Posts

Showing posts from November, 2026

டிப்ஸ் ஃபிலிம்ஸ் மற்றும் டிப்ஸ் மியூசிக் நிறுவனங்கள் இம்ரான் ஹாஷ்மியின் இசை மற்றும் ஹாரர் திரைப்படமான ‘ரூஹ்’ (ROOH) படத்தில் இணைகின்றன!

Image
டிப்ஸ் ஃபிலிம்ஸ் மற்றும் டிப்ஸ் மியூசிக் நிறுவனத்தின் சார்பில் குமார் தௌரானி, நடிகர் இம்ரான் ஹாஷ்மியுடன் இணைந்து ‘ரூஹ்’ (ROOH) என்ற இசையை மையமாகக் கொண்ட ஹாரர் திரைப்படத்தைத் தயாரிக்கிறார். உணர்வுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் உருவாகும் இப்படத்தை மயங்க் ஷர்மா இயக்குகிறார். விஷால் கபூர் மற்றும் மயங்க் ஷர்மா இணைந்து இப்படத்தின் கதையை எழுதியுள்ளனர். ஹாரர் மற்றும் காதல் ஆகிய இரு அம்சங்களையும் இசையுடன் இணைத்து, ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான திரையரங்க அனுபவத்தை வழங்கும் வகையில் இப்படம் உருவாகிறது. ‘ரூஹ்’ திரைப்படம் 2027 ஆம் ஆண்டு இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தி திரையுலகின் மறக்க முடியாத பல ஹாரர் திரைப்படங்களில் நடித்துள்ள இம்ரான் ஹாஷ்மி, மீண்டும் இவ்வகைத் திரைப்படத்தில் நடிக்கிறார். காதல், பிரிவு மற்றும் ஏக்கம் எனப் பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தும் அவரது திரைப்படப் பாடல்கள் ஒரு தலைமுறை ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளன. அந்த இசைப் பாரம்பரியத்தையும், குமார் தௌரானியின் இசை அனுபவத்தையும் டிப்ஸ் ஃபிலிம்ஸின் த...

புத்தாண்டு கொண்டாட்டமாக 2027 ஜனவரி 1-ம் தேதி மீண்டும் திரைக்கு வரும் மாண்புமிகு முதல்வர் விஜய்யின் ‘பைரவா’

Image
தமிழகத்தின் முதல்வராக இருக்கும் நடிகர் விஜய்யின் ரசிகர்களுக்கு புத்தாண்டு விருந்தாக, அவர் நடிப்பில் 2017-ம் ஆண்டு வெளியான ‘பைரவா’ திரைப்படம் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிறது. பி நாகிரெட்டியார் அவர்களின் பிரம்மாண்ட நிறுவனமான விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பி. வெங்கட்ராம ரெட்டி  மற்றும் பி. பாரதி ரெட்டி தயாரிப்பில், இயக்குநர் பரதன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘பைரவா’. தற்போது 2027-ம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, ஜனவரி 1-ம் தேதி இப்படத்தை மிகப்பெரிய அளவில் மீண்டும் திரையரங்குகளில் வெளியிடத் திட்டமிட்டுள்ளது விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம். இயக்குநர் பரதன், இதற்கு முன்பாக விக்ரம் நடிப்பில் வெளியான ‘தில்’, ‘தூள்’, விஜய் நடிப்பில் வெளியான ‘கில்லி’, ‘மதுர’ மற்றும் “ வீரம்” உள்ளிட்ட வெற்றிப் படங்களுக்கு வசனம் எழுதியவர். மேலும், விஜய்யை வைத்து ‘அழகிய தமிழ் மகன்’ படத்தை இயக்கியிருந்தார். இந்த நிலையில், மீண்டும் விஜய்யுடன் இணைந்து அவர் இயக்கிய திரைப்படம் ‘பைரவா’. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரே...

