Posts

எதையும் கேட்காமல் ‘கண்ணப்பா’ படத்தில் நடித்தது சரி என்று படம் உணர்த்தியது - நடிகை மதுபாலா மகிழ்ச்சி பேச்சு

Image
  நடிகை மதுபாலா பேசுகையில், “அனைவருக்கும் வணக்கம், நிறைய விசயங்கள் சொல்ல வேண்டும் என்று நினைத்து, எதுவும் சொல்ல முடியாமல் போகும். அப்படி ஒரு நிலையில் தான் நான் இருக்கிறேன். இந்த படம் பண்ணுவதற்கு என்னை சிவன் தான் தேர்வு செய்தார், என்று விஷ்ணு சார் நேர்காணலில் சொன்னார். அதுபோல தான் நானும். சிறு வயதில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். யார் படத்தில் நடிக்க வேண்டும், அறிமுகம் எப்படி இருக்க வேண்டும் என்றெல்லாம் யோசிக்காமல், எதுவுமே தெரியாம நடிக்க வந்தவள் நான். நடிகையாக எப்படி அறிமுகமாக வேண்டும் என்றால், பெரிய பெரிய இயக்குநர்கள் பெயரை சொல்வார்கள், ஆனால் நான் அப்படி எல்லாம் சொல்லாமல், எதாவது ஒரு படம், இயக்குநர் யாராக இருந்தாலும் பரவாயில்லை என் முகம் திரையில் வர வேண்டும், என்ற எண்ணத்தில் மட்டுமே நடிக்க வந்தேன். அது ஏ கிரேட் படமா, பி கிரேட் படமா, நல்ல படமா, கெட்ட படமா என்று எதையும் கேட்காமல் நடிக்க வந்தவள் தான் நான். அதுபோல தான் இந்த படத்தின் வாய்ப்பும் அமைந்தது. இந்த படத்திற்காக எனக்கு கால் வந்தபோது உடனே எஸ் சொல்லிவிட்டேன். என்ன கதாபாத்திரம், என்ன கதை என்று எதையும் கேட்கவில்லை, உடனே சம்ம...

‘மனிதர்கள்’ திரைப்பட விமர்சனம்

Image
அறிமுக இயக்குநர் இராம் இந்திராவின் ‘மனிதர்கள்’ ஒரு இரவில் நடக்கும் பதைபதைப்பான த்ரில்லர் பயணத்தை, ஐந்து நண்பர்களை மையப்படுத்தி ‘ராவாக’ சொல்ல முயல்கிறது. திண்டுக்கல் பின்னணியில், கர்லி (கபில் வேலவன்), சதீஸ் (தக்‌ஷா), மனோ (குணவந்தன் தனபால்), தீபன் (அர்ஜுன் தேவ்), சந்திரன் (சம்பா சிவம்) ஆகியோருடன், பிரேம் என்ற நண்பரின் எதிர்பாராத மரணம் கதையைத் தொடங்குகிறது. குடிபோதையில் நடக்கும் ஒரு சம்பவம், கொலையாக உருவெடுக்க, இதை மறைக்க முயலும் நண்பர்களின் பதற்றமும் குழப்பமும் கதையின் மையமாக அமைகிறது. பலம்: கபில் வேலவனின் நடிப்பு : கர்லி கதாபாத்திரத்தில் கபில், பதற்றத்திலும் பக்குவமான முடிவுகளை எடுக்கும் தலைவனாகவும், மர்மமான தொனியுடனும் பளிச்சிடுகிறார். அவரது தேர்வு கதைக்கு பெரும் பலம். தொழில்நுட்ப அம்சங்கள் : ஒளிப்பதிவு : அஜய் ஆபிரகாம் ஜார்ஜின் ஒளிப்பதிவு, குறிப்பாக கார் ஹெட்லைட் காட்சிகளில், பதற்றத்தை துல்லியமாகப் பதிவு செய்கிறது. படத்தொகுப்பு : தின்சாவின் கச்சிதமான கட்-கள், விறுவிறுப்பைத் தக்கவைத்து காட்சிகளைக் கூர்மையாக்குகின்றன. பின்னணி இசை : அனிலேஷ் எல் மாத்யூவின் இசை, உணர்வு மாற்றங்களை திறம்பட கட...

