Posts

"‘காந்தா’ படத்தில் சமுத்திரக்கனியின் ‘அய்யா’ கதாபாத்திர போஸ்டர் வெளியீடு!"

Image
நடிகர் துல்கர் சல்மானின் ‘காந்தா’ திரைப்படம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கி இருக்கிறது. தற்போது இந்தப் படத்தில் இருந்து நடிகர் சமுத்திரக்கனியின் கதாபாத்திர போஸ்டர் ‘அய்யா’, அவர் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகியுள்ளது. ‘அய்யா’வாக அவரது தோற்றம் கம்பீரமாக இந்த போஸ்டரில் உள்ளது. அதிலும் இந்த புதிய போஸ்டரில் ’துல்கர் சல்மான் மற்றும் சமுத்திரக்கனி நடிக்கும்’ என குறிப்பிடப்பட்டுள்ளதன் மூலம், இந்தப் படத்தில் சமுத்திக்கனி கதாபாத்திரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பது தெரிகிறது.  ஸ்பிரிட் மீடியா மற்றும் வேஃபேரர் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் 'காந்தா' படத்தின் மூலம் பான் இந்தியன் ஸ்டார் துல்கர் சல்மான் கதாநாயகனாக நடித்துள்ளார். செல்வமணி செல்வராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தை ராணா டகுபதி, துல்கர் சல்மான், பிரசாந்த் பொட்லூரி மற்றும் ஜோம் வர்கீஸ் ஆகியோர் தயாரித்துள்ளனர். பாக்யஸ்ரீ போர்ஸ், ராணா டகுபதி, சித்திக், அனிகா சுரேந்திரன் மற்றும் சௌபின் ஷாஹிர் ஆகியோரும் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். *தொழில...

"தர்மயுத்தம்" திரைப்படம் பற்றிய அறிவிப்பு மிகவும் ஆர்வமூட்டுகிறது!

Image
*சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் படத் தலைப்பில் 'செந்தமிழன்' சீமான் ..!* 'தப்பாட்டம்', 'ஆண்டி இண்டியன்', 'உயிர் தமிழுக்கு' ஆகிய வெற்றிப் படங்களைத்  தொடர்ந்து இயக்குநர், தயாரிப்பாளர் மூன் பிக்சர்ஸ், ஆதம் பாவா மற்றும்  பிளானெட் 9 பிக்சர்ஸ் மருத்துவர் இரா.க. சிவக்குமார் இணைந்து தயாரித்திருக்கும் படம் சீமானின் "தர்மயுத்தம்”  இத்திரைப்படத்தில்  செந்தமிழன் சீமான் மற்றும் ஆர்.கே. சுரேஷ், முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, மலையாளத் திரையுலகில் பிரபலமான அனு சித்தாரா நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் இளவரசு, எம்.எஸ்.பாஸ்கர், வெற்றிக் குமரன் , சாட்டை துரை முருகன், ஜெயக்குமார், ஆதிரா பாண்டியலட்சுமி, சௌந்தர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 'பரதேசி', 'தாரை தப்பட்டை', 'ஜோக்கர்', 'டூ லெட்' போன்ற வெற்றிப் படங்களைத் தொடர்ந்து செழியன் ஒளிப்பதிவு செய்ய,  'சீதா ராமம்', 'சித்தா' ஆகிய படங்களைத் தொடர்ந்து விஷால் சந்திரசேகர் இசையமைக்க , கவிப் பேரரசு வைரமுத்து பாடல்களை எழுதியிருக்...

நேச்சுரல் ஸ்டார்' நானி நடிக்கும் 'ஹிட் - தி தேர்ட் கேஸ்' ( HIT - The Third Case) படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

Image
'நேச்சுரல் ஸ்டார்' நானி நடிப்பில் இயக்குநர் சைலேஷ் கொலானு இயக்கத்தில் வால் போஸ்டர் சினிமா மற்றும் யுனானிமஸ் புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் உருவாகியுள்ள 'ஹிட் -தி தேர்ட் கேஸ் ' எனும் திரைப்படம் எதிர்வரும் மே மாதம் முதல் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் வெளியாகிறது. இந்தத் திரைப்படத்தை தமிழில் சினிமாக்காரன் நிறுவனம் வெளியிடுகிறது.  தற்போது படக்குழுவினர் படத்தை விளம்பரப்படுத்தி வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் படத்தின் நாயகன் நானி, நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி, படத்தினை தமிழகம் முழுவதும் வெளியிடும் விநியோகஸ்தர் வினோத் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.  நடிகர் நானி பேசுகையில், '' நான் எப்போது சென்னைக்கு வந்தாலும் என்னுடைய சொந்த வீட்டுக்கு வந்த உணர்வு ஏற்படும். விரைவில் பத்திரிக்கையாளர் சந்திப்பிலும் தமிழில் பேசும் அளவிற்கு பயிற்சி பெற்றுக்கொண்டு பேசுவேன்.  பலமுறை என்னை வடிவமைத்தத...

