பெத்லகேம் குடும்ப யூனிட் - விமர்சனம்


மமிதா பைஜு நினைவுகளை கொண்டாடும் கல்லூரி மாணவி. தன் நண்பிகளை பிரிந்து அவரது அப்பா அம்மா தம்பியோடு வேறோர் இடத்திற்கு குடிபெயர்கிறார் மமிதா. அங்கு பக்கத்து வீட்டு முதிர்க்கண்ணனாக ஹீரோ நிவின் பாலி. மமிதா பைஜுவை விட பதிமூன்று வயது அதிகமுள்ள நிவின்பாலிக்கும் மமிதாவிற்கு லவ் கனெக்டிங் உருவாகிறது. இது எப்படி சாத்தியமானது என்பதும், சாத்தியமான காதல் சாத்வீகமாக நிறைவேறியதா என்பது படத்தின் மீதிக்கதை

கதையின் நாயகனாக மிக மிக இயல்பான நடிப்பை கொடுத்துள்ளார் நிவின்பாலி. மனிதர் கேமரா என்ற ஒன்று முன்னாடி இருப்பதை மறந்தேவிட்டார் போல. மமிதா பைஜுவின் நடிப்பையும் அழகையும் சொல்லித்தான் தெரிய வேண்டுமா? மனிதியின் ஒவ்வொரு ரியாக்சனும் அடிப்பொலி மோளே ரகம் தான். இவர்களின் வேறலெவல் காம்போவிற்கு இடையில் வரும் சங்கீத் பிரதாப், சுரேஷ் கிருஷ்ணா, வினய் பார்ட் உள்பட எல்லாக் கேரக்டர்களும் பக்கா பக்கா தான்

மனதிற்கு இதமான இசையை வழங்கி நம் உணர்வுகளை காதலால் தட்டியெழுப்புகிறார் இசைஞர் விஷ்ணு விஜய். ஒளிப்பதிவாளர் அஜ்மல் சபு ஒரு பிரேம் கூட பிரேமம் குறைவின்றி வைக்கவில்லை போல. காட்சிகளை காதலித்து படமாக்கியுள்ளார்

கிரிஷ் AD, கிரன் ஜோசய்-ன் எழுத்து தான் இந்தப்படத்தின் ஆன்மா. ஒவ்வொரு கேரக்டர்களுக்கும் கொடுக்கப்பட்ட ரைட்டிங் அசத்தல் ரகம். மிக நேர்த்தியான இயக்கமும் படத்தைக் கொண்டாட வைக்கிறது. அளவிற்கு குறைவான ஒரு காதல் காட்சியோ காமெடி காட்சியோ இல்லாமல் கச்சிதமாக படத்தை எடுத்துள்ளனர். கிரேட்!

காதலுக்கு வயது தடையில்லை என்பதை மீண்டும் ஒரு காதல் படத்தால் சொல்லிருக்கிறார்கள். 100% தியேட்டரில் என்சாய் பண்ணவேண்டிய படம்

Comments

Thandora Talkies

கானா உலகநாதன் முக்கிய வேடத்தில் — “ஐயம்” திரைப்படம்!

ராட்ட - சினிமா விமர்சனம்

படைத்தலைவன் திரைவிமர்சனம் - ஒரு பார்வை

சப்தம்’ படப்பிடிப்பில் அமானுஷ்ய விஷயங்களை உணர்ந்தேன்” ; நடிகர் ஆதியின் அதிர்ச்சி அனுபவம்