நூறுகோடி வானவில் - விமர்சனம்

Image
சசி வரைந்துள்ள காதல் ஓவியம் இந்த நூறுகோடி வானவில்! ஹீரோ ஹரிஷ் கல்யாண் கோவாவில் நாயகி சித்தி இத்னானியைச் சந்திக்கிறார். பார்த்தவுடன் காதல் மலரவில்லை. மாறாக, அவர் நடத்தும் ஷோவுக்கான ஒரு ஐடியா தோன்றுகிறது. அதைச் சித்தி இத்னானியை வைத்தே செயல்படுத்த நினைக்கிறார். ஆனால், கோமாவில் இருக்கும் தனது காதலனுக்கு அது பிடிக்காது என்று மறுக்கிறார் சித்தி. சுருக்கி வைத்திருக்கும் அவரது ஆசைகளுக்கு மீண்டும் சிறகுகள் கொடுக்க முயற்சிக்கிறார் ஹரிஷ் கல்யாண். இவர்களது பயணம் காதலாக மாறியதா? முதல் காதலனைச் சித்தி இத்னானி எப்படி ஹேண்டில் செய்தார்? என்பதுதான் படத்தின் மீதிக்கதை. ஹரிஷ் கல்யாண் இந்தக் கதாபாத்திரத்திற்கு 100 சதவீதம் பொருத்தமாக இருக்கிறார். சித்தி இத்னானி அழகா, கோவா அழகா என்று பிரித்துப் பார்க்க முடியவில்லை. அழகில் மட்டுமல்ல, நடிப்பிலும் அசத்தியுள்ளார் சித்தி! கோவை சரளா, சின்னி ஜெயந்த், தம்பி ராமையா, விஜே பார்வதி உள்ளிட்டவர்களும் தங்களது பங்களிப்பைச் சிறப்பாக வழங்கியுள்ளனர். சித்து குமாரின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் சிறப்பாக அமைந்துள்ளன. ஒளிப்பதிவாளர் பிரசன்னா எஸ்.குமார் தனது...

மூக்குத்தி அம்மன் 2 - திரை விமர்சனம்

Image
அம்மன் படங்களுக்கான ரசிகர்களைக் குறிவைத்து வெற்றியை வீழ்த்தியுள்ளார் சுந்தர் சி! அம்மன் படங்களின் காலம் தொட்டு இன்றுவரை பக்திப் படங்களுக்கு என்று ஒரு பெரும் ரசிகர் வட்டாரம் இருந்து வருகிறது. அந்த ரசிகர்களைக் குறிவைத்து களமிறங்கியிருக்கிறார் சுந்தர் சி. போலீஸ் கான்ஸ்டபிளான நயன்தாராவுக்குத் தினமும் ஒரு கனவு வருகிறது. அந்தக் கனவில் படைகளும் பரிவாரங்களும் அணிவகுத்து வருகின்றன. கூடவே ஒரு அழைப்பும் ஒலிக்கிறது. அந்த அழைப்பு, “மயிலாஞ்சிக்கு வா!” என்பதுதான். அதன்பிறகு மயிலாஞ்சிக்குச் செல்கிறது கதை. மயிலாஞ்சியில் அரக்க இனம் உலகையே தன் வசப்படுத்த முயற்சிக்கிறது. அப்படியான சூழலில் நயன்தாரா மீது இறங்கும் மூக்குத்தி அம்மன், எப்படி உலகைக் காப்பாற்றுகிறார் என்பதே படத்தின் மீதிக்கதை! மூக்குத்தி அம்மனாக வரும்போது கதாநாயகியாகவும், போலீஸ் கான்ஸ்டபிளாக வரும்போது கதையின் நாயகியாகவும் அசத்தியுள்ளார் நயன்தாரா. ஊர்வசி அம்மா கதாபாத்திரத்தில் அழகாகப் பொருந்தியுள்ளார். ஆங்காங்கே வரும் காமெடி காட்சிகளில் சிரிப்பை அதிகப்படுத்தும் வேலையைச் செம்மையாகச் செய்துள்ளார். நெகட்டிவ் கதாபாத்திரத்தில் வரும் ர...