கத்தார் அரசு விருதை வென்ற ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜூன் !!

Image
உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் ஒரு பெயர் – அல்லு அர்ஜூன். அவரின் புகழ் காட்டுத்தீப்போல எட்டுதிக்கும் பரவிக்கொண்டிருக்கிறது. புஷ்பா: தி ரைஸ் திரைப்படத்தின் மூலம், இந்திய அளவில் பிரபலமான அவர், தேசிய விருதை வென்ற முதல் தெலுங்கு நடிகராக வரலாற்றில் இடம்பிடித்தார். இப்போது, அல்லு அர்ஜூன்,  கத்தார் தெலுங்கானா திரைப்பட விருது வென்று மற்றுமொரு சாதனை படைத்துள்ளார். கத்தார் அரசால் வழங்கப்படும் இவ்விருது, தெலுங்கு சினிமாவின் சிறப்பை கொண்டாடுவதற்காக உருவாக்கப்பட்டது. அல்லு அர்ஜூன் புஷ்பா 2: தி ரூல் திரைப்படத்துக்காக சிறந்த நடிகராக இவ்விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். புஷ்பா 2 திரைப்படம் இந்திய பாக்ஸ் ஆபிஸில் ரூ.1900 கோடிக்கும் அதிகமாக வசூலித்து, திரையுலக வரலாற்றில் புதிய சாதனை படைத்தது. இது, அல்லு அர்ஜூனின் தனிச்சிறப்பான திரைப்பயணத்தில்,  இன்னொரு மைல்கல்லாக அமைந்தது. தெலுங்கு பேசும் மாநிலங்களில் மட்டுமல்லாது இந்தியா முழுவதும், அவரின் நடசத்திர கவர்ச்சி, தனித்திறமை மற்றும் விடாமுயற்சி ரசிகர்களை ஈர்த்துவந்திருக்கிறது. கங்கோத்திரியில் தொடங்கி புஷ்பா வரை அவர் கட்டியுள்ள பயணம்...

ஜின் - திரை விமர்சனம்

Image
கதைக்களம்: மலேசியாவில் மியூசிக் பேண்ட் நடத்தும் முகேன், காதல் தோல்வியால் தமிழகம் திரும்புகிறார். அங்கு ஜின் அடைக்கப்பட்ட பெட்டியைத் தொட, ₹5 லட்சம் பரிசு கிடைக்கிறது. அதை லக்கி என நினைத்து வீட்டில் வளர்க்கிறார். ஆனால், ஜின் அவரது குடும்பத்துக்கு துன்பம் தர, முகேன் அதை வெளியே எறிகிறார். பின்னர் ஜின் முழு உருவம் பெற்று நிகழும் சம்பவங்கள் கதையின் மீதி.  படத்தை பற்றிய அலசல் : ஜின் கிட்டதட்ட ஒரு குட்டி சாத்தான் கான்செப்ட், கண்டிப்பாக பந்தயம் அடிக்க வேண்டிய கான்செப்ட். ஆனால், அதை எவ்வளவு சொதப்ப முடியுமோ அப்படி எடுத்துள்ளார்கள். ஜின் முகேன் வீட்டிற்கு வந்தவுடன் எத்தனை திரில், அது வீட்டில் அடிக்கும் லூட்டி என கொண்டு போய் இருந்திருக்கலாம், ஆனால், முகேன் காதல் காட்சிகளே முதல் பாதி முக்கவாசி வந்து பொறுமையை சோதிக்கிறது. பலம்:  ஜின் கான்செப்ட், விவேக்-மெர்வின் இசை. படத்தை தாங்குவது பாலசரவணன் தான், அவர் வரும் காட்சிகள் கொஞ்சம் சிரிக்க வைக்கிறது. பலவீனம்:  முதல் பாதியில் பொறுமையை சோதிக்கும் காதல் காட்சிகள், செயற்கையான நடிப்பு (குறிப்பாக குழந்தை காட்சி), ஜின் உருவம் குழந்...

