அன்பில் அவன் - திரை விமர்சனம்


​திரைக்கதை சுருக்கம்:

​நட்சத்திர ஹோட்டலில் வேலை செய்யும் தம்பதிகளான நாயகன் அசோக் செல்வனும், நாயகி ப்ரீத்தி முகுந்தனும் சந்திக்கும் இன்னல்களும் சவால்களுமே 'அன்பில் அவன்' படத்தின் மையக்கதை.

​காதலுக்குப் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிக்க, அதை மீறி திருமணம் செய்து வாழத் தொடங்குகிறார்கள். இருவருக்குமே வேலை பார்க்கும் நட்சத்திர ஹோட்டலில் பணிச்சுமையும் அதிகம், அவமானங்களால் நேரும் மனச்சுமையும் அதிகம். இதனால் கடனை வாங்கியாவது ஊட்டியில் சொந்தமாக ஒரு 'ஹோம்ஸ்டே' கட்ட வேண்டும் என முடிவெடுக்கிறார்கள். ஆனால், அங்கு ஹோட்டல் தொடங்கும் முன் அவர்களுக்குப் பல இன்னல்கள் நேர்கின்றன. அவற்றை இருவரும் எப்படிக் கடந்து மேலெழுகிறார்கள் என்பதே மீதிக்கதை.

​நடிப்பு மற்றும் கதாபாத்திரங்கள்:
​அசோக் செல்வன்: இவருக்கு இப்படம் ஒரு 'ஆக்ஷன் ஹீரோ' இமேஜைப் பெற்றுத் தரும். ஆக்ஷன் காட்சிகளில் அவ்வளவு நேர்த்தியாகப் பொருந்தியிருக்கிறார்.
​ப்ரீத்தி முகுந்தன்: ஒரு தேர்ந்த நடிகை என்ற பெயரை இப்படம் இவருக்குப் பெற்றுத் தரும். இருப்பினும், பின்பாதியில் இவரை இன்னும் நன்றாகப் பயன்படுத்தியிருக்கலாம்.
​மஹா (டெல்லி கணேஷின் மகன்): இன்ஸ்பெக்டராக வந்து நல்ல நடிப்பைக் கொடுத்துள்ளார். குறிப்பாக, இவருக்கும் நாயகிக்குமான காட்சிகளில் மிகச் சிறப்பான பங்களிப்பு.
​கதிர் பாலு: இவருடைய வில்லத்தனம் பக்கா!
​ரேவதி: இவரது கதாபாத்திரம் கதையில் எந்தப் பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
​தொழில்நுட்பக் குழு:
​இசை: கோவிந்த் வசந்தாவின் இசை கவித்துவம் நிறைந்ததாக அமைந்துள்ளது.
​ஒளிப்பதிவு: கௌதம் ராஜேந்திரனின் கேமரா, சென்னை நிலத்தையும் ஊட்டி அழகையும் கச்சிதமாகப் பதிவு செய்துள்ளது.

​இயக்கம் & திரைக்கதை 
​விக்னேஷ் ராஜாவின் கதையிலும் திரைக்கதையிலும் எந்தக் குழப்பமும் இல்லை. ஆனால், படம் ஒரே 'மூடில்' பயணிக்கவில்லை என்பதுதான் மைனஸ்.
​முன்பாதியில் காதல், குடும்பம், வேலை என எதார்த்தமாகப் பயணிக்கும் படம், பின்பாதியில் திடீரென 'ஆக்ஷன் மோடுக்கு' மாறுகிறது. இந்த Mood Shift-ஐ நமது மனம் உடனே ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.
​நல்ல மேக்கிங்கைக் கொடுத்த இயக்குநர் ஆர். கார்த்திகேயன், இன்னும் ஆழமான ஸ்டேஜிங்கை (Staging) கொடுத்திருக்கலாம். கூடுதல் திரைக்கதை ஆசிரியர்களான விக்னேஷ் ராஜா மற்றும் அசோக் செல்வன் இருவரும் திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் உழைத்திருக்கலாம்.

​இறுதித் தீர்ப்பு:
​"மிகச்சிறந்த படமாக வந்திருக்க வேண்டிய 'அன்பில் அவன்', 'ஓரளவு நல்ல படம்' என்ற நிலையோடு நிற்கிறது."

Comments

Thandora Talkies

கானா உலகநாதன் முக்கிய வேடத்தில் — “ஐயம்” திரைப்படம்!

ராட்ட - சினிமா விமர்சனம்

சப்தம்’ படப்பிடிப்பில் அமானுஷ்ய விஷயங்களை உணர்ந்தேன்” ; நடிகர் ஆதியின் அதிர்ச்சி அனுபவம்

படைத்தலைவன் திரைவிமர்சனம் - ஒரு பார்வை