சீன் - திரைவிமர்சனம்

Image
மலையாள ஸ்டைலில் ஒரு தமிழ்ச் சினிமா! கிரைம் பிராஞ்சில் மிகமிகப் புத்திசாலித்தனமான அதிகாரியாக இருக்கும் அடாவடி சூர்யா, திடீரெனத் தனது வேலையை ராஜினாமா செய்கிறார். உயர் அதிகாரியான லால், “இன்னும் ஒரே ஒரு கேஸை முடித்துவிட்டுப் போப்பா” எனக் கெஞ்சுகிறார். ஆனால், அந்தக் கேஸுக்குப் பின்னால் ஒரு மிகப்பெரிய ஆபத்து ஒளிந்திருக்கிறது. அந்த ஆபத்து சூர்யாவால், சூர்யாவுக்கே ஏற்படக்கூடியது என்பதுதான் ட்விஸ்ட்! மறுபுறம், கொலை செய்வதையே ஒரு கலைச்சேவை போலச் செய்துவரும் நஸ்லீனின் ஆட்டம் பதைபதைக்க வைக்கிறது. இப்படியான சூழலில், இந்தக் கதையின் முடிவு என்ன என்பதை நோக்கி விறுவிறுப்பாகப் பயணிக்கிறது ஜீத்து ஜோசப்பின் திரைக்கதை. சூர்யா தனது நேர்கொண்ட பார்வையைச் சற்றே மாற்றி, ராஜபார்வையோடு வலம் வருகிறார். ஆரம்பத்தில் அவர் காட்டும் அடாவடி அராத்துகள் அடிபொலி ரகம். அதற்கான காரணத்தைப் பிற்பாதியில் சூர்யாவே விளக்கும்போது கிடைப்பது ஒரு வாவ் மொமென்ட்! ஒரு நடிகைக்குக் கம்பேக் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சொல்லுமளவுக்கு நஸ்ரியா பின்னியிருக்கிறார். நஸ்லீன் அட்டகாசமான நடிப்பை வழங்கியுள்ளார். அவரது ...

200 முதியோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆடைகள், நலத்திட்ட உதவிகள் – ஏராளமான பொதுமக்களுக்கு மருத்துவச் சேவைகள்!

Image
தீபாவளித் திருநாளை முன்னிட்டு, சமூகத்தில் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய மக்களின் வாழ்வில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் நோக்கத்துடனும், பொதுமக்களின் உடல்நலத்தைப் பாதுகாக்கும் சமூகப் பொறுப்புணர்வுடனும் தென்காசி மாவட்டம், ஆய்க்குடியில் உள்ள சேனைத் தலைவர் சமூக நலக்கூடத்தில் மாபெரும் தீபாவளி நலவாழ்வு விழா மற்றும் மருத்துவ முகாம் 01.11.2026, ஞாயிற்றுக்கிழமை அன்று சிறப்பாக நடைபெற்றது. துளி அறக்கட்டளை (Thuli Trust) சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சியை நடிகர் திரு. விஜய் சேதுபதி, திரு. அஜித்குமார் ரவீந்திரன், திரு. சிவாஜி பிரபாகர் மற்றும் திரு. ஜெய் பாலா ஆகியோர் இணைந்து முன்னெடுத்தனர். இந்நிகழ்ச்சி விஜய் சேதுபதி நற்பணி மன்றம், வள்ளலார் வேலைவாய்ப்புச் சேவை இயக்கம் (VVVSI Trust), நர்சிங் ஸ்டேஷன் ஹெல்த் கேர் பிரைவேட் லிமிடெட் மற்றும் தமிழ் மண் அறக்கட்டளை ஆகிய அமைப்புகளுடன் இணைந்து நடத்தப்பட்டது. **200 முதியோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு தீபாவளி ஆடைகள்!** தீபாவளித் திருநாளின் மகிழ்ச்சியை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளும் உயரிய நோக்கில், பொருளாதாரத்தில் பின்தங்கிய முதியோர்கள் மற்றும் குழ...