சுமோ திரைப்படத்தின் விமர்சனம்

Image
கதை சுருக்கம்: விடிவி கணேஷ் நடத்தும் ரெஸ்டரன்ட்டில் வேலை செய்யும் சிவா, சர்பிங் ஆர்வலராகவும், பிரியா ஆனந்தை காதலிக்கும் இளைஞனாகவும் இருக்கிறார். ஒரு நாள் கடற்கரையில் ஒதுங்கும் ராட்சத உருவத்தை (சுமோ வீரர் யோஷினோரி தஷிரோ) காப்பாற்றி, அவரை ஜப்பானுக்கு அனுப்ப முயற்சிக்கிறார். இறுதியில் நடக்கும் சுமோ போட்டியில் யோஷினோரி வெற்றி பெற்றாரா என்பது கதையின் மையம். படத்தின் தரம்: கதையாகப் பார்க்கும்போது, இது ஒரு காமெடி, எமோஷனல் டச், குழந்தைகளைக் கவரும் சம்மர் விடுமுறைப் படமாக வந்திருக்க வேண்டும். ஆனால், அனுபவமற்ற இயக்குநரின் தடுமாற்றத்தால் படம் பெரிதாக ஈர்க்கவில்லை. கதாபாத்திரங்கள் வலுவாகவோ, சுவாரஸ்யமாகவோ இல்லை. சிவாவின் முந்தைய படமான சூது கவ்வும் 2 போலவே, இந்தப் படமும் ரசிகர்களை ஏமாற்றுகிறது.   பிளஸ் பாயிண்ட்ஸ்:   ❃ யோஷினோரி தஷிரோவின் முயற்சிக்கு மதிப்பளிக்கலாம்.   ❃ ஐசரி கணேஷ் தயாரிப்பில் பட்ஜெட் தாராளமாக இருந்தது.   ❃ பிரியா ஆனந்தின் நடிப்பு சில இடங்களில் ஆறுதல்.   ❃ நிவாஸ் கே. பிரசன்னாவின் இசை படத்திற்கு பலம். மைனஸ் பாயிண்ட்ஸ்: ...

கேங்கர்ஸ் - திரை விமர்சனம்

Image
சுந்தர் சி இயக்கிய 'கேங்கர்ஸ்' படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம். பள்ளி ஆசிரியையான கேத்ரின் தெரசா, பள்ளியில் இருந்து மாணவி ஒருவர் மாயமாகி போனதை கண்டு அதிர்ச்சி அடைகிறார். காவல் துறைக்கு புகார் தெரிவிக்கும் அவர், பள்ளியில் நடக்கும் சில அவலங்களையும் அப்போது குறிப்பிடுகிறார். மாயமாகி போன மாணவியை கண்டுபிடிக்க ரகசியமாக ஒரு போலீஸ் அதிகாரியை பள்ளிக்கு அனுப்பி வைக்கிறது காவல்துறை. அதன்படி ஆசிரியராக பள்ளிக்கு வரும் சுந்தர் சி பள்ளியில் நடக்கும் அவலங்களை தட்டி கேட்கிறார். சமூக குற்றங்களில் ஈடுபடுவோரை தனது முகம் தெரியாமல் அடித்து நொறுக்குகிறார். இதற்கிடையில் சுந்தர் சி யை பழிவாங்க பல ஆண்டுகளாக தலைமறைவாக இருக்கும் முக்கிய குற்றவாளியான ஹரீஷ் பேரடி வெளிநாட்டில் இருந்து இந்தியா வருகிறார். ஒரு கட்டத்தில் சுந்தர் சி போலீஸ் அதிகாரி இல்லை என்ற உண்மை வெளிச்சத்துக்கு வருகிறது. சுந்தர் சி ஏன் பள்ளிக்கு வந்தார்? மாயமாகி போன மாணவியின் கதி என்ன? சுந்தர் சி - ஹரிஷ் பேரடி இடையே என்ன பிரச்சினை? என்பது மீதிக்கதை. ஆறடி உயர தோற்றமும், கனிவான பேச்சும் என சுந்தர் சி கலக்கல் நடிப்பை வெளிப்படுத்...

சசிகுமார் சிம்ரன் நடித்து வெளிவரவிருக்கும் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா

Image
நடிகர் சசிகுமார் - சிம்ரன் ஆகிய இரண்டு பிரபல நட்சத்திரங்களும் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் ' டூரிஸ்ட் ஃபேமிலி ' எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. click here trailer link     👈 அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில் உருவாகியுள்ள ' டூரிஸ்ட் ஃபேமிலி 'எனும் திரைப்படத்தில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு ,மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ், எம். எஸ். பாஸ்கர், ரமேஷ் திலக், பக்ஸ் பகவதி பெருமாள், இளங்கோ குமரவேல், ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். படத் தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்ள, கலை இயக்கத்தை ராஜ் கமல் கவனித்திருக்கிறார். தமிழகத்தில் அடைக்கலமாகும் ஈழ அகதிகளின் வாழ்வியலை மையப்படுத்திய இந்த திரைப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் நாசரேத் பஸ்லியான்- மகேஷ் ராஜ் பஸ்லியான் மற்றும் யுவராஜ் கணேசன் ஆகியோர் இ...