ஏன் என்னை ஏதோ செய்தாய் - திரை விமர்சனம்


 கதைச்சுருக்கம் :

கொண்டதே கோலம் கண்டதே காமம் என வாழ்ந்து வரும் ஹீரோ ஆண்டனி! அவர் பாலியல் தொழில் செய்யும் பெண் ஒருவரை வீட்டிற்கு அழைக்கிறார்! இருவருக்கும் ஒரு இரவு கழிகிறது! அத்தோடு இந்த உறவு முடியவில்லை. உடலின்பத்தைத் தாண்டி அந்தப் பெண்ணிடம் வேறொன்று இருப்பதாக ஹீரோ ஆண்டனி நம்புகிறார். அதனால் அந்தப்பெண்ணை காதலிக்கிறார். அந்தப் பெண்ணும் ஒரு கட்டத்தில் காதலில் விழ, இந்தக் காதல் கடைசிவரை விழாமல் பயணித்ததா? என்பதே படத்தின் கதை

ஹீரோ ஆண்டனி அச்சு அசலாக கெளதம் மேனென் பட ஹீரோ போலவே பேசுகிறார், நடக்கிறார், சிரிக்கிறார் நடிக்கிறார். அவரின் நேச்சரே அப்படித்தான் என்பதால் போகப்போக நமக்கு செட்டாகிவிடுகிறது. நாயகி மதுமிதா தாஸ் தூள் கிளப்பியிருக்கிறார். எமோஷ்னல் காட்சிகளில் அவர் காட்டியிருக்கும் பெர்பாமன்ஸ் சூப்பர். வெல்கம் டூ தமிழ்சினிமா! ஜீவாரவி, ரெஜின் ரோஸ், நவ்யா சுஜி உள்ளிட்ட பிற கேரக்டர்கள் எல்லோரும் ஒகே ரகம்

பைட்ரோவில்லணி தனது ஒளிப்பதிவு பணியை திறம்படச் செய்துள்ளார். குறைந்தபட்ச கேரக்டர்கள் தான் திரையில் இருக்கிறார்கள். ஆனால் ஷாட் கம்போசிங்கில் அந்தக் குறையைத் தெரியாமல் சமாளித்துள்ளார். ஜாய்கர் தனது இசையின் மூலம் நல்ல பாடல்களையும் நல்ல பேக்ரவுண்ட் ஸ்கோரையும் கொடுத்துள்ளார்

கவிதை போல ஒரு கதையைக் கையாண்டுள்ளார் இயக்குநர் ஆண்டனி. தயாரிப்பாளரும் ஹீரோவும் அவரே என்பதால் அதீதமாக சில முயற்சிகளை எடுத்துள்ளார். குறிப்பாக நிறைய காட்சிகளில் சவுண்டிங்-ஐ குறைவாக யூஸ் பண்ணியிருந்தார். பெண்களின் பாலியல் தொழிலை எந்த இடத்திலும் விமர்சனம் செய்யாமல் அப்படியே ஏற்றுக்கொண்ட முதிர்ச்சியான எழுத்து அவருக்கு வாய்த்திருக்கிறது. அந்த நல்ல மனதிற்காகவே இந்தப்படத்திற்கு ஹார்ட்டீன் விடலாம்! படத்தின் ஸ்கேல் மிகவும் சிறியது. அதனால் இப்படத்தை 1.30 நிமிடங்களிலே முடித்திருக்கலாம் என்று தோன்றியது. இருந்தாலும் ரொம்ப நாட்களுக்குப் பிறகு ஒரு நல்ல சினிமாட்டிக் லவ் ஸ்டோரி பார்த்த Feel-ஐ கொடுக்கிறது இந்தப்படம்

Comments

Thandora Talkies

கானா உலகநாதன் முக்கிய வேடத்தில் — “ஐயம்” திரைப்படம்!

ராட்ட - சினிமா விமர்சனம்

படைத்தலைவன் திரைவிமர்சனம் - ஒரு பார்வை

சப்தம்’ படப்பிடிப்பில் அமானுஷ்ய விஷயங்களை உணர்ந்தேன்” ; நடிகர் ஆதியின் அதிர்ச்சி அனுபவம்