Posts

Showing posts from October, 2026

பிரபுதேவா – சிம்ரன் இணைந்து நடிக்கும் புதிய காதல் திரைப்படத்திற்கு ‘கமல் ஸ்ரீதேவி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

Image
Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்கும் இப்படத்தை பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிக்கின்றனர். பிரபுதேவா, சிம்ரன் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தில் மிதுன் ஜெய் சங்கர், ஸ்மேகா உள்ளிட்டோரும் இணைந்து நடிக்கின்றனர். ஏற்கெனவே Zion Films மற்றும் MRP Entertainment இணைந்து வழங்கிய ‘வித் லவ்’ திரைப்படம் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றதைத் தொடர்ந்து, இரு நிறுவனங்களும் மீண்டும் இணைந்து இப்படத்தை தயாரிப்பது  குறிப்பிடத்தக்கது. குடும்பத்துடன் இணைந்து ரசிக்கும் வகையில், மனதை வருடும் வித்தியாசமான காதல் கதையாக ‘கமல் ஸ்ரீதேவி’ உருவாகிறது. மூணாறு மற்றும் சென்னையில் படப்பிடிப்பை ஒரே கட்டமாக நிறைவடைந்து, தற்போது இறுதிக்கட்டப் படப்பிடிப்புப் பணிகளில் பரபரப்பாக ஈடுபட்டுள்ளது. இப்படத்தை கிருஷ்ணானந்த் கொட்டாரப்பட்டு எழுதி இயக்குகிறார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். சரண் வேலாயுதன் ஒளிப்பதிவு செய்கிறார். ராஜா ஆறுமுகம் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொள்கிறார். ராஜீவன் தயாரிப்பு வடிவமைப்பையும், சேகர் கலை இயக்கத்தை...

இந்தியாவின் மிகப்பெரிய ரெபெல் ஸ்டார் பிரபாஸிற்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!

Image
பாக்ஸ் ஆபீஸ் வரலாற்றையே மாற்றி எழுதிய 'பாகுபலி' நாயகன்! தெலுங்கு சினிமாவை பான் இந்தியா தளத்திற்குக் கொண்டு சென்ற 'சலார்' நாயகன்! தனது நடிப்பால் அனைவரது மனதையும் வென்ற 'ஃபௌஜி' நாயகன்! இந்திய சினிமாவை ஒரு புதிய சகாப்தத்திற்கு அழைத்துச் செல்லும் 'கல்கி' நாயகன்! தனது 'ஸ்பிரிட்' மூலம் தன்னை நேசிக்கும் ஒவ்வொரு 'டார்லிங்' ரசிகரையும் பெருமிதம் அடையச் செய்வதே அவரது இலக்கு! இந்தியாவின் மிகப்பெரிய ஸ்டாரும், 'ரெபெல் ஸ்டார்' (Rebel Star) என்று அழைக்கப்படுபவருமான பிரபாஸ், பிரம்மாண்டமான பான் இந்தியா திரைப்படங்களின் பட்டியலுடன் கோடிக்கணக்கான ரசிகர்களைத் தொடர்ந்து மகிழ்வித்து வருகிறார். முக்கியமான திரைப்படங்கள், திரையில் அவரது தனித்துவமான தோற்றம் மற்றும் தனது கலை மீதான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவற்றின் மூலம், இந்திய சினிமாவின் பெருமையை அவர் புதிய உயரங்களுக்குக் கொண்டு செல்கிறார். 'ஈஸ்வர்' (Eeshwar) திரைப்படத்துடன் தொடங்கிய அவரது திரைப்பயணம், இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக வெற்றிகரமாகத் தொடர்ந்து, ப...

முகேன் ராவ் நடிக்கும் ‘மைலோ’ (Milo) படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

Image
செல்ல நாயை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘மைலோ’ திரைப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது. SSR Entertainment சார்பில் K I சுரேஷ் தயாரித்துள்ள இப்படத்தில் முகேன் ராவ் (Mugen Rao) கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தை கவின் மூர்த்தி எழுதி இயக்கியுள்ளார். தற்போது வெளியிடப்பட்டுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் முகேன் ராவ் அடர் நீல நிற லெதர் ஜாக்கெட் அணிந்து கம்பீரமாக நிற்க, அவருக்கு அருகில் தங்க நிறத்திலான செல்ல நாய் இடம்பெற்றுள்ளது. மலைப்பகுதியையும் இயற்கைச் சூழலையும் பின்னணியாகக் கொண்ட போஸ்டரில், ‘MORE THAN A PET A SILENT WITNESS’ என்ற வாசகம் இடம்பெற்றிருப்பது படத்தின் மர்மம் நிறைந்த கதைக்களம் குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. 18 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற ஒரு குற்றத்தையும், ‘மைலோ’ எனும் செல்ல நாயையும் மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த குற்றத்தின் பின்னணியில் மறைந்திருக்கும் உண்மையைச் செல்ல நாயின் உதவியுடன் நாயகன் எவ்வாறு கண்டுபிடிக்கிறார் என்பதே இப்பட...

