நல்ல படம் - திரைவிமர்சனம்




நல்ல படம், டைட்டில் போலவே இருக்கிறதா? 

குடியே மதி என சாய்ந்து கிடக்கும் ஹீரோ. அவரை காதலிக்கும் ஹீரோயின். ஹீரோவைச் சுற்றியிருப்பவர்கள் அனைவரும், “திருந்து, திருந்து” என அறிவுரை சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் ஹீரோவுக்கும் அவரது நண்பர்களுக்கும் மதுப்பழக்கத்தால் தொடர்ந்து பல்வேறு இன்னல்கள் வந்தாலும், இந்த மதுபிரியர் மறுமலர்ச்சி கழகத்தினர் சரக்கை விடுவதாக இல்லை!

ஒரு கட்டத்தில் இந்தியா முழுவதும் மதுவிலக்கு அமல்படுத்தப்படுகிறது. அதன்பிறகு இந்தக் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் என்ன ஆனார்கள்? இறுதியில் படம் சொல்ல வரும் மெசேஜ் என்ன? என்பதுதான் படத்தின் கதையாகப் பயணிக்கிறது.

இயல்பான நடிப்பு

ஹீரோ ஹரிஷ் அழகுபாண்டியன் பார்க்க நமது பக்கத்து வீட்டுப் பையன் போலவே இருக்கிறார். அவரது நடிப்பும் இயல்பாக அமைந்துள்ளது.

ஹீரோயின் தனலெட்சுமி பார்ப்பதற்கு அழகாக இருக்கிறார். சில காட்சிகளில் தனது இருப்பை அழுத்தமாகப் பதிவு செய்கிறார்.

கல்கி ராஜா, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களும் ஓரளவு கவனம் ஈர்க்கின்றன.

தொழில்நுட்ப அம்சங்கள்

இனியன் ஜே. ஹாரிஸ் தனது ஒளிப்பதிவை இன்னும் செம்மைப்படுத்தியிருக்கலாம். இருப்பினும், கிடைத்த பட்ஜெட்டுக்குள் சிறப்பாகவே பணியாற்றியிருக்கிறார்.

இசையமைப்பாளர் சகிஷ்னா சேவியர் ஒரு காதல் பாடலை ரசிக்கும்படி கம்போஸ் செய்துள்ளார். அதே நேரத்தில் பின்னணி இசையில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

நல்ல கரு... தடுமாறிய திரைக்கதை

இயக்குநர் பிரபுராம் சமூகத்துடன் தொடர்புடைய ஒரு நல்ல கதைக்கருவைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். அதற்காக அவரைப் பாராட்டலாம்.

ஆனால், அந்தக் கருவை வலிமையான திரைக்கதையாக மாற்றுவதில் தடுமாறியிருக்கிறார். சில இடங்களில் கதை இன்னும் அழுத்தமாகவும் சுவாரஸ்யமாகவும் நகர்ந்திருக்கலாம்.

இருப்பினும், படம் முன்வைக்கும் முக்கியமான சமூகநலன் சார்ந்த கருத்து கவனிக்கத்தக்கது. மதுப்பழக்கத்தின் பாதிப்புகளைப் பேசும் படமாக, அதன் மெசேஜ் காரணமாக இப்படத்தை வரவேற்கலாம்.

மொத்தத்தில், நல்ல சமூகக் கருத்தைச் சொல்ல முயன்றிருக்கும் படம். கதைக்கருவில் இருக்கும் வலிமை திரைக்கதையிலும் இருந்திருந்தால், இன்னும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்.

Comments

Thandora Talkies

கானா உலகநாதன் முக்கிய வேடத்தில் — “ஐயம்” திரைப்படம்!

ராட்ட - சினிமா விமர்சனம்

படைத்தலைவன் திரைவிமர்சனம் - ஒரு பார்வை

சப்தம்’ படப்பிடிப்பில் அமானுஷ்ய விஷயங்களை உணர்ந்தேன்” ; நடிகர் ஆதியின் அதிர்ச்சி அனுபவம்