Posts

ஏன் என்னை ஏதோ செய்தாய் - திரை விமர்சனம்

Image
 கதைச்சுருக்கம் : கொண்டதே கோலம் கண்டதே காமம் என வாழ்ந்து வரும் ஹீரோ ஆண்டனி! அவர் பாலியல் தொழில் செய்யும் பெண் ஒருவரை வீட்டிற்கு அழைக்கிறார்! இருவருக்கும் ஒரு இரவு கழிகிறது! அத்தோடு இந்த உறவு முடியவில்லை. உடலின்பத்தைத் தாண்டி அந்தப் பெண்ணிடம் வேறொன்று இருப்பதாக ஹீரோ ஆண்டனி நம்புகிறார். அதனால் அந்தப்பெண்ணை காதலிக்கிறார். அந்தப் பெண்ணும் ஒரு கட்டத்தில் காதலில் விழ, இந்தக் காதல் கடைசிவரை விழாமல் பயணித்ததா? என்பதே படத்தின் கதை ஹீரோ ஆண்டனி அச்சு அசலாக கெளதம் மேனென் பட ஹீரோ போலவே பேசுகிறார், நடக்கிறார், சிரிக்கிறார் நடிக்கிறார். அவரின் நேச்சரே அப்படித்தான் என்பதால் போகப்போக நமக்கு செட்டாகிவிடுகிறது. நாயகி மதுமிதா தாஸ் தூள் கிளப்பியிருக்கிறார். எமோஷ்னல் காட்சிகளில் அவர் காட்டியிருக்கும் பெர்பாமன்ஸ் சூப்பர். வெல்கம் டூ தமிழ்சினிமா! ஜீவாரவி, ரெஜின் ரோஸ், நவ்யா சுஜி உள்ளிட்ட பிற கேரக்டர்கள் எல்லோரும் ஒகே ரகம் பைட்ரோவில்லணி தனது ஒளிப்பதிவு பணியை திறம்படச் செய்துள்ளார். குறைந்தபட்ச கேரக்டர்கள் தான் திரையில் இருக்கிறார்கள். ஆனால் ஷாட் கம்போசிங்கில் அந்தக் குறையைத் தெரியாமல் சமாளித்து...

எம். எஸ். பாஸ்கர் நடிப்பில் ‘விடியும் காத்திரு’… மிரட்டும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு.

Image
‘விடியும் காத்திரு’… எம்.எஸ். பாஸ்கர் நடிக்கும் புதிய க்ரைம் திரில்லர்! எம்.எஸ். பாஸ்கர் நாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம் ‘விடியும் காத்திரு’. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. Friends Production House நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை பி.எம். ரவிச்சந்திரன் தயாரிக்கிறார். அயோத்தி வளர்மதி இணைத் தயாரிப்பாளராக பணியாற்றுகிறார். இயக்குநர்கள் பாலா மற்றும் மிஷ்கின் படங்களின் கதை விவாதங்களில் பங்காற்றிய ஆர். அரவிந்த ராஜன், தனது முதல் திரைப்படமாக ‘விடியும் காத்திரு’ படத்தை இயக்கியுள்ளார். எம்.எஸ். பாஸ்கர் இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார். அவருடன் அம்ஜதா ஷெரின் முதன்மை பெண்கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், காவலர் கதாபாத்திரத்தில் கோபி அயோத்தி, பேபி ஶ்ரீஜிதா, ராகேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சுவாரஸ்யமான க்ரைம் திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படம், ரசிகர்களை இருக்கை நுனியில் அமர வைக்கும் வகையிலான பரபரப்பான திரைக்கதையுடன், அனைத்து தரப்பினரும் ரசிக்கும் படமாக உருவாக...

ஒரிஜினல் மான்ஸ்டர்: மும்பையில் நட்சத்திரங்கள் பங்கேற்ற பிரம்மாண்ட நிகழ்வில் தலைப்பு மற்றும் மோஷன் போஸ்டர் வெளியீடு

Image
மிகுந்த எதிர்பார்ப்பில் உருவாகி வரும் ஒரிஜினல் மான்ஸ்டர் திரைப்படத்தின் தலைப்பு மற்றும் மோஷன் போஸ்டர், ஆகஸ்ட் 28 அன்று மும்பையில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் வெளியிடப்பட்டது. இதன் மூலம், தனது தாய்த் திரையுலகைத் தாண்டி பார்வையாளர்களுக்கு இப்படம் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டதுடன், பான் இந்தியா பயணத்திற்கான எதிர்பார்ப்பும் தொடங்கியுள்ளது. இந்நிகழ்வில் படத்தின் முக்கிய உறுப்பினர்கள் மட்டுமின்றி, இந்திய திரையுலகின் மிகவும் மதிக்கப்படும் பல முன்னணி பிரபலங்களும் கலந்து கொண்டனர். இயக்குநர் ஆர். சந்துரு, புகழ்பெற்ற தயாரிப்பாளரும் வழங்குநருமான திரு. ஆனந்த் பண்டிட், பான் இந்தியா சூப்பர் ஸ்டார் டாக்டர். சிவராஜ்குமார், திருமதி. கீதா சிவராஜ்குமார், பிரபல நடிகர் சுனில், இசையமைப்பாளர் அஜனீஷ் லோக்நாத் மற்றும் ஒளிப்பதிவாளர் ஏ.ஜே. ஷெட்டி ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு, ஒரிஜினல் மான்ஸ்டர் படக்குழுவிற்கு இந்த மாலை நேரத்தை மறக்க முடியாததாக மாற்றினர். மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த மோஷன் போஸ்டர், டாக்டர். சிவராஜ்குமார், ஆர். சந்துரு, ஆனந்த் பண்டிட், கீதா சிவராஜ...

