சீன் - திரைவிமர்சனம்
மலையாள ஸ்டைலில் ஒரு தமிழ்ச் சினிமா! கிரைம் பிராஞ்சில் மிகமிகப் புத்திசாலித்தனமான அதிகாரியாக இருக்கும் அடாவடி சூர்யா, திடீரெனத் தனது வேலையை ராஜினாமா செய்கிறார். உயர் அதிகாரியான லால், “இன்னும் ஒரே ஒரு கேஸை முடித்துவிட்டுப் போப்பா” எனக் கெஞ்சுகிறார். ஆனால், அந்தக் கேஸுக்குப் பின்னால் ஒரு மிகப்பெரிய ஆபத்து ஒளிந்திருக்கிறது. அந்த ஆபத்து சூர்யாவால், சூர்யாவுக்கே ஏற்படக்கூடியது என்பதுதான் ட்விஸ்ட்! மறுபுறம், கொலை செய்வதையே ஒரு கலைச்சேவை போலச் செய்துவரும் நஸ்லீனின் ஆட்டம் பதைபதைக்க வைக்கிறது. இப்படியான சூழலில், இந்தக் கதையின் முடிவு என்ன என்பதை நோக்கி விறுவிறுப்பாகப் பயணிக்கிறது ஜீத்து ஜோசப்பின் திரைக்கதை. சூர்யா தனது நேர்கொண்ட பார்வையைச் சற்றே மாற்றி, ராஜபார்வையோடு வலம் வருகிறார். ஆரம்பத்தில் அவர் காட்டும் அடாவடி அராத்துகள் அடிபொலி ரகம். அதற்கான காரணத்தைப் பிற்பாதியில் சூர்யாவே விளக்கும்போது கிடைப்பது ஒரு வாவ் மொமென்ட்! ஒரு நடிகைக்குக் கம்பேக் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சொல்லுமளவுக்கு நஸ்ரியா பின்னியிருக்கிறார். நஸ்லீன் அட்டகாசமான நடிப்பை வழங்கியுள்ளார். அவரது ...