தி கிராண்ட் மாஸ்டர் விமர்சனம்


“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற சமூகநீதிக் கருத்தை செஸ் விளையாட்டின் பின்னணியில் பேசியிருக்கிறது தி கிராண்ட் மாஸ்டர்.

தூய்மைப் பணியாளரான அபர்ணதியின் மகன் அஸ்வினுக்கு செஸ் மீது ஆர்வம். ஆனால் சமூக ஏற்றத்தாழ்வுகள் அவனது திறமைக்குத் தடையாக நிற்கின்றன. செஸ் கற்றுக்கொடுக்க யாரும் இல்லாத நிலையில், தாயே அவனுக்கு பயிற்சி அளிக்கிறார். அபர்ணதிக்கு செஸ் எப்படி தெரியும், அவரது கடந்த காலம் என்ன, அஸ்வின் சாதிக்கிறானா என்பதே படத்தின் மையக்கதை.

அபர்ணதி தனது கதாபாத்திரத்தின் வலியையும் போராட்டத்தையும் இயல்பாக வெளிப்படுத்தியுள்ளார். சிறுவன் அஸ்வினும் கவனம் ஈர்க்கிறார். குறிப்பாக காவல்நிலையத்தில் ஆசிரியரை வைத்து செஸ் விளையாட அழைக்கும் காட்சி குறிப்பிடத்தக்கது. லிங்கேஷ் உள்ளிட்ட மற்ற நடிகர்களும் தங்கள் கதாபாத்திரங்களை இயல்பாகக் கையாண்டுள்ளனர்.

தினேஷ் ஆண்டனியின் இசையும், அர்ஜுன் ரவியின் ஒளிப்பதிவும் படத்திற்கு துணை நிற்கின்றன.

திறமை இருந்தாலும் அதை நிரூபிக்க வாய்ப்பு எல்லோருக்கும் கிடைப்பதில்லை என்ற கருத்தை கமர்சியல் அம்சங்களுடன் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் வெற்றிச்செழியன். கதையில் இருக்கும் ஆழம் திரைக்கதையில் முழுமையாக வெளிப்படாதது, சில காட்சிகளில் இயல்புத்தன்மை குறைவது படத்தின் பலவீனம்.

அதே நேரத்தில், சிறுவன் அநியாயமாக வஞ்சிக்கப்படும்போது காவல்நிலையத்தில் அனைவரும் அவனுக்கு உதவும் காட்சி போன்றவை படத்திற்கு உயிர் கொடுக்கின்றன. “ஓடுறவனுக்கு பல வழி இருக்கு. ஆனா துரத்துறவனுக்கு ஒரு வழிதான் இருக்கு” போன்ற வசனங்களும் கவனம் ஈர்க்கின்றன.

சில குறைகள் இருந்தாலும், சமூகநீதியை மையமாக வைத்து ஒரு முக்கியமான கருத்தைச் சொல்ல முயன்றதற்காக ‘தி கிராண்ட் மாஸ்டர்’ கவனம் பெறுகிறது.

தி கிராண்ட் மாஸ்டர் - சமூகநீதி வாத்தியார். ♟️

Comments

Thandora Talkies

கானா உலகநாதன் முக்கிய வேடத்தில் — “ஐயம்” திரைப்படம்!

ராட்ட - சினிமா விமர்சனம்

படைத்தலைவன் திரைவிமர்சனம் - ஒரு பார்வை

சப்தம்’ படப்பிடிப்பில் அமானுஷ்ய விஷயங்களை உணர்ந்தேன்” ; நடிகர் ஆதியின் அதிர்ச்சி அனுபவம்