நூறுகோடி வானவில் - விமர்சனம்
சசி வரைந்துள்ள காதல் ஓவியம் இந்த நூறுகோடி வானவில்! ஹீரோ ஹரிஷ் கல்யாண் கோவாவில் நாயகி சித்தி இத்னானியைச் சந்திக்கிறார். பார்த்தவுடன் காதல் மலரவில்லை. மாறாக, அவர் நடத்தும் ஷோவுக்கான ஒரு ஐடியா தோன்றுகிறது. அதைச் சித்தி இத்னானியை வைத்தே செயல்படுத்த நினைக்கிறார். ஆனால், கோமாவில் இருக்கும் தனது காதலனுக்கு அது பிடிக்காது என்று மறுக்கிறார் சித்தி. சுருக்கி வைத்திருக்கும் அவரது ஆசைகளுக்கு மீண்டும் சிறகுகள் கொடுக்க முயற்சிக்கிறார் ஹரிஷ் கல்யாண். இவர்களது பயணம் காதலாக மாறியதா? முதல் காதலனைச் சித்தி இத்னானி எப்படி ஹேண்டில் செய்தார்? என்பதுதான் படத்தின் மீதிக்கதை. ஹரிஷ் கல்யாண் இந்தக் கதாபாத்திரத்திற்கு 100 சதவீதம் பொருத்தமாக இருக்கிறார். சித்தி இத்னானி அழகா, கோவா அழகா என்று பிரித்துப் பார்க்க முடியவில்லை. அழகில் மட்டுமல்ல, நடிப்பிலும் அசத்தியுள்ளார் சித்தி! கோவை சரளா, சின்னி ஜெயந்த், தம்பி ராமையா, விஜே பார்வதி உள்ளிட்டவர்களும் தங்களது பங்களிப்பைச் சிறப்பாக வழங்கியுள்ளனர். சித்து குமாரின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் சிறப்பாக அமைந்துள்ளன. ஒளிப்பதிவாளர் பிரசன்னா எஸ்.குமார் தனது...