ஐ நோபடி - விமர்சனம்


மலையாளத்திலிருந்து மற்றொரு மணி ஹைஸ்ட்  மாஸ்டர் பீஸ் படம்

மனைவி பார்வதி, இரு மகள்கள் என அப்பர் மிடில் கிளாஸ் குடும்பத்தலைவனாக இருக்கிறார் பிரித்விராஜ் சுகுமாரன். படத்தின் ஆரம்பத்தில் பிரித்விராஜுக்கும் பார்வதிக்கும் சின்ன நெருடல் இருப்பதாக தெரியவருகிறது. அதன்பின் ஒரு கும்பல் ஒரு வங்கியை கொள்ளையடிக்கிறார்கள். அந்தக்கும்பலிடம் சிக்கி அதன்பின் அவர்களை கொன்றொழித்து மீள்கிறார் பிரித்விராஜ். அதன்பின் கொள்ளைக்கான காரணகர்த்தா அவர்தான் என்றும், கொள்ளையடித்த பணமெல்லாம் அவரிடம் தான் இருக்கிறது என்றும், காவல்துறையும் சமூகமும் சந்தேகிக்கிறது. அதனாலே அவருக்குப் பல இன்னல்கள் வருகின்றன. அவற்றையெல்லாம் ஹீரோ எப்படிச் சமாளித்தார் என்பதே படத்தின் கதை

நாயகனாக பிரித்விராஜ் சுகுமாரன் இந்தப்படத்தில் அசுரப்பாய்ச்சலை நிகழ்த்தியுள்ளார். படத்தில் அவருக்கு எந்த மாஸ் மொமெண்ட்ஸும் கிடையாது. எளிமையான ஹீரோயிசத்தில் வலிமையான நடிப்பைக் கொடுத்துள்ளார். பார்வதி திருவோத்து நடிப்பால் படத்தை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்தியுள்ளார். இரு குட்டிப்பெண்களின் நடிப்பில் அவ்வளவு மெச்சூட். சூப்பர்! லாரி டிரைவராக வரும் அசோகன் நடிப்பில் எதார்த்தம் மின்னுகிறது. சஸ்பென்சன் காவலதிகாரியாக வரும் ஹக்கிம் ஷாஜகான்,முதல்வராக வரும் விஜயராகவன் என பலரும் தத்ரூபமான நடிப்பால் கவர்கிறார்கள்

தினேஷ் புருஷோத்தமன் தரமான ஒளிப்பதிவை வழங்கியுள்ளார். குறிப்பாக ஒரு லிப்ட் சண்டைக்காட்சியில் ஆகச்சிறந்த ஷாட்ஸை வைத்துள்ளார். ஜேக்ஸ் பிஜாய் ஒரு முழுமையான பின்னணி இசையை வழங்கியுள்ளார். கதைக்கேற்ற பாடல்களும் இன்ட்ரெஸ்டிங்!

இயக்குநருக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை படத்தின் எழுத்தாளர் சமீர் அப்துல்க்கும் கொடுத்துள்ளனர். கிரேட்! படத்தை சிறப்பாக இயக்கியிருக்கிறார் நிசாம் பஷீர். ஒரு சின்ன விசயத்தில் ஆரம்பித்து, அதைப் படிப்படியாக வளர்த்து, நாட்டின் மிக முக்கிய பிரச்சனையாக உருமாற்றி, நாட்டின் முதல்வரே அதில் தலையிட வேண்டியளவிற்கு கொண்டு வந்த அந்த திரைக்கதை உத்தி இருக்கே பிரமாதம். பின்பாதியில் சில இடங்களை ஷார்ப் செய்திருக்கலாம். இருந்தாலும் ஒரு Full entertainment-க்கு உத்திரவாதம் தருகிறது இந்த I,nobody

Comments

Thandora Talkies

கானா உலகநாதன் முக்கிய வேடத்தில் — “ஐயம்” திரைப்படம்!

ராட்ட - சினிமா விமர்சனம்

படைத்தலைவன் திரைவிமர்சனம் - ஒரு பார்வை

சப்தம்’ படப்பிடிப்பில் அமானுஷ்ய விஷயங்களை உணர்ந்தேன்” ; நடிகர் ஆதியின் அதிர்ச்சி அனுபவம்