48 மணி நேரத்தில் முழு படமும் முடித்து திரையிடப்பட இருக்கும் உலக சாதனை திரைப்படம் ‘டெவிலன்’!

Image
ஒரு திரைப்படத்தை எடுப்பதே மிக சவாலான விசயம் என்ற நிலையில், அதை வெளியிடுவது என்பது அதை விடவும் சவாலாக இருக்கும் தற்போதைய காலக்கட்டத்தில், 48 மணி நேரத்தில், ஒரு படத்தின் படப்பிடிப்பு முதல் பின்னணி வேலைகள் வரை, அனைத்து பணிகளையும் முடித்து, படத்தையும் திரையிடும் புதிய உலக சாதனை முயற்சியில் தயாரிப்பாளரும், நடிகருமான ராஜ்குமார் மற்றும் இயக்குநர் பிக்கய் அருண் ஈடுபட்டுள்ளனர். ’டெவிலன்’ என்ற தலைப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு நாளை (மே 29) மாலை 3 மணிக்கு தொடங்கி, அடுத்த நாள் (மே 30) மாலை 3 மணி வரை நடைபெறும். 3 மணி முதல் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் தொடங்கி, மே 31 ஆம் தேதி மாலை 3 மணிக்குள் அனைத்து பணிகளையும் முடித்து, சரியாக மே 31 ஆம் தேதி, மாலை 3 மணிக்கு படத்தை திரையிடுவார்கள். இதுவரை திரைப்படத்துறை வரலாற்றில் யாரும் செய்திராத இத்தகைய சாதனை முயற்சி நோபல் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பெற உள்ளது. ’எக்ஸ்ட்ரீம்’ மற்றும் ‘தூவல்’ ஆகிய படங்களை தயாரித்த சீகர் பிக்சர்ஸ் கமலகுமாரி.பி, ராஜ்குமார்.என் ஆகியோர் மூன்றாவதாக தயாரிக்கும் சாதனைத் திரைப்படமான ‘டெவிலன்’ படத்தை அறிமுக இயக்குநர் பிக...

‘வேம்பு’ திரைப்பட விமர்சனம் - சுருக்கமான பார்வை

Image
‘வேம்பு’ திரைப்படம், எளிமையான கதைக்களம் மற்றும் மனதைத் தொடும் உணர்வுகளுடன், பெண்களின் கல்வி மற்றும் தற்காப்புக் கலையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் ஒரு சிறந்த படைப்பாக அமைந்துள்ளது. மஞ்சள் சினிமாஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஜஸ்டின் பிரபு இயக்கத்தில், ஹரிகிருஷ்ணன், ஷீலா, மாரிமுத்து, ஜானகி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியுள்ள இப்படம், கிருஷ்ணகிரியின் கிராமிய அழகை பின்னணியாகக் கொண்டு நகர்கிறது. கதைச் சுருக்கம் புகைப்படக் கலைஞரான ஹரிகிருஷ்ணன் மற்றும் சிலம்பத்தில் ஆர்வமும், அரசு வேலைக்கான கனவும் கொண்ட ஷீலாவின் கதை. திருமணத்திற்குப் பின், ஒரு விபத்தில் ஹரிக்கு கண்பார்வை பறிபோக, குடும்பப் பொறுப்பையும், தன் சிலம்ப லட்சியத்தையும் ஷீலா தோளில் சுமக்கிறார். ஷீலாவின் சாதனையும், ஹரியின் கண்பார்வை மீட்பும் படத்தின் மையப் புள்ளிகள். பலங்கள் நடிப்பு: ஹரிகிருஷ்ணன் இயல்பான நடிப்பால், கண்பார்வையற்ற கணவனாகவும், மனைவியின் லட்சியத்திற்கு துணையாகவும் மனதில் நிற்கிறார். ஷீலா துணிச்சலான, பாசமுள்ள கிராமத்து பெண்ணாகவும், சிலம்ப வீராங்கனையாகவும் பளிச்சிடுகிறார். மாரிமுத்து (எம்.எல்.ஏ), ஜா...