Posts

விஜய் சேதுபதி நடித்த ‘பத்தா’ திரைப்படத்தின் சக்சஸ் மீட் நிகழ்ச்சி!

Image
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ், ஹரிகிருஷ்ணன்,சாந்தி பாலச்சந்திரன், அர்ஜுன் சிதம்பரம், சாய் பிரித்வி ராஜ், சஹஸ்ரா, அஜய் கோஷ், தீபா வெங்கட் நடிப்பில், பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் உருவாகி, அக்டோபர் 1ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘பத்தா’. இப்படத்திற்கு சாய் அப்யங்கர் இசையமைக்க, செல்வகுமார் எஸ்.கே. ஒளிப்பதிவு செய்திருந்தார். படத்தொகுப்பு: ஆர். கலைவாணன். அட்லீ வழங்க, ஸ்டார் ஸ்டுடியோ18 (Star Studio18)  , ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ் (A for Apple Studios) , சினி 1 ஸ்டுடியோஸ் புரொடக்‌ஷன் நிறுவனங்கள் (Cine 1 Studios Production) சார்பில் முராத் கெதானி, பிரியா அட்லீ, அலோக் ஜெயின் & அஜித் அந்தாரே ஆகியோர் தயாரித்திருந்தனர். ஆக்சன் படமாகத் தொடங்கி, மானுட மெல்லுணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் சுவாரஸ்யமாக விரியும் கதையில் உருவான ‘பத்தா’ திரைப்படம், விமர்சன ரீதியாக ஊடகங்களால் பாராட்டப்பட்டும், வசூல் ரீதியாகத் திரையரங்குகள் அதிகரிக்கப்பட்டும் வெற்றிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இந்த வெற்றி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளும் வகையில், ‘பத்தா’ படக்குழுவினர் ‘சக்...

அன்பில் அவன் - திரை விமர்சனம்

Image
​திரைக்கதை சுருக்கம்: ​நட்சத்திர ஹோட்டலில் வேலை செய்யும் தம்பதிகளான நாயகன் அசோக் செல்வனும், நாயகி ப்ரீத்தி முகுந்தனும் சந்திக்கும் இன்னல்களும் சவால்களுமே 'அன்பில் அவன்' படத்தின் மையக்கதை. ​காதலுக்குப் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிக்க, அதை மீறி திருமணம் செய்து வாழத் தொடங்குகிறார்கள். இருவருக்குமே வேலை பார்க்கும் நட்சத்திர ஹோட்டலில் பணிச்சுமையும் அதிகம், அவமானங்களால் நேரும் மனச்சுமையும் அதிகம். இதனால் கடனை வாங்கியாவது ஊட்டியில் சொந்தமாக ஒரு 'ஹோம்ஸ்டே' கட்ட வேண்டும் என முடிவெடுக்கிறார்கள். ஆனால், அங்கு ஹோட்டல் தொடங்கும் முன் அவர்களுக்குப் பல இன்னல்கள் நேர்கின்றன. அவற்றை இருவரும் எப்படிக் கடந்து மேலெழுகிறார்கள் என்பதே மீதிக்கதை. ​நடிப்பு மற்றும் கதாபாத்திரங்கள்: ​அசோக் செல்வன்: இவருக்கு இப்படம் ஒரு 'ஆக்ஷன் ஹீரோ' இமேஜைப் பெற்றுத் தரும். ஆக்ஷன் காட்சிகளில் அவ்வளவு நேர்த்தியாகப் பொருந்தியிருக்கிறார். ​ப்ரீத்தி முகுந்தன்: ஒரு தேர்ந்த நடிகை என்ற பெயரை இப்படம் இவருக்குப் பெற்றுத் தரும். இருப்பினும், பின்பாதியில் இவரை இன்னும் நன்றாகப் பயன்படுத்தியிருக்கலாம். ​மஹ...

டோன்ட் ட்ரபிள் த ட்ரபிள் - விமர்சனம்

Image
வறுமையை வாழ்வாகக் கொண்ட பகத் பாசில் ஒரு ஆம்புலன்ஸ் டிரைவர். பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக ஆம்புலன்ஸைத் தாறுமாறாக ஓட்டும் நபர். ஆனால், வாழ்க்கையை ஓட்டுவதற்காக அவர் செய்யும் ஒரு செயல், அவருடைய உயிரையே காப்பாற்றிக்கொள்ள வேண்டிய இக்கட்டான சூழலை உருவாக்குகிறது. அதிலிருந்து தப்பிக்க அவருக்கு 25 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. இதற்காக ஒரு பணக்காரச் சிறுமியைக் கடத்துகிறார். ஆனால், அந்தச் சிறுமியிடம் இருக்கும் மர்மம் என்ன? அதன் பின்னணியில் இருப்பது என்ன? என்பதே படத்தின் விரிவான கதை. நடிப்பில் அசத்தும் பகத் பாசில்! முதல்பாதி வரை இந்தப் படத்தில் பகத் பாசில் நடிப்பதற்கு என்ன இருக்கிறது என்ற எண்ணமே தோன்றுகிறது. ஆனால், இரண்டாம் பாதியில் அந்த எண்ணத்தை அடித்து நொறுக்கிவிடுகிறார். தனது தேர்ந்த நடிப்பால் பார்வையாளர்களை வியக்க வைக்கிறார். சிறுமியாக வரும் சாரா பலேகர் நம் நெஞ்சை உலுக்கிவிடுகிறார். குறிப்பாக, கடைசி 20 நிமிடங்களில் படத்தின் ஆன்மாவாகவே மாறிவிடுகிறார். இவர்களுடன் நடித்துள்ள மகேஷ் மஞ்ச்ரேகர், சௌரப் சச்தேவா, வெங்கடேஷ் காகுமானு உள்ளிட்டோரும் தங்களது நடிப்பால் கவனம் ஈர்க்கின்றன...