ஜீவாவின் ‘தகப்பன்’ திரைப்படம் வரும் டிசம்பர் 24-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது!

Image
நடிகர் ஜீவா நடிப்பில், லார்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘தகப்பன்’ திரைப்படம் வரும் டிசம்பர் 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை அட்டகாசமான போஸ்டருடன் படக்குழு வெளியிட்டுள்ளது. இயக்குநர் ரா. வெங்கட் இயக்கத்தில் உருவாகும் இப்படம், மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைப் பின்னணியாகக் கொண்டு, அப்பா – மகன் உறவு, குடும்பப் பாசம் மற்றும் மனித உணர்வுகளை மையமாகக் கொண்ட குடும்பக் கதையாக உருவாகி வருகிறது. மதுரையில் படப்பிடிப்பின்போது காட்சிகளை நேரில் பார்த்த பொதுமக்கள் உணர்ச்சிவசப்பட்டு படக்குழுவினரைப் பாராட்டியதாகக் கூறப்படுகிறது. இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. ‘தெனாவட்டு’ திரைப்படத்திற்குப் பிறகு, முழுக்க முழுக்க கிராமப் பின்னணியில் ஜீவா நடிக்கும் படமாக ‘தகப்பன்’ உருவாகி வருகிறது. சமீபத்தில்  வெளியாகி மாபெரும் வெற்றியைப் பெற்ற ‘TTT’ திரைப்படத்திற்குப் பிறகு, மதுரை மண்ணின் மண்வாசனையுடன் கூடிய கதையில் ஜீவா நடிப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அவரது திரைப்பயணத்...

பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய நடிகை அனுமோல்

Image
நவராத்திரி திருவிழாவின் இறுதி நாளான விஜயதசமி நாளன்று, குடும்பத்தின் பொருளாதார முன்னேற்றத்திற்காக இரவு, பகல் பாராமல் ஆட்டோ ஓட்டும் ஐம்பது பெண் ஓட்டுநர்களுக்கு பிரபல திரைப்பட நடிகை அனுமோல் நலத்திட்ட உதவிகளை வழங்கி, அவர்களின் கடின உழைப்பைக் கௌரவித்தார். 'அயலி' இணையத் தொடர் மூலம் டிஜிட்டல் தள ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை அனுமோல். இயல்பிலேயே 'எல்லோரும் சமம்' என்ற மனப்பான்மை கொண்ட நடிகை அனுமோலைச் சந்தித்து ஆட்டோகிராப் கேட்கும் ஒவ்வொரு ரசிகருக்கும் 'Always Choose Kindness' என எழுதி, தனது கையெழுத்தைப் பதிவு செய்பவர். சமூக அக்கறையுடன் செயல்படும் நடிகை அனுமோல், இத்தகைய செயல்பாடுகள் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார். நடிகை அனுமோலை அவரது ரசிகர்கள் அண்மையில் சந்தித்தனர். அப்போது, பெண்களின் பேராற்றலைக் கொண்டாடும் நவராத்திரி திருவிழாவில், குடும்பத்தின் மேன்மைக்காகவும், சொந்தக் காலில் நின்று பொருளாதார ரீதியாகச் சுதந்திரமான சுய அடையாளத்தை உருவாக்கிக்கொண்ட பெண்களைத் தேர்வு செய்து, அவர்களுக்குப் பரிசுகளை வழங்கிக் கௌரவிக்க வேண்டும் ...

