Posts

பிரபுதேவா – சிம்ரன் இணைந்து நடிக்கும் புதிய காதல் திரைப்படத்திற்கு ‘கமல் ஸ்ரீதேவி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

Image
Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்கும் இப்படத்தை பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிக்கின்றனர். பிரபுதேவா, சிம்ரன் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தில் மிதுன் ஜெய் சங்கர், ஸ்மேகா உள்ளிட்டோரும் இணைந்து நடிக்கின்றனர். ஏற்கெனவே Zion Films மற்றும் MRP Entertainment இணைந்து வழங்கிய ‘வித் லவ்’ திரைப்படம் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றதைத் தொடர்ந்து, இரு நிறுவனங்களும் மீண்டும் இணைந்து இப்படத்தை தயாரிப்பது  குறிப்பிடத்தக்கது. குடும்பத்துடன் இணைந்து ரசிக்கும் வகையில், மனதை வருடும் வித்தியாசமான காதல் கதையாக ‘கமல் ஸ்ரீதேவி’ உருவாகிறது. மூணாறு மற்றும் சென்னையில் படப்பிடிப்பை ஒரே கட்டமாக நிறைவடைந்து, தற்போது இறுதிக்கட்டப் படப்பிடிப்புப் பணிகளில் பரபரப்பாக ஈடுபட்டுள்ளது. இப்படத்தை கிருஷ்ணானந்த் கொட்டாரப்பட்டு எழுதி இயக்குகிறார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். சரண் வேலாயுதன் ஒளிப்பதிவு செய்கிறார். ராஜா ஆறுமுகம் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொள்கிறார். ராஜீவன் தயாரிப்பு வடிவமைப்பையும், சேகர் கலை இயக்கத்தை...

இந்தியாவின் மிகப்பெரிய ரெபெல் ஸ்டார் பிரபாஸிற்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!

Image
பாக்ஸ் ஆபீஸ் வரலாற்றையே மாற்றி எழுதிய 'பாகுபலி' நாயகன்! தெலுங்கு சினிமாவை பான் இந்தியா தளத்திற்குக் கொண்டு சென்ற 'சலார்' நாயகன்! தனது நடிப்பால் அனைவரது மனதையும் வென்ற 'ஃபௌஜி' நாயகன்! இந்திய சினிமாவை ஒரு புதிய சகாப்தத்திற்கு அழைத்துச் செல்லும் 'கல்கி' நாயகன்! தனது 'ஸ்பிரிட்' மூலம் தன்னை நேசிக்கும் ஒவ்வொரு 'டார்லிங்' ரசிகரையும் பெருமிதம் அடையச் செய்வதே அவரது இலக்கு! இந்தியாவின் மிகப்பெரிய ஸ்டாரும், 'ரெபெல் ஸ்டார்' (Rebel Star) என்று அழைக்கப்படுபவருமான பிரபாஸ், பிரம்மாண்டமான பான் இந்தியா திரைப்படங்களின் பட்டியலுடன் கோடிக்கணக்கான ரசிகர்களைத் தொடர்ந்து மகிழ்வித்து வருகிறார். முக்கியமான திரைப்படங்கள், திரையில் அவரது தனித்துவமான தோற்றம் மற்றும் தனது கலை மீதான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவற்றின் மூலம், இந்திய சினிமாவின் பெருமையை அவர் புதிய உயரங்களுக்குக் கொண்டு செல்கிறார். 'ஈஸ்வர்' (Eeshwar) திரைப்படத்துடன் தொடங்கிய அவரது திரைப்பயணம், இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக வெற்றிகரமாகத் தொடர்ந்து, ப...

முகேன் ராவ் நடிக்கும் ‘மைலோ’ (Milo) படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

Image
செல்ல நாயை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘மைலோ’ திரைப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது. SSR Entertainment சார்பில் K I சுரேஷ் தயாரித்துள்ள இப்படத்தில் முகேன் ராவ் (Mugen Rao) கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தை கவின் மூர்த்தி எழுதி இயக்கியுள்ளார். தற்போது வெளியிடப்பட்டுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் முகேன் ராவ் அடர் நீல நிற லெதர் ஜாக்கெட் அணிந்து கம்பீரமாக நிற்க, அவருக்கு அருகில் தங்க நிறத்திலான செல்ல நாய் இடம்பெற்றுள்ளது. மலைப்பகுதியையும் இயற்கைச் சூழலையும் பின்னணியாகக் கொண்ட போஸ்டரில், ‘MORE THAN A PET A SILENT WITNESS’ என்ற வாசகம் இடம்பெற்றிருப்பது படத்தின் மர்மம் நிறைந்த கதைக்களம் குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. 18 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற ஒரு குற்றத்தையும், ‘மைலோ’ எனும் செல்ல நாயையும் மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த குற்றத்தின் பின்னணியில் மறைந்திருக்கும் உண்மையைச் செல்ல நாயின் உதவியுடன் நாயகன் எவ்வாறு கண்டுபிடிக்கிறார் என்பதே இப்பட...