தமிழ் ஹிப்-ஹாப் திறமைகளைக் கொண்டாடும் தனித்துவமான ராப் ரியாலிட்டி போட்டியான ‘தீக்குரல்’ நிகழ்ச்சியை அறிவித்துள்ளது தமிழ் ZEE5

Image
அறிவு, யோகி B மற்றும் சீன் ரோல்டன் நடுவர்களாகப் பங்கேற்கும் இந்தப் புதிய பொழுதுபோக்கு நிகழ்ச்சி, ZEE மியூசிக் உடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது. அசல் இசை நிகழ்ச்சிகள் மற்றும் கடுமையான போட்டிகள் மூலம் வளர்ந்து வரும் அண்டர்கிரவுண்ட் ஹிப்-ஹாப் கலைஞர்களின் திறமைகளைக் கொண்டாடுகிறது.  தேசியம், XX 2026: தமிழ் ஹிப்-ஹாப்பின் ஆற்றலையும் வளர்ந்து வரும் இசை வடிவத்தையும் கொண்டாடும் வகையில், தமிழ் ZEE5, ZEE மியூசிக் உடன் இணைந்து ‘தீக்குரல்’ என்ற புதிய பொழுதுபோக்கு நிகழ்ச்சியை அறிவித்துள்ளது. வளர்ந்து வரும் அண்டர்கிரவுண்ட் கலைஞர்களை ஒன்றிணைத்து, அடுத்த தலைமுறை தமிழ் ராப்பின் குரலாக உருவெடுப்பதற்கான போட்டியை இந்த நிகழ்ச்சி முன்னெடுக்கிறது. கருப்பொருள் சார்ந்த இசை நிகழ்ச்சிகள், படைப்பாற்றல் சவால்கள், தீவிரமான போட்டிகள் மற்றும் பார்வையாளர்களின் பங்கேற்பு எனப் பல அம்சங்களுடன் உருவாகியுள்ள இந்த நிகழ்ச்சி, தனித்துவம், பாடல் வரிகளின் ஆற்றல் மற்றும் உண்மையான கதைசொல்லல் ஆகியவற்றைக் கொண்டாடுகிறது. ‘தீக்குரல்’ நிகழ்ச்சி நவம்பர் 5, 2026 முதல் தமிழ் ZEE5 தளத்தில் பிரத்யேகமாக ஒளிபரப்பாகிறது. போட்டி...

மர்ம முடிச்சுகளுடன் வெளியாகும் அர்ஜுன் தாஸின் ‘ஜான் டோ’! – நவம்பர் 13 முதல் திரையரங்குகளில் வெளியீடு!

Image
அர்கா மீடியாவொர்க்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், மதுமிதாவின் இயக்கத்தில், அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள சைக்கலாஜிக்கல் கிரைம் திரில்லர் திரைப்படமான ‘ஜான் டோ’ (John Doe) வரும் நவம்பர் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதனை முன்னிட்டு நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் படக்குழுவினர் கலந்துகொண்டு படம் குறித்த பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்வில்… *நடிகை அனுபமா பேசியதாவது:* “‘ஜான் டோ’ மிகவும் முக்கியமான, ஆழமான உளவியல் கதைக்களத்தைக் கொண்ட திரைப்படம். இந்தப் படத்தைப் பார்க்கத் திரையரங்கிற்குள் செல்லும்போது நீங்கள் ஒரு நபராக இருப்பீர்கள். ஆனால், படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வரும்போது நிச்சயமாக இன்னொரு நபராக மாறியிருப்பீர்கள். அந்த அளவுக்கு இப்படம் உங்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்” என்றார். *நடிகர் படவா கோபி பேசியதாவது:* “இந்தப் படத்தில் என்னுடைய குரலைப் பற்றிப் பேசுவதைவிட, இந்தப் படத்தின் குரலே அர்ஜுன் தாஸ் தான். அவருடைய ஆழமான குரல் தனித்துவமானது. நாங்கள் வாய்ஸ் ஓவர் பணிகளுக்குச் செல்லு...