மூன்வாக்’ - 2026 தீபாவளி விருந்தாக மகிழ்ச்சி, சிரிப்பை அள்ளித் தரும் குடும்ப பொழுதுபோக்கு படமாக திரைக்கு வருகிறது.

Image
பிஹைண்ட்வுட்ஸ் புரொடக்ஷன்ஸ் (Behindwoods Productions) பெருமையுடன் வழங்கும் ‘மூன்வாக்’ திரைப்படம் 2026 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. நடனப் புயல் பிரபுதேவா மற்றும் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் ஆகியோரின் புகழ்பெற்ற கூட்டணியில் உருவாகி உள்ள இத்திரைப்படம், பார்வையாளர்களுக்கு சிரிப்பும், மறக்க முடியாத குடும்ப தருணங்களும் நிறைந்த ஒரு பிரம்மாண்டமான திருவிழா அனுபவத்தைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. திரையரங்குகளை கொண்டாட்டமாக மாற்றும் ‘மூன்வாக்’ திரைப்படம், வயது வித்தியாசமின்றி அனைத்து பிரிவு பார்வையாளர்களுக்கும் நிச்சயம் மிகச்சிறந்த அனுபவத்தை வழங்கும்  ஏ.ஆர். ரஹ்மானின் கலக்கலான இசை அமைப்பில் உருவாகியுள்ள 'மூன்வாக்' திரைப்படத்தில் பிரபுதேவா கதாநாயகனாக நடித்துள்ளார். அவருடன் யோகி பாபு, அஜு வர்கீஸ், அர்ஜுன் அசோகன், சாட்ஸ், நிஷ்மா, சுஷ்மிதா, ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், லொள்ளு சபா சுவாமிநாதன், டாக்டர் சந்தோஷ் ஜேக்கப், தீபா சங்கர் மற்றும் ராம்குமார் நடராஜன் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளமே இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தின் மிக மு...

Romeo Pictures – Aviate Pictures இணையும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்!

Image
பிரம்மாண்ட திரைப்படத் தயாரிப்பிலும், வெற்றிகரமான விநியோகத்திலும் முத்திரை பதித்த தயாரிப்பாளர் ராகுலின் Romeo Pictures நிறுவனம், தனது புதிய படத்தினை Aviate Pictures கோகுல் ஸ்ரீனிவாசனுடன் இணைந்து தயாரிக்கிறது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று இனிதே துவங்கியது. ‘ரைட்டர்’ பட இயக்குநரும், ‘DC’ படத்தின் எழுத்தாளருமான ஃபிராங்க்ளின் ஜேக்கப் இப்படத்தை இயக்குகிறார். இளைய திலகம் பிரபு மற்றும் விஜய் வர்மா முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தில், நடிகை ஷிவாத்மிகா ராஜசேகர் கதாநாயகியாக நடிக்கிறார். Romeo Pictures ராகுல் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்து நடிக்கிறார். டார்க் ஹியூமர் ஜானரில், வித்தியாசமான கதைக்களத்தில், திரில்லர் கலந்த காமெடி திரைப்படமாக இப்படம் உருவாகவுள்ளது. படப்பிடிப்பின் முதல் நாளான இன்று, நடிகர் விக்ரம் பிரபு மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோர் படப்பிடிப்புத் தளத்திற்கு நேரில் வருகை தந்து, படக்குழுவினரை சந்தித்து தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இவர்களின் வருகை படக்குழுவினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது. இப்படத்தில் முத்...

மீண்டும் ரசிகர்களை உற்சாகப்படுத்த மேடையில் தோன்றும் 'விக்கல்ஸ் ஆஃப் விக்ரம்.

Image
மேடை உலகில் ஸ்டாண்ட் அப் காமெடி செய்து ரசிகர்களை புன்னகை புரிய வைப்பதுடன் பிரச்சனைகளை புதிய கோணத்தில் பார்க்கலாமே..! என்ற எண்ணத்தை விதைக்கும் நவரச பேச்சு நாயகன் 'விக்கல்ஸ் ஆப் விக்ரம்' - திரைப்படத்தில் நாயகனாக நடித்து தன் பங்களிப்பை நிறைவு செய்தவுடன்... மீண்டும் புதிய விசயங்களுடன் மேடை ஏறி, 'விக்கல்ஸ் ஆஃப் விக்ரம்' ஸ்டாண்ட் அப் காமெடியை நிகழ்ச்சியை தொடர்கிறார். இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.  பட்டிமன்றம்- பேச்சரங்கம்- கருத்தரங்கம்- என தமிழ் மொழியில்.. விளிம்பு நிலை மக்கள் முதல் மேட்டுக்குடி மக்கள் வரை தினசரி சந்திக்கும் சமூகம் சார்ந்த சிக்கல்களை தனக்கே உரிய அவல நகைச்சுவை பாணியில் சரளமாக உரையாடி வருகை தந்திருக்கும் பார்வையாளர்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைப்பதில் விக்கல்ஸ் விக்ரம் இன்று வரை தனித்துவ பாணியை கடைப்பிடித்து வருகிறார்.  இவர் தற்போது அறிமுக இயக்குநர் கே. சி .குரு இயக்கத்தில் உருவான 'லைட் வெயிட் பேபி' திரைப்படத்தில் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இப்படத்தின் பணிகளை முழுமையாக நிற...