ஹபீபி - திரை விமர்சனம்


இஸ்லாமியர்களின் அழகான வாழ்வியலை சொல்லும் திரைப்படம்

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பகுதியில் இஸ்லாமியர்கள் ஏனைய சமூகத்தினரோடு ஒன்றிணைந்து வாழும் வாழ்வு மிக இயல்பான ஒன்று. அதைப்பதிவு செய்துள்ளார் இயக்குநர் மீரா கதிரவன்

1980- காலகட்டத்தில் கஸ்தூரிராஜா குடும்பம் நெசவு தொழில் செய்து ஏழ்மை நிரம்பிய வாழ்வை வாழ்ந்து வருகிறது. கஸ்தூரிராஜா குடும்பத்தின் கஷ்டம் கருதி அவரின் தம்பி வெளிநாடு செல்கிறார். சிறிது காலத்தில் கஸ்தூரி ராஜாவின் மகன் ஈஷா ஊரிலுள்ள காதலையும் தாண்டி வெளிநாடு செல்கிறார். அதன்பின் காலம் செல்லச்செல்ல கஸ்தூரிராஜா குடும்பத்தின் கஷ்டம் தீர்கிறது. ஆனால் அடுத்த பிரச்சனை நேர்கிறது. அது என்ன என்பதை நோக்கி படத்தின் மீதித்திரைக்கதை பயணிக்கிறது

கஸ்தூரிராஜா ஆழமான நடிப்பை வழங்கியுள்ளார். சில எமோஷ்னல் காட்சிகள் அவராலே டேக்ஆப் ஆகிறது. நாயகன் ஈஷா இன்னும் தேர்ந்த நடிப்பை கொடுத்திருக்கலாம். மாளவிகா மனோஜ் அட்டகாசமான நடிப்பைக் கொடுத்துள்ளார். தனாஸ்ரீ, அனுஸ்ரியா ராஜன், ஜெயஸ்ரீ பிந்துராஜ், அருள்குமார், ரேகா குமணன், இஸ்மத் பானு, மலர் கைசன், சன் சாகுல், மாஸ்டர் தீஹன், தீப்க்‌ஷா ஸ்ரீ உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் சிறப்பாக நடித்திருந்தனர்

இயல்பான பின்னணி இசையை வாசித்துள்ளார் சாம்.சி.எஸ். ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமி தரமான ஒளிப்பதிவைத் தந்துள்ளார்.

இஸ்லாமிய மக்களின் இயல்பான வாழ்வை தமிழ்சினிமாவில் இவ்வளவு அழுத்தமாக யாருமே பதிவு செய்யவில்லை. இயக்குநர் மீரா கதிரவனுக்கு கிடைத்த முதல் வெற்றி இது. திரைக்கதையிலும் க்ளைமாக்ஸிலும் சில போதாமைகள் இருந்தாலும், இது அவசியம் நாம் கொண்டாட வேண்டிய படைப்பு

Comments

Thandora Talkies

கானா உலகநாதன் முக்கிய வேடத்தில் — “ஐயம்” திரைப்படம்!

ராட்ட - சினிமா விமர்சனம்

படைத்தலைவன் திரைவிமர்சனம் - ஒரு பார்வை

சப்தம்’ படப்பிடிப்பில் அமானுஷ்ய விஷயங்களை உணர்ந்தேன்” ; நடிகர் ஆதியின் அதிர்ச்சி அனுபவம்