அர்ஜுன் தாஸ் முதன் முதலாக போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் ஜான் டோ- John Doe' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Image
அர்கா மீடியாஒர்க்ஸ் ( Arka Mediawoks) நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் ஷோபு யார்லகட்ட ( Shobu Yarlagadda) - பிரசாத் தேவினேனி ( Prasad Devineni) ஆகியோரின் தயாரிப்பில் இயக்குநர் மதுமிதா இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் கதையின் நாயகனாக நடிக்கும் 'ஜான் டோ - John Doe' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் மதுமிதா மற்றும் கதாசிரியர் நிக்கோலஸ் செவாலியர் ( Nicholas Chevaillier) ஆகியோர் இணைந்து கதை, திரைக்கதை எழுதி இருக்கும் 'ஜான் டோ- John Doe' திரைப்படத்தில் அர்ஜுன் தாஸ், சஞ்சனா நடராஜன், ஸ்ருஷ்டி, ஜாரா வினீத் சந்தோக், நீரவ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பிரீதா ஜெயராமன் ISC ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு முஜீப் மஜீத் இசையமைத்திருக்கிறார். கூடுதல் இசையை ஆர்டிஸ்ட் 404 ( Artist 404) எனும் இசைக்குழு அமைத்திருக்கிறது. படத்தொகுப்பு பணிகளை விஜய் வெங்கடரமணன் மேற்கொள்ள தயாரிப்பு வடிவமைப்பாளராக அஷ்வினி காலே பணியாற்றுகிறார்.  படத்தைப் பற்றி இயக்குநர் குறிப்பிடுகையில், '' ஜான் டோ என்பவர் யார்? பாதிக்கப்பட்டவரா? கொலைகா...

‘சட்டமும் நீதியும்’ சீசன் 2 அக்டோபர் 23-ம் தேதி வெளியாகும் என தமிழ் ZEE5 அறிவிப்பு

Image
சரவணன் மற்றும் வரலட்சுமி சரத்குமார் நடிப்பில், புதிய வழக்கு, அதிகரிக்கும் சவால்கள் மற்றும் நீதிக்கான மற்றொரு வலுவான போராட்டத்துடன் தொடர் மீண்டும் வருகிறது  நேஷனல், 7 அக்டோபர் 2026: தமிழ் ZEE5 தனது பாராட்டைப் பெற்ற சட்ட நாடகத் தொடரான ‘சட்டமும் நீதியும்’ தொடரின் இரண்டாவது சீசனை அறிவித்துள்ளது. பாலாஜி செல்வராஜ் இயக்கத்தில், 18 கிரியேட்டர்ஸ் பேனரின் கீழ் சசிகலா பிரபாகரன் தயாரித்துள்ள இந்தத் தொடர், முற்றிலும் புதிய வழக்கு, அதிகரிக்கும் சவால்கள் மற்றும் ஆழமான தார்மீகக் குழப்பங்களுடன், நீதித்துறை அமைப்பை மையமாகக் கொண்ட தனது விறுவிறுப்பான கதையாடலை புதிய அத்தியாயத்துடன் தொடர்கிறது. இந்த புதிய சீசனில் முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமார் இணைந்துள்ளார். அவரது வலுவான திரை ஆளுமை கதைக்களத்திற்கு புதிய பரிமாணத்தைச் சேர்க்கிறது. அதேசமயம், கதையின் மையத்தில் இருக்கும் தனது கதாபாத்திரத்தைத் தொடர்ந்து ஏற்று சரவணனும் நடிக்கிறார். முதல் சீசனில், தனது மகள் கடத்தப்பட்டதைத் தொடர்ந்து நீதிமன்றத்திற்கு வெளியே ஒரு தந்தை தீக்குளித்த சம்பவத்தால் உருவான அதிர்ச்சிகரமான வழக்கை சரவண...

*ஃபேண்டஸி உலகத்துக்குள் அழைத்துச் செல்லும் ‘டிரோன்ஸ்’ டிரெய்லர் வெளியானது!

Image
GM Morgan Films தயாரிப்பில், R. ராகவ் மிர்தாத் இயக்கத்தில் உருவாகியுள்ள ஃபேண்டஸி திரைப்படம் ‘டிரோன்ஸ்’ (Drones). சித்தி இத்னானி, அஞ்சலி நாயர், தேவதர்ஷினி, டிராவிட் செல்வம், குரைஷி, சினிமாவாலா சதீஷ், சசி செல்வராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் வரும் அக்டோபர் 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், படத்தின் டிரெய்லர் மற்றும் புதிய போஸ்டரைப் படக்குழு வெளியிட்டுள்ளது. ப்ளாக் ஹோல் எனும் மர்மமான இடத்துக்குள் நுழையும் மூவர், அந்த இடம் குறித்து விசாரணை நடத்தும் காவல் அதிகாரி, சூனியக்காரிக்கும் தேவதைக்கும் இடையே நடக்கும் மோதல் எனப் பல வித்தியாசமான அம்சங்களுடன் ஒரு ஃபேண்டஸி உலகத்தை நம் கண்முன்னே விரிக்கிறது ‘டிரோன்ஸ்’ டிரெய்லர். ஹாரர், ஃபேண்டஸி, சயின்ஸ் ஃபிக்ஷன் ஆகிய அம்சங்களுடன் காமெடியும் கலந்து வெளியாகியுள்ள இந்த டிரெய்லர், ரசிகர்களுக்கு ஒரு சுவாரஸ்யமான விருந்தாக அமைந்துள்ளது. இதற்கிடையே, படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவிக்கும் வகையில் புதிய போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. சிவப்பு நிற ஆடையில் சூனியக்காரி போன்ற தோற்றத்தில் ஒரு பெண்ணும், ...