ஜீவாவின் ‘தகப்பன்’ திரைப்படம் வரும் டிசம்பர் 24-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது!

Image
நடிகர் ஜீவா நடிப்பில், லார்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘தகப்பன்’ திரைப்படம் வரும் டிசம்பர் 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை அட்டகாசமான போஸ்டருடன் படக்குழு வெளியிட்டுள்ளது. இயக்குநர் ரா. வெங்கட் இயக்கத்தில் உருவாகும் இப்படம், மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைப் பின்னணியாகக் கொண்டு, அப்பா – மகன் உறவு, குடும்பப் பாசம் மற்றும் மனித உணர்வுகளை மையமாகக் கொண்ட குடும்பக் கதையாக உருவாகி வருகிறது. மதுரையில் படப்பிடிப்பின்போது காட்சிகளை நேரில் பார்த்த பொதுமக்கள் உணர்ச்சிவசப்பட்டு படக்குழுவினரைப் பாராட்டியதாகக் கூறப்படுகிறது. இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. ‘தெனாவட்டு’ திரைப்படத்திற்குப் பிறகு, முழுக்க முழுக்க கிராமப் பின்னணியில் ஜீவா நடிக்கும் படமாக ‘தகப்பன்’ உருவாகி வருகிறது. சமீபத்தில்  வெளியாகி மாபெரும் வெற்றியைப் பெற்ற ‘TTT’ திரைப்படத்திற்குப் பிறகு, மதுரை மண்ணின் மண்வாசனையுடன் கூடிய கதையில் ஜீவா நடிப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அவரது திரைப்பயணத்...

பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய நடிகை அனுமோல்

Image
நவராத்திரி திருவிழாவின் இறுதி நாளான விஜயதசமி நாளன்று, குடும்பத்தின் பொருளாதார முன்னேற்றத்திற்காக இரவு, பகல் பாராமல் ஆட்டோ ஓட்டும் ஐம்பது பெண் ஓட்டுநர்களுக்கு பிரபல திரைப்பட நடிகை அனுமோல் நலத்திட்ட உதவிகளை வழங்கி, அவர்களின் கடின உழைப்பைக் கௌரவித்தார். 'அயலி' இணையத் தொடர் மூலம் டிஜிட்டல் தள ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை அனுமோல். இயல்பிலேயே 'எல்லோரும் சமம்' என்ற மனப்பான்மை கொண்ட நடிகை அனுமோலைச் சந்தித்து ஆட்டோகிராப் கேட்கும் ஒவ்வொரு ரசிகருக்கும் 'Always Choose Kindness' என எழுதி, தனது கையெழுத்தைப் பதிவு செய்பவர். சமூக அக்கறையுடன் செயல்படும் நடிகை அனுமோல், இத்தகைய செயல்பாடுகள் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார். நடிகை அனுமோலை அவரது ரசிகர்கள் அண்மையில் சந்தித்தனர். அப்போது, பெண்களின் பேராற்றலைக் கொண்டாடும் நவராத்திரி திருவிழாவில், குடும்பத்தின் மேன்மைக்காகவும், சொந்தக் காலில் நின்று பொருளாதார ரீதியாகச் சுதந்திரமான சுய அடையாளத்தை உருவாக்கிக்கொண்ட பெண்களைத் தேர்வு செய்து, அவர்களுக்குப் பரிசுகளை வழங்கிக் கௌரவிக்க வேண்டும் ...

அர்ஜுன் தாஸ் முதன் முதலாக போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் ஜான் டோ- John Doe' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Image
அர்கா மீடியாஒர்க்ஸ் ( Arka Mediawoks) நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் ஷோபு யார்லகட்ட ( Shobu Yarlagadda) - பிரசாத் தேவினேனி ( Prasad Devineni) ஆகியோரின் தயாரிப்பில் இயக்குநர் மதுமிதா இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் கதையின் நாயகனாக நடிக்கும் 'ஜான் டோ - John Doe' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் மதுமிதா மற்றும் கதாசிரியர் நிக்கோலஸ் செவாலியர் ( Nicholas Chevaillier) ஆகியோர் இணைந்து கதை, திரைக்கதை எழுதி இருக்கும் 'ஜான் டோ- John Doe' திரைப்படத்தில் அர்ஜுன் தாஸ், சஞ்சனா நடராஜன், ஸ்ருஷ்டி, ஜாரா வினீத் சந்தோக், நீரவ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பிரீதா ஜெயராமன் ISC ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு முஜீப் மஜீத் இசையமைத்திருக்கிறார். கூடுதல் இசையை ஆர்டிஸ்ட் 404 ( Artist 404) எனும் இசைக்குழு அமைத்திருக்கிறது. படத்தொகுப்பு பணிகளை விஜய் வெங்கடரமணன் மேற்கொள்ள தயாரிப்பு வடிவமைப்பாளராக அஷ்வினி காலே பணியாற்றுகிறார்.  படத்தைப் பற்றி இயக்குநர் குறிப்பிடுகையில், '' ஜான் டோ என்பவர் யார்? பாதிக்கப்பட்டவரா? கொலைகா...