பத்தா - திரை விமர்சனம்

Image
வன்முறையை விட்டொழிக்கச் சொல்லும் ஒரு விண்டேஜ் சினிமா   தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு எதார்த்தமான, சுவாரஸ்யமான படைப்பைக் கொடுத்து மிரட்டியிருக்கிறார் இயக்குநர் பாலாஜி தரணிதரன். வன்முறை சூழ நிறைந்த இன்றைய சினிமாவில், "வன்முறையை விட்டொழியுங்கள்" என்பதை மிகவும் நேர்த்தியாகவும் நகைச்சுவையாகவும் எடுத்துரைக்கிறது இந்த 'பத்தா' திரைப்படம். கதைக்களம்: படத்தில் ஆகப்பெரும் ரவுடியாக வருகிறார் விஜய் சேதுபதி. பிறரைப் பயமுறுத்தவும் தனது அதிகாரத்தைக் காட்டவும் வன்முறையைக் கையாள அவர் ஒருபோதும் தயங்குவதில்லை. அப்படிப்பட்ட ஒரு பவர்ஃபுல் ரவுடி, எதிர்பாராதவிதமாக சிறுவன் சாயிடம் ஒரு விஷயத்தில் மாட்டிக்கொள்கிறார்! "என்னாது இது? ஒரு பெரிய ரவுடி சிறுவனிடம் மாட்டுவதா? அது எப்படி சாத்தியம்?" என்ற கேள்வி உங்களுக்கு எழுகிறதல்லவா? அதற்கான பதிலையும், சுவாரஸ்யமான காட்சிகளையும் ஒரு பள்ளிக்கூட பாத்ரூமில் வைத்திருக்கிறார் இயக்குநர்! நடிகர்களின் பங்களிப்பு:  * விஜய் சேதுபதி (VJS): "ரவுடின்னா இனி 'பத்தா' தான்!" எனச் சொல்லும் அளவிற்கு மாஸ் காட்டியிருக்கிறார். கழிவறைக...

ஃபஹத் பாசிலின் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ அக்டோபர் 2ல் ரிலீஸ்

Image
எஸ்.எஸ். ராஜமௌலி வழங்கும், ஃபஹத் பாசில் நடிப்பில் உருவாகியுள்ள ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ திரைப்படம் அக்டோபர் 2ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. அர்கா மீடியா ஒர்க்ஸ் மற்றும் ஷோயிங் பிசினஸ் நிறுவனங்கள் சார்பில் ஷோபு யெர்லகடா, எஸ்.எஸ். கார்த்திகேயா தயாரிப்பில், ஷஷாங்க் யெலெட்டி இயக்கியுள்ள இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை சக்தி பிலிம் பேக்டரி சார்பில் சக்திவேலன் பெற்றுள்ளார். படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் எஸ்.எஸ். ராஜமௌலி, ஃபஹத் பாசில், எஸ்.எஸ். கார்த்திகேயா, குழந்தை நட்சத்திரம் சாரா சச்தேவ், படத்தொகுப்பாளர் பிரவீண் ஆண்டனி உள்ளிட்ட படக்குழுவினரும், நடிகர் சூர்யா மற்றும் தயாரிப்பாளர் ஐசரி கே. கணேஷ் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்களும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய எஸ்.எஸ். ராஜமௌலி, படத்தின் கதையை ஒரே வரியில் இயக்குநர் ஷஷாங்க் யெலெட்டி கூறிய விதம் தன்னை மிகவும் கவர்ந்ததாக தெரிவித்தார். “ஒரு பேயை கடத்திய மனிதனின் கதை” என்ற அந்த ஒற்றை வரியே இப்படத்தை உருவாக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியதாக ...

சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘SK27’ – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Image
தமிழ் திரையுலகில் பல தசாப்தங்களாக வித்தியாசமான கதைக்களங்களையும், தரமான படைப்புகளையும் வழங்கி வரும் சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் அடுத்த பிரம்மாண்ட தயாரிப்பாக, சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய திரைப்படம் உருவாகிறது. தற்காலிகமாக ‘SK27’ என அழைக்கப்படும் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. டி.ஜி. தியாகராஜன் வழங்கும் இப்படத்தை செந்தில் தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன் மற்றும் சாய் சித்தார்த் ஆகியோர் தயாரிக்கின்றனர். இப்படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக கயாது லோகர் நடிக்கிறார். சிவகார்த்திகேயன் – கயாது லோகர் இணையும் முதல் திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. ‘பரிதாபங்கள்’ புகழ் சுதாகர் மற்றும் ஜார்ஜ் மரியான் ஆகியோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். முன்னணி நடிகராக பல்வேறு வெற்றிப் படங்களை வழங்கி வரும் சிவகார்த்திகேயனின் அடுத்த படைப்பாக உருவாகும் ‘SK27’, அவரது திரைப்பயணத்தில் மற்றுமொரு புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளது. இந்தப் படத்தின் மூலம் சிவகார்த்திகேயன், இயக்குநர் ராம...