்பது தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசை வசனங்களை மொத்தமாக பாட்டாக எமோஷ்னல் குறையாமல் தந்துள்ளார். கிரேட். அனுகூர் சி தனது ஒளிப்பதிவை திறம்பட செய்துள்ளார்.

இயக்குநர் சங்கீதம் சீனிவாச ராவ் திரைக்கதையில் நிறைய பேண்டஸி எலிமெண்ட்ஸ் சேர்த்து, அதற்குள்ளும் எமோஷ்னலை புகுத்தியுள்ளார். சற்றுநேரம் வசனப்பாடல்கள் நம்மை சோதித்தாலும், அதை வைத்து படம் போதிக்கும் கருத்து சிறப்பானது என்பதால் நாம் படத்தோடு ஒன்றிவிடுகிறார்

இயற்கையை வீழ்த்தி நாம் பெற நினைக்கும் எதுவும் நம்மை வீழ்த்தவே செய்யும் என்ற படத்தை முடித்தவிதம் சூப்பர்

Comments

Thandora Talkies

கானா உலகநாதன் முக்கிய வேடத்தில் — “ஐயம்” திரைப்படம்!

ராட்ட - சினிமா விமர்சனம்

படைத்தலைவன் திரைவிமர்சனம் - ஒரு பார்வை

சப்தம்’ படப்பிடிப்பில் அமானுஷ்ய விஷயங்களை உணர்ந்தேன்” ; நடிகர் ஆதியின் அதிர்ச்சி அனுபவம்