அறிவிப்பு வெளியான குறுகிய காலத்தில் முதற்கட்டப் படப்பிடிப்பை நிறைவு செய்த ‘மாகாளி’ படக்குழு !

Image
மாரி செல்வராஜ் வழங்கும், அமீர் நடிப்பில் உருவாகும் ‘மாகாளி’ திரைப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. படத்தின் அறிவிப்பு வெளியாகி சில நாட்களிலேயே திட்டமிட்டபடி முதற்கட்டப் படப்பிடிப்பை முடித்துள்ள படக்குழு, அடுத்தகட்டப் படப்பிடிப்புக்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தமிழ் சினிமாவில் தனித்துவமான படைப்புகள் மூலம் கவனம் ஈர்த்து வரும் இயக்குநர் மாரி செல்வராஜ் வழங்கும் இப்படத்தை, அவரது இணை இயக்குநர் எஸ். பி. அரவிந்த் எழுதி இயக்குகிறார். நடிகர் அமீர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படம், சமூக அக்கறை கொண்ட அழுத்தமான கதைக்களத்தில் உருவாகி வருகிறது. வேலூர் மற்றும் இராணிப்பட்டி பகுதிகளில் நடைபெற்ற முதற்கட்டப் படப்பிடிப்பு, திட்டமிட்ட நாட்களுக்கு முன்னதாகவே சிறப்பாக நிறைவடைந்துள்ளது. சமூகத்தில் நிலவும் முக்கியமான பிரச்சினை ஒன்றை அழுத்தமாகப் பேசும் இப்படம், மனித உறவுகளின் ஆழத்தையும் அவற்றுக்குள் இருக்கும் உணர்வுப் போராட்டங்களையும் வெளிப்படுத்தும் வகையில் உருவாகியுள்ளது. அண்மையில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே கவனத்தை...

96’ திரைப்படம் அக்டோபர் 9 முதல் மறுவெளியீடு! விஜய் சேதுபதி – திரிஷாவின் ‘ராம் – ஜானு’ காதல் மீண்டும் திரையரங்குகளில்

Image
விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியாகி ரசிகர்களின் மனதில் தனி இடத்தைப் பிடித்த ‘96’ திரைப்படம், வரும் அக்டோபர் 9, 2026 அன்று மீண்டும் திரையரங்குகளில் மறுவெளியீடு செய்யப்படுகிறது. கடந்த 2018-ம் ஆண்டு வெளியான ‘96’ திரைப்படத்தை இயக்குநர் சி. பிரேம்குமார் எழுதி இயக்கியுள்ளார். பள்ளிப் பருவத்தில் உருவான காதல், பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சந்திக்கும் இருவரின் நினைவுகள் மற்றும் அந்த சந்திப்பின்போது வெளிப்படும் உணர்வுகளை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை அமைந்துள்ளது. இப்படத்தில் விஜய் சேதுபதி – ராம் கதாபாத்திரத்திலும், திரிஷா – ஜானு கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இவர்களுடன் ஆதித்யா பாஸ்கர், கௌரி ஜி. கிஷன், தேவதர்ஷினி, பகவதி பெருமாள், ஆடுகளம் முருகதாஸ், வர்ஷா பொல்லம்மா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் தொழில்நுட்பக் குழுவில் இயக்குநர் சி. பிரேம்குமார் கதை, திரைக்கதை மற்றும் இயக்கத்தை கவனித்துள்ளார். மகேந்திரன் ஜெயராஜு மற்றும் என். சண்முகசுந்தரம் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளனர். ஆர். கோவிந்தராஜ் படத்தொகுப்பை கவனித்துள்ளார். கோவிந்த் வசந்தா இசையமைத்த...

ZEE தமிழின் weekend-ஐ கலக்க வருது ‘சரிகமப’ & ‘மாஸ் பசங்க Vs கிளாஸ் பொண்ணுங்க’!

