Posts

Showing posts with the label Fafa

டோன்ட் ட்ரபிள் த ட்ரபிள் - விமர்சனம்

Image
வறுமையை வாழ்வாகக் கொண்ட பகத் பாசில் ஒரு ஆம்புலன்ஸ் டிரைவர். பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக ஆம்புலன்ஸைத் தாறுமாறாக ஓட்டும் நபர். ஆனால், வாழ்க்கையை ஓட்டுவதற்காக அவர் செய்யும் ஒரு செயல், அவருடைய உயிரையே காப்பாற்றிக்கொள்ள வேண்டிய இக்கட்டான சூழலை உருவாக்குகிறது. அதிலிருந்து தப்பிக்க அவருக்கு 25 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. இதற்காக ஒரு பணக்காரச் சிறுமியைக் கடத்துகிறார். ஆனால், அந்தச் சிறுமியிடம் இருக்கும் மர்மம் என்ன? அதன் பின்னணியில் இருப்பது என்ன? என்பதே படத்தின் விரிவான கதை. நடிப்பில் அசத்தும் பகத் பாசில்! முதல்பாதி வரை இந்தப் படத்தில் பகத் பாசில் நடிப்பதற்கு என்ன இருக்கிறது என்ற எண்ணமே தோன்றுகிறது. ஆனால், இரண்டாம் பாதியில் அந்த எண்ணத்தை அடித்து நொறுக்கிவிடுகிறார். தனது தேர்ந்த நடிப்பால் பார்வையாளர்களை வியக்க வைக்கிறார். சிறுமியாக வரும் சாரா பலேகர் நம் நெஞ்சை உலுக்கிவிடுகிறார். குறிப்பாக, கடைசி 20 நிமிடங்களில் படத்தின் ஆன்மாவாகவே மாறிவிடுகிறார். இவர்களுடன் நடித்துள்ள மகேஷ் மஞ்ச்ரேகர், சௌரப் சச்தேவா, வெங்கடேஷ் காகுமானு உள்ளிட்டோரும் தங்களது நடிப்பால் கவனம் ஈர்க்கின்றன...