Image
புது புது கதைகள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் என ரசிகர்களுக்கு தொடர்ந்து entertainment கொடுத்து வரும் ZEE Tamizh, இந்த weekend-ஐ இன்னும் special-ஆ மாற்ற இரண்டு புதிய நிகழ்ச்சிகளை களமிறக்கியிருக்கிறது. ஒருபக்கம், இசை ரசிகர்களின் மனசுல தனக்கென ஒரு இடத்தை பிடிச்சிருக்கிற ‘சரிகமப’-வோட புதிய சீசன். இன்னொரு பக்கம், Mass-க்கும் Class-க்கும் இடையே நடக்கப்போகும் செம கலகலப்பான போட்டியை மையமாக வைத்து உருவாகியிருக்கிற ‘மாஸ் பசங்க Vs கிளாஸ் பொண்ணுங்க’. இந்த இரண்டு நிகழ்ச்சிகளின் பிரம்மாண்ட தொடக்கத்தை முன்னிட்டு நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், ‘சரிகமப’ நிகழ்ச்சியின் நடுவர்களான ஸ்ரீனிவாஸ், விஜய் பிரகாஷ் மற்றும் ஸ்வேதா மோகன், நிகழ்ச்சியின் தொகுப்பாளர் அர்ச்சனா, மேலும் ‘மாஸ் பசங்க Vs கிளாஸ் பொண்ணுங்க’ நிகழ்ச்சியுடன் நடுவர்களாக இணைந்துள்ள ஆர்யா, ரெஜினா கசாண்ட்ரா ஆகியோர் கலந்துகொண்டு, நிகழ்ச்சிகள் குறித்த பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர். 10 சீசன்களை கடந்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த ‘சரிகமப’! வெறும் ஒரு singing reality show-வாக இல்லாமல், பல திறமையான பாடகர்களை ...

அன்பில் அவன்’ வெற்றியைக் கொண்டாடிய படக்குழு.

Image
ஐங்கரன் இன்டர்நேஷனல் (Ayngaran International)  மற்றும் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் (Happy High Pictures ) நிறுவனங்கள் இணைந்து தயாரித்த, அசோக் செல்வன் – ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில், இயக்குநர் ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில் வெளியான ‘அன்பில் அவன்’ திரைப்படம் ரசிகர்களின் ஆதரவுடன் திரையரங்குகளில் வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் படக்குழுவினர் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியை நடத்தினர். இந்த நிகழ்வில் படக்குழுவினர் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களை நேரில் சந்தித்து, திரைப்படத்திற்கு ஆதரவளித்ததற்கும் ரசிகர்களிடம் படத்தைக் கொண்டு சேர்த்ததற்கும் நன்றி தெரிவித்தனர். நிகழ்ச்சியில் இயக்குநர் கார்த்திகேயன், நடிகர்கள் அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன், கதிர்பாலு,மஹா டெல்லி கணேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு படத்தின் உருவாக்க அனுபவங்களையும், ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பையும் பகிர்ந்துகொண்டனர். இந்நிகழ்வில், ஹேப்பி ஹை பிக்சர்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் அபிநயா செல்வம் பேசியதாவது: ‘அன்பில் அவன்’ படத்துக்கு இவ்வளவு பெரிய ஆதரவு கொடுத்த பத்திரிகையாளர்கள், ஊடக ...

தியாகராஜா டாக்கீஸ் புதிய தயாரிப்பு நிறுவனத்தின் தொடக்க விழா!

Image
  திரைப்படத் தயாரிப்பாளர்கள் தியாகா குறிஞ்சிசெல்வன் மற்றும் டாக்டர் ஆர். விஜயலட்சுமி இணைந்து புதிய திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளனர். தியாகராஜா டாக்கீஸ் நிறுவனத்தின் தொடக்க விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. திரைப்படத் துறையில் புதிய முயற்சிகளை முன்னெடுக்கும் நோக்கில் தொடங்கப்பட்டுள்ள தியாகராஜா டாக்கீஸ் தயாரிப்பு நிறுவனத்தின் தொடக்க விழாவில் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் மற்றும் ஊடக நண்பர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்நிறுவனம் தயாரிக்கும் முதல் படத்தில் நடிகர் ஜெய் நாயகனாக நடிக்கிறார். தயாரிப்பாளர்கள் தியாகா குறிஞ்சிசெல்வன் மற்றும் டாக்டர் ஆர். விஜயலட்சுமி ஆகியோரின் புதிய முயற்சிக்கு திரையுலகினர் மற்றும் ஊடக நண்பர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இந்நிகழ்வினில், இயக்குநர் வெங்கட் பிரபு பேசியதாவது: “குறிஞ்சி சாரை எனக்குப் பல ஆண்டுகளாகத் தெரியும். அவர் திரைப்படத் தயாரிப்புத் துறைக்கு சற்று தாமதமாக வந்திருந்தாலும், சரியான நேரத்தில் வந்திருக்கிறார். அவருடைய புதிய தயாரிப்பு நிறுவனத்தின